Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சென்னையில் ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் வசீகரன் திடீர் கைது

ஜெயலலிதாவின் பொய்யான தேர்தல் அறிக்கைகள் என்கிற வாசகங்கள் அடங்கிய துண்டுப்பிரசுரத்தை தீயிட்டு கொளுத்திய ஆம் ஆத்மி கட்சியின் தமிழக ஒருங்கிணைப்பாளர் வசீகரன் உள்பட 40 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

ஆம் ஆத்மி கட்சியின் தமிழக ஒருங்கிணைப்பாளர் வசீகரன் கடந்த 10 நாட்களாக பெரவள்ளூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் உண்ணாவிரதம் இருந்து வந்தார். தமிழகத்தில் லோக் அயுக்த - வை கொண்டு வரவேண்டும் என்பது அவரது கோரிக்கை. ஆனால், தமிழக அரசு இவரது உண்ணாவிரதப் போராட்டத்தை கண்டுகொள்ளாமல் இருந்து வந்தது.

இந்த நிலையில், போயஸ்கார்டனை முற்றுகையிடப்போவதாக இன்று அறிவித்தார். அதையடுத்து, போலீஸார் அவரை கைது செய்ய வந்தனர். மக்களை ஏமாற்றும் முதல்வர் ஜெயலலிதாவின் பொய்யான தேர்தல் அறிக்கைகள் என்கிற வாசகங்கள் அடங்கிய துண்டுப்பிரசுரத்தை வசீகரனின் ஆதரவாளர்கள் தீயிட்டு கொளுத்தினார். அப்போது போலீஸாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதைதொடர்ந்து வசீகரனும் அவரது ஆதரவாளர்கள் 40 பேர்களும் கைது செய்யப்பட்டனர்.


 - ஜெ. அன்பரசன்
படங்கள்: பி.சரவணகுமார்

 .

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

சிவாஜி குறித்து எம்.ஜி.ஆரின் சிலாகிப்பு! #HBDSivaji #NadigarThilagam
placeholder

ல பெண்களைக் கெடுத்துப் பொய் சொல்லும் பாத்திரம் அது. ஆனால், ஒவ்வொரு கட்டத்திலும் மக்களைத் தன்பால் இழுக்கு மளவுக்கு, ‘ஆங்கிலப் பாணி’ என்று உயர்த்திச் சொல்லப்படும் தகுதியோடு நடித்துப் புகழ்பெற்றார். இன்று, வேறு கோணங்களில் நின்று பார்ப்பவர்கள் சிலர், “ஆங்கிலப் படங்களைப் பார்த்து, அந்தப் பாத்திரங்களைப் போலவே, அந்தப் பாணியிலேயே நடிக்கிறார்’ என்று கூறுகிறார்கள். ஆனால், அந்தக் காலத்தில் (‘திரும்பிப் பார்’ படமெடுத்த காலத்தில்) சிவாஜி அவர்கள் அதிக ஆங்கிலப் படங்களை எப்படிப் பார்த்திருக்க முடியும்? இப்போது ஆங்கிலப் படங்களில் நடிக்கும் நடிகர்கள் அப்போது எங்கே இருந்தார்கள்? இப்போது வருகிற படங்களைப் போல் அப்போது வருவதுண்டா? ஏற்று நடிக்கும் பாத்திரங்களுக்கு அவர் அற்புதமான மெருகேற்றி ஒப்புயர்வற்று நடிக்கும் போது, அந்த நடிப்புக்குப் பிறப்பிடமான பயிற்சியையும், தேர்ச்சியையுமல்லவா நாம் போற்ற வேண்டும்.

உங்க ஏரியா எப்படி இருக்கு? உள்ளாட்சி சர்வே முடிவுகள்..!

MUST READ