Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஓ.பி.எஸ் விசுவாசிக்கு கார்டனின் ‘கல்தா’!  -காஞ்சி களையெடுப்பு

காஞ்சிபுரத்தில் தொடர் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான முன்னாள் எம்.எல்.ஏ தண்டரை மனோகரன், கட்சிப் பதவிகளில் இருந்து ஓரம்கட்டப்பட்டுள்ளார்.‘ ஓ.பி.எஸ் துணையோடு கட்சி நிர்வாகிகளை ஆட்டிப் படைத்தார் மனோகரன். அவருடைய எதிர்முகாமில் இருந்தவர்களுக்குப் பதவி கொடுத்து அழகு பார்த்திருக்கிறார் அம்மா’ என உற்சாகத்தோடு பேசுகின்றனர் கட்சி நிர்வாகிகள். 

திருப்போரூர் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ தண்டரை மனோகரன் மீது ஏராளமான புகார்களை கார்டனுக்கு அனுப்பி வந்தனர் கட்சித் தொண்டர்கள். அவர் மீதான புகார்களின் மீது நடவடிக்கை எதுவும் எடுக்கப்பட்டதில்லை. பாலியல் புகாரில் தொடங்கி கட்சித் தொண்டர்களை அவமதிப்பது வரையில் காஞ்சி மாவட்டத்தில் மனோகரன் அளவுக்கு யாரும் குற்றச்சாட்டுக்கு ஆளானதில்லை. அவருக்குப் பின்னால் நிதி அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் ஆசி இருந்ததால், அனைத்துப் புகார்களில் இருந்தும் தப்பித்து வந்தார். “ கார்டன் உதவியாளர் முதற்கொண்டு அம்மா வரையில் எனக்குள்ள செல்வாக்கை யாராலும் பறிக்க முடியாது’ என நிர்வாகிகளை அதட்டி வந்தார் மனோகரன். இந்நிலையில், இன்று திருப்போரூர் ஒன்றிய செயலாளராக காஞ்சிபுரம் எம்.பி மரகதத்தின் கணவர் குமரவேலை நியமித்து உத்தரவிட்டுள்ளது அ.தி.மு.க தலைமை. “ இந்த நடவடிக்கையால் கட்சியில் இருந்து ஒட்டுமொத்தமாக ஓரங்கட்டப்பட்டுவிட்டார் மனோகரன்” என்கின்றனர் அ.தி.மு.கவினர். 

காஞ்சி மாவட்ட அ.தி.மு.க நிர்வாகி ஒருவர் நம்மிடம், “ சட்டசபைத் தேர்தலுக்கு முன்பாக ஓ.பன்னீர்செல்வத்தை அழைத்து வந்த பிரமாண்டக் கூட்டம் நடத்தினார் மனோகரன். ஐந்தாண்டு சாதனைகளுக்காக கூட்டப்பட்ட கூட்டம் என்றாலும், மீண்டும் திருப்போரூரில் போட்டியிட சீட் வாங்குவதற்காகத்தான் ஓ.பி.எஸ்ஸை அழைத்து வந்தார். ஓ.பி.எஸ்ஸின் தீவிர விசுவாசியாகவே தன்னைக் காட்டிக் கொண்டார். தேர்தல் நேரத்தில் ஓ.பி.எஸ் மீதான கார்டன் விசாரணை தீவிரமடைந்ததால், தண்டரை மனோகரனுக்குப் பதிலாக கோதண்டபாணிக்கு சீட் கொடுத்தார் முதல்வர். இதை மனோகரன் ஆதரவாளர்கள் விரும்பவில்லை. திருப்போரூர் ஒ.செ பதவியை தன்னுடைய விசுவாசியான பொன்னுரங்கத்திற்குக் கொடுத்து, தனது அலுவலகத்திலேயே அமர வைத்துக் கொண்டார் மனோகரன். 

அதேநேரம், கட்சியில் தீவிரமாக வளர்ந்து கொண்டிருந்த குமரவேலுக்கு எதிராக, கார்டனுக்கு தினம்தினம் புகார்களை அனுப்பிக் கொண்டிருந்தனர் மனோகரன் ஆதரவாளர்கள். அதையும் தாண்டி, குமரவேலின் மனைவி மரகதத்திற்கு எம்.பி சீட் கிடைத்ததையும் மனோகரனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இந்தநிலையில், இன்று அறிவிக்கப்பட்ட புதிய நிர்வாகிகள் பட்டியிலில், குமரவேலுக்கு திருப்போரூர் ஒன்றிய செயலாளர் பொறுப்பு வழங்கியிருக்கிறார் அம்மா. தேர்தல் முடிந்த நேரத்திலேயே மனோகரனின் மாவட்ட செயலாளர் பதவியை திருக்கழுகுன்றம் ஆறுமுகத்திற்கு வழங்கியது கட்சித் தலைமை. இப்போது மனோகரனுக்கும் பதவியில்லை. அவருடைய ஆதரவாளர்களுக்கும் பதவியில்லை. காஞ்சி மாவட்டமே இப்போதுதான் சுத்தமாக இருக்கிறது. அந்தளவுக்கு காண்ட்ராக்ட், கமிஷன், பாலியல் புகார் என எல்லை மீறிச் செயல்பட்டார் மனோகரன்” எனக் கொந்தளிக்கின்றனர். 

‘ பதவியில் இருந்தபோது, கட்சி விசுவாசிகளுக்கு மதிப்பு கொடுத்திருந்தால், மனோகரனுக்கு இப்படி நிலைமை வந்திருக்காது’ என ஆதங்கப்படுகின்றனர் காஞ்சி மாவட்ட அ.தி.மு.க நிர்வாகிகள். 

-ஆ.விஜயானந்த்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

பரப்பன அக்ரஹாரா சிறை முதல் அப்போலோ அறை வரை...! - ஜெயலலிதாவின் இரண்டு வருட டைம்லைன் #2YearsOfBangaloreVerdict
placeholder

தமிழகமே எதிர்பார்த்துக்கொண்டிருந்த வழக்கில், இரண்டு ஆண்டுகளுக்கு முன் இதே நாளில்தான் தீர்ப்பு வந்தது. வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாகத் தொடரப்பட்ட அந்த வழக்கில், அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு, நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்து, பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. தீர்ப்பு வந்து 731 நாட்கள் ஆகிவிட்டன. அந்த வழக்கிலிருந்து அவர் விடுதலையும் செய்யப்பட்டு, அதன்பின் ஒரு பொதுத் தேர்தலில் மீண்டும் வென்று முதல்வராகவும் பொறுப்பேற்றுவிட்டார். எல்லாம் அவருக்கு நன்றாகப் போய்க்கொண்டிருந்தபோது, ஒரு வியாழக்கிழமை இரவு உடல்நிலை சுகவீனம் அடைந்து அப்போலோவில் அனுமதிக்கப்பட்டார்.

MUST READ