Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'சொல்வதெல்லாம் உண்மை' அணியினர் மீது புகார்..! லட்சுமி ராமகிருஷ்ணனின் விளக்கம்!

சொல்வதெல்லாம் உண்மை' லட்சுமி ராமகிருஷ்ணன் மீது சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தற்கொலை செய்த நாகப்பனின் மகள் ராதிகா இன்று புகார் கொடுத்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம், குமிழி, கன்னிவாக்கம், நாட்டேரி அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் ராதிகா. இவர் இன்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஜி தமிழ் தொலைக்காட்சியின் 'சொல்வதெல்லாம் உண்மை' நிகழ்ச்சியை நடத்தும் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் மீது புகார் கொடுத்துள்ளார். புகாரில் கூறியிருப்பதாவது: என்னுடைய தந்தை நாகப்பன். அவருக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். நாகப்பன், லாரி டிரைவராக கடந்த இருபது ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். என்னுடைய தந்தைக்கும், தாய் அம்பிகாவுக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு தனித்தனியாக வசித்தனர். நான் வாரம் ஒரு முறை என் தந்தையை சந்திப்பேன். இந்நிலையில் என்னுடைய அம்மா அம்பிகாவின் தங்கையான ரேணுகா, சொத்து பிரச்னை தொடர்பாக நாகப்பனை சந்தித்து பேசினார். அதற்கு உதவி செய்ய முடியாது என்று நாகப்பன் சொல்லி ரேணுகாவை திரும்ப அனுப்பி விட்டார். இதனால் நாகப்பன் மீது ரேணுகா, ஜி தமிழ் தொலைக்காட்சியின் 'சொல்வதெல்லாம் உண்மை' நிகழ்ச்சியை நடத்தும் லட்சுமி ராமகிருஷ்ணனிடம் புகார் செய்துள்ளதாக தெரிகிறது. கடந்த 5.8.2016ல் ரேணுகாவின் மகள்களுக்கு உதவி தொகை வழங்கப்போவதாகவும் அதற்கு கையெழுத்திட வேண்டும் என்று நாகப்பனை ரேணுகா ஜி தமிழ் தொலைக்காட்சிக்கு அழைத்து சென்றுள்ளார். இதன்பிறகு சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியின் நிர்வாகிகள் என்னையும், என்னுடைய அம்மா அம்பிகாவையும் அங்கு அழைத்தனர். அப்போது என்னுடைய தந்தை மற்றும் எங்களிடமிருந்த செல்போன் உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் அவர்கள் வாங்கி கொண்டு தனி அறையில் அடைத்து வைத்தனர். மேலும், ரேணுகா மற்றும் என் தந்தைக்கிடையே உள்ள குடும்ப பிரச்னையை சுமூகமான முறையில் தீர்த்து கொள்ள நாங்கள் உங்களுக்கு கவுன்சலிங் தருவதாக கூறி நாகப்பனிடம் விசாரித்தனர். அதை அவருக்கே தெரியாமல் ஒளிப்பதிவு செய்துள்ளனர்.  தன்னுடைய மகள்களுக்கு நாகப்பன் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக ரேணுகா புகார் கொடுத்ததாக கூறி லட்சுமிராமகிருஷ்ணன் அவரிடம் விசாரித்துள்ளார். அந்த பொய் புகாரை நாகப்பன் மறுத்தார்.

 அப்போது சட்டத்துக்கு புறம்பான விசாரணையில் நாகப்பனை லட்சுமிராமகிருஷ்ணன் கடுமையான மனம் வருந்ததக்க வார்த்தைகளால் திட்டியுள்ளார். அதை அவர், என்னிடம் சொல்லி அழுதார். அவருக்கு நான் ஆறுதல் கூறினேன். இந்நிலையில் 22.8.2016ல் அந்த நிகழ்ச்சியை ஒளிப்பரப்பினார்கள். உடனடியாக ஜி தமிழ் தொலைக்காட்சியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அதை ஒளிப்பரப்ப வேண்டாம் என்று கூறினோம். ஆனால் மீண்டும் 23.8.2016ல் மதியம் ஒளிபரப்பினார்கள். இதனால் என் தந்தையை அக்கம், பக்கத்தில் உள்ளவர்கள் கேவலமாக பார்த்தனர். அவமானத்தினால் மனஉளைச்சல் ஏற்பட்டு 23.8.2016ல் இரவு 8 மணிக்கு நாகப்பன் தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக என்னுடைய பாட்டி நாகம்மாள் பள்ளிகரனை போலீஸ் நிலையத்தில் 23.8.2016ல் புகார் கொடுத்தார். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே என்னுடைய தந்தை நாகப்பன் தற்கொலைக்கு காரணமான ரேணுகா, மற்றும் அவருடைய மகள்கள், சட்டத்துக்கு புறம்பாக விசாரணை நடத்திய லட்சுமிராமகிருஷ்ணன், மற்றும் உதவி மற்றும் ஒளிபரப்பு செய்த ஜி தமிழ் தொலைக்காட்சி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.  புகாரின் பேரில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

 

 லட்சுமி ராமகிருஷ்ணனிடம் கேட்டோம். "புகார் கொடுத்த ராதிகா, ஃப்ரோகிராம் முடிந்தவுடன் என்னுடன் செல்ஃபி எடுத்தார். நாகப்பனின் மனைவி அம்பிகா தான் நாகப்பனை அதிகமாக திட்டினார். நாகப்பன் இறந்தது எங்களுக்கும் வருத்தம் தான். அதை விட அந்த வீட்டில் உள்ள 5 பெண்களையும் அவர் தவறாக பயன்படுத்தி இருக்கிறார்.

 அம்பிகாவின் தங்கை ரேணுகா, சொன்ன தகவல் அதிர்ச்சிகரமானது. அவருடைய இரண்டு மகள்களுக்கு நாகப்பன், பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். சொத்து தொடர்பாக எங்களிடம் எதுவுமே சொல்லவில்லை. ரேணுகா எங்களிடம், நாகப்பனை அம்பிகாவுடன் சேர்த்து வைக்கவே வலியுறுத்தினார். ஆனால் அம்பிகா, நாகப்பனை ஏற்றுக் கொள்ளவில்லை. இந்த நிகழ்வு எல்லாம் ஒளிப்பரப்பானது. நாகப்பன், குழந்தைகளிடம் பாலியல் தொந்தரவு செய்ததை ஏற்றுக் கொள்ள முடியாது. எங்களுடைய டூயூட்டி போலீசுக்கு தகவல் கொடுப்பதும், குழந்தைகள் அமைப்பிடம் சொல்வதும் தான். ரேணுகாவை போலீசில் புகார் கொடுக்க சொன்னோம். நான் இந்த விவகாரத்தில் எந்த தவறும் செய்யவில்லை. தப்பு செய்தால் மட்டுமே பயப்பட வேண்டும். நாகப்பனின் முகத்தை கூட நான் பார்க்கவில்லை. நிகழ்ச்சிக்கு வரும் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழிகாட்டுவதே என்னுடைய கடமை. நாகப்பன் மீது பாதிக்கப்பட்ட குழந்தைகள் கூட புகார் கொடுக்க சொன்ன போது, ரேணுகா கேட்கவில்லை. பாதிக்கப்பட்ட ரேணுகா, அவர்களது மகள்களின் நிலைமை மோசமாக இருக்கிறது" என்றார்.

எஸ்.மகேஷ்  

எடிட்டர் சாய்ஸ்

ஜெர்சி மாடுகள், பிரேசில் காபி, மருத்துவமனை உறுதி! ஜெயலலிதா பற்றி தோழியின் நினைவலைகள்
placeholder

அதே மாதிரி ஜெயலலிதா தன்னுடைய 10 வயதில் சிவாஜி கணேசன் முன்னிலையில் மயிலாப்பூரில் செய்த நடன அரங்கேற்றப் படங்கள் முதல் அதற்குப் பிறகான அவரது சின்ன வயசுப் படங்களை நாங்கள் தொகுத்திருந்தோம். அதை 2012 ம் ஆண்டு, எனக்கு அவரை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்த போது கொடுத்தேன். அதைப் பார்த்து ரொம்ப சந்தோஷமாகிட்டாங்க. அந்தப் படத் தொகுப்பை, தன்னோட ஹேண்ட் பேக்ல வச்சுக்கிட்டாங்க. பத்திரமா வைத்துக் கொள்வதாகவும் சொன்னாங்க. சினிமாக்காரங்க என்றால் ஈஸியாக அணுகலாம் என்கிற திரையை உடைத்து, அவங்க தனி ரூட்டைப் போட்டு, அதை மத்தவங்க ஃபாலோ பண்ற அளவுக்கு வாழ்ந்து காட்டினாங்க. குறிப்பா, சினிமா விழாக்கள், நிகழ்ச்சிகளுக்கு போக மாட்டாங்க. 

அம்மாவிடமிருந்து போன் வந்தால்...!? - உருகும் வீணை காயத்ரி
placeholder

''சமீபத்தில் கொலை மிரட்டல் விட்டப் பையனால் அம்மாவை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. கடந்த ஜூலை 27-ம் தேதி சி.எம் ஆபீஸ்ல இருந்து போன் வந்தது. அம்மா உங்களை உடனே வரச்சொன்னதா சொன்னாங்க. நான் கொஞ்சமும் யோசிக்காமல் போய் நின்னேன். பொதுவாகவே நானும், அவங்களும்தான் தனியாகத்தான் பேசிப்போம். ஆனா, அன்றைக்கு, எல்லா அதிகாரிகளும், இருந்தாங்க. அவங்க முன்னாடி, 'எப்படி இருக்கீங்க' என கேட்டார். நான் பதில் சொல்லிவிட்டு, 'நவம்பர் மாதத்தோடு என்னோட டர்ன் முடியுது' என சொன்னேன். இதற்கு அவர், எல்லோருடைய முன்னிலையிலும், அடுத்த மூன்று வருஷத்துக்கும் நீங்களே துணை வேந்தரா இருங்க என சொல்லிவிட்டு, அவருக்கு பின்னால் இருக்கும் எல்லோரையும் பார்த்து மறுபடியும்  இதையே சொன்னார். அப்போதுதான் அவர்கிட்ட, 'நான் உங்களை சந்திக்க இரண்டு வருஷமாக முயற்சி செய்துட்டு இருந்தேன். இந்த கொலை மிரட்டல் காரணமாகத்தான் உங்களை சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சிருக்கு, நான் தனி மனுஷியாக இசை பல்கலைக்கழகத்தை நடத்தி வருகிறேன்' என சொன்னேன். உடனே, சம்பந்தப்பட்டவர்களை அழைத்து, அவங்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்து கொடுங்க என சொன்னார்.  'அடுத்த முறைப் பார்க்கும்போது உங்க முகத்துல சிரிப்பை மட்டும் தான் பார்க்கணும்' என ஆறுதல் சொன்னாங்க. அந்த வார்த்தை இன்னும் என் காதில் கேட்டுட்டே இருக்கு. அதுதான் நான் அவங்களை கடைசியாகப் பார்த்தது.  அதற்குப் பிறகு அவரை பார்க்க முடியவில்லை. அவர் சொன்னது போல அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கும்போதே அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுட்டாங்க. நான் இப்போ அடுத்த ஆர்டருக்காக காத்திட்டு இருக்கேன். இன்னும் ஆர்டர் என் கைக்கு வரவில்லை''

MUST READ