Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சாட்டை எடுத்த ஜெ... சரிந்த விக்கெட்டுகள்.!

அ.தி.மு.க வில் எந்த பதவியும் யாருக்கும் நிரந்தரம் இல்லை என்பது அந்தக் கட்சியின் அடிமட்ட தொண்டன் வரை அறிந்த விஷயம். ஆனால் சில பதவிகளில் மட்டும், கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக சிலர் சத்தம் இல்லாமல் ஒட்டிகொண்டிருந்ததைப் பார்த்து மற்ற கட்சி நிர்வாகிகளுக்கு பொறாமை இருக்கத்தான் செய்தது. அப்படி அதிகம் களை எடுப்பு நடக்காத பதவியாக இருந்தது, இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை பதவிகள். 2011 ஆண்டு அ.தி.மு.க ஆட்சிக்கு வருவதற்கு முன்புதான் இந்த அமைப்பே உருவாக்கபட்டது.
 

ஜெ விருப்பத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த அமைப்பிற்கு நிர்வாகிகள் நியமனத்தில், அ.தி.மு.க வின் முன்னணி தலைவர்களின் வாரிசுகளை உள்ளே கொண்டுவந்தனர். இந்த அமைப்பிற்கு ஜெ.விடம் முக்கியத்துவம் இருந்ததால், இதில் பதவி பெற  அனைத்து மாவட்டங்களிலும், கடும் போட்டியே இருந்தது. இந்நிலையில் கொஞ்சம் கொஞ்சமாக இந்த பதவியின் முக்கியத்துவம் குறைந்து வந்தது. தற்போது, இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறையின் மாவட்ட பொறுப்பில் இருந்த ஐந்து பேரை அதிரடியாக நீக்கியுள்ளார்  ஜெயலலிதா. புதுக்கோட்டை, வேலுார் உள்ளிட்ட மாவட்டங்களின் மாவட்ட செயலாளர்கள் உட்பட ஐந்து பேரை இரண்டு தினங்களுக்கு முன் நீக்கியுள்ளார் அவர்.

ஏற்கனவே இந்த அமைப்பின் சில மாவட்ட நிர்வாகிகள் நீக்கப்பட்டு இருந்தனர். எனவே காலியாக இருந்த அனைத்து பதவிகளுக்கும் சேர்த்து 13 பேரை புதிய மாவட்டச் செயலாளராக நியமித்துள்ளார் ஜெ. இதில் ஒன்பது மாவட்டங்களின் செயலாளர்கள் புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். தேர்தல் நேரத்தில் வேட்பாளர்களுக்கு சரியாக ஒத்துழைக்கவில்லை என்றும், சில மாவட்டச் செயலாளர்கள் செயல்பாடுகள் இல்லாமல் இருந்ததாலும் தான் இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளார் ஜெ. என்கின்றனர்.


அதே நேரம் வேறு ஒரு தகவலும்  அ.தி.மு.க வட்டாரங்களில் உலவுகிறது.“அ.தி.மு.க தலைமைக்கு தற்போது தலைவலியாக மாறியுள்ள சசிகலா புஷ்பா, இதே இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறையின் மாநில நிர்வாகியாக இருந்தபோது, அவர் தனக்கு வேண்டிய சிலருக்கு இந்த அமைப்பில் மாவட்ட பொறுப்பை போட்டு  கொடுத்தாக அ.தி.மு.க தலைமைக்கு புகார் சென்றுள்ளது. அது ஜெ.வை உஷ்ணமாக்க , சசிகலா புஷ்பா சம்பந்தமாக எந்த ஆட்களும் கட்சி பொறுப்பில் இருக்ககூடாது என ஜெ. சாட்டை எடுத்ததால், இந்த விக்கெட்டுகள் வீழ்ந்து இருப்பதாக” கூறுகின்றனர் அ.தி.மு.க வினர்.
 

-அ.சையது அபுதாஹிர்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ