Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

' ஏழைங்க நாங்க... அவங்ககிட்ட இருந்து காப்பாத்துங்கம்மா..!’  -ஓர் அ.தி.மு.க தொண்டனின் வாட்ஸ்அப் புலம்பல்

சென்னை மாவட்ட அ.தி.மு.கவில் நிர்வாகிகளை அதிரடியாக மாற்றி உத்தரவிட்டிருக்கிறார் முதல்வர் ஜெயலலிதா. ' பணத்தை வாங்கிக் கொண்டு பதவியை நிரப்பிவிட்டார்கள்' எனக் குற்றம் சுமத்துகின்றனர் பதவி கிடைக்காத அ.தி.மு.கவினர். 

தென்சென்னை வடக்கு மாவட்டத்தில் அ.தி.மு.க நிர்வாகிகள் மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று போயஸ் கார்டனில் புகார் அளிக்கச் சென்றனர் கட்சிக்காரர்கள் சிலர். ' வடக்கு மாவட்டத்தில் தேவையற்ற சிலருக்குப் பதவி வழங்கப்பட்டுள்ளது. உண்மையான கட்சிக்காரர்களைப் புறக்கணித்துவிட்டார் வடக்கு மாவட்ட செயலாளர் கலைராஜன். பணம் கொடுத்தவர்களுக்கு மட்டுமே பதவி கொடுத்திருக்கிறார். உள்ளாட்சித் தேர்தல் நேரத்தில் நிர்வாகிகளை மாற்றியதால், பலரும் அதிருப்தியில் உள்ளனர். நிர்வாகிகள் மாற்றத்தை ரத்து செய்ய வேண்டும்' என்று புகார் மனுவில் தெரிவித்துள்ளனர். 

இதுகுறித்துப் பேசும் கலைராஜன் ஆதரவாளர்களோ, " கட்சிக் கூட்டங்களுக்கு செலவு செய்ய முடியாதவர்களுக்கெல்லாம், பதவி கொடுத்திருக்கிறார் முதல்வர். உண்மையான கட்சிக்காரர்களை அடையாளம் கண்டு பதவி போடப்பட்டிருக்கிறது. இதைக் கெடுப்பதற்கென்றே சிலர் களமிறங்கியுள்ளனர். இவர்களின் பின்னால் இருந்து இயக்குவதே, தேர்தலில் தோற்றுப் போன முன்னாள் அமைச்சர் ஒருவரும் தற்போதைய எம்.எல்.ஏவும்தான். பதவியில் இருப்பவர்களுக்கே தொடர்ந்து பதவி கொடுக்க இது என்ன தி.மு.கவா?" எனக் கொந்தளிக்கின்றனர். இந்நிலையில், ' உங்களிடம் புகார் சொல்ல வரும் புல்லுருவிகளை நம்பாதீர்கள் அம்மா' என்ற ரீதியில் அ.தி.மு.க கட்சிக்காரர்களிடையே வாட்ஸ்அப் வீடியோ ஒன்று வலம் வருகிறது. அந்த வீடியோவில், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி 62-வது வட்ட செயலாளர் ஆ.வா.செல்வக்கண்ணன் என்பவர் பேசியிருக்கிறார். 

அந்த வீடியோவில், " அம்மா..1972-ம் ஆண்டில் கட்சியில் இணைந்தேன். தொடர்ந்து கழகப் பணியாற்றி வருகிறேன். 1994-ல் கட்சியின் வட்டச் செயலர் தேர்தலில் நின்று வெற்றி பெற்றேன். 96-ம் ஆண்டு போயஸ் கார்டன் இல்லத்தில் அம்மாவைக் கைது செய்த நேரத்தில், கைதான கட்சிக்காரர்களில் நானும் ஒருவன். காவல்நிலையத்திற்குக் கொண்டு செல்லப்பட்ட 44 பேரில் 12-வது ஆளாக நான் இருக்கிறேன். என்னை திருச்சி சிறையில் அடைத்தார்கள். 2011-ல் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி 62-வது வட்டத்தில் தேர்தல் பொறுப்பாளராக என்னை நியமித்தீர்கள். அம்மாவின் செல்வாக்கால் அந்த வட்டத்தில் வெற்றி பெற்றேன். தற்போது நடக்க இருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் 100 சதவீத வெற்றியைப் பெற வேண்டும் என்பதற்காக இரவு பகல் பாராமல் கழகப் பணியாற்றி வருகிறோம். 

 

 

கலைராஜன் பரிந்துரை செய்ததால், இந்தப் பதவியை எனக்கு வழங்கியிருக்கிறார் அம்மா. பத்து பைசாகூட செலவு செய்ய முடியாத, இந்த ஏழைத் தொண்டனுக்கு 62-வது வார்டு வட்டக் கழக செயலாளராக பதவி கொடுத்திருக்கிறார் அம்மா. அதற்காக, அம்மாவின் பொற்பாதங்களில் கோடானகோடி மலர்களைக் காணிக்கையாக்குகிறேன். சென்னை மாவட்ட கட்சிக்காரர்களுக்கு நான் எவ்வளவு ஏழ்மையானவன் என்று தெரியும். ஆனால், போயஸ் கார்டனில் அம்மாவைத் தேடி வந்து தவறான தகவல்களைத் தருகின்றனர் சில புல்லுருவிகள். அவர்கள் மீது நடவடிக்கை எடுங்கள் அம்மா. எங்களைப் போன்ற ஏழைக் கட்சிக்காரர்களுக்குப் பதவி போடும்போதெல்லாம் இதுதான் நடக்கிறது. உங்களையே நம்பியிருக்கிற உங்கள் பிள்ளைகளைக் காப்பாற்றுங்கள் அம்மா..!" என வேண்டுகோள் வைத்திருக்கிறார் செல்வக்கண்ணன். 

-ஆ.விஜயானந்த் 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

'சாக்கடையில் கலந்த ஜெயலலிதா ரத்தம்!'   -எம்பால்மிங் சீக்ரெட்டை உடைக்கும் மருத்துவர்கள் #VikatanExclusive
placeholder

'இருதயம் செயலிழந்து போனதற்கான காரணம் என்ன? திடீரென்று செயலிழந்து நின்று போன இருதயத்தை ஏன் மீண்டும் செயல்பட வைக்க இயலவில்லை? உலகத் தரம் வாய்ந்த உபகரணங்களையும் நிபுணத்துவத்தையும் தோல்வியைத் தழுவச் செய்த காரணங்கள் யாவை?' என்ற கேள்விகளையே மருத்துவர் பீலேயும் அப்போலோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களும் தமிழக-இந்திய மருத்துவ உலகத்தாரும் தமிழ்நாடு-மத்திய அரசுகளும் கேட்டிருக்க வேண்டும். அதற்கான பதிலைக் கண்டறிய இயன்றளவில் முயற்சியை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கான ஒரு சிறிய துரும்பு அளவிலான முயற்சியைக்கூட இவர்கள் எவரும் மேற்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

Advertisement

MUST READ

Advertisement
[X] Close