Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அதிகாரிகள் குடியிருப்பும் அபேஸான சந்தனமரமும்! வேலூர் கடத்தல்

உயர் அதிகாரிகளின் அலுவலகம், குடியிருப்புகள் பகுதியில் இருந்த சந்தனமரம் வெட்டி கடத்தப்பட்ட சம்பவம் வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் அண்ணாசாலை (இதற்கு முன்பு அண்ணாசாலை ஆபிஸர்ஸ் லேன் என்று அழைக்கப்பட்டது) வி.ஐ.பி.க்கள் குடியிருக்கும் பகுதி. இங்கு கலெக்டர் பங்களா, அரசு சுற்றுலா மாளிகை, டி.ஐ.ஜி மற்றும் டி.எஸ்.பி. அலுவலகங்கள், நீதிபதிகள் குடியிருப்பு, வனத்துறை அலுவலர்கள் குடியிருப்பு என உயர் அதிகாரிகள் அலுவலகம், குடியிருப்புகள் உள்ளன. இதனால் இங்கு பரபரப்புக்கும், பாதுகாப்புக்கும் பஞ்சமிருக்காது.

இந்தபகுதியில் உள்ள அரசு சுற்றுலா மாளிகை வளாகத்தில் சந்தன மரங்கள் உள்ளன. அதை நீண்ட நாட்களாக நோட்ட மிட்ட கடத்தல் கும்பல், நுழைவு பகுதியில் உள்ள ஒரு சந்தனமரத்தை அடியோடு வெட்டி எடுத்துச் சென்றுள்ளது. யார் கண்களிலும் சிக்காமலிருக்க அவசரகதியில் கிளைகளை அங்கேயே போட்டு விட்டு அடி மரத்தை மட்டும் அந்த கும்பல் கடத்தியுள்ளது. இன்று காலை சந்தன மரம் வெட்டப்பட்டதைப் பார்த்த காவலாளி, உடனடியாக உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். இதுகுறித்து பாகாயம் போலீசிலும் புகார் செய்யப்பட்டது. போலீஸார், வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். கலெக்டர் பங்களா அருகே சம்பவம் நடந்ததால் கலெக்டர் ராமனும் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டார். மரத்தின் மதிப்பு 4 லட்சம் ரூபாயிலிருந்து 5 லட்சம் வரை இருக்கும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.

இதுகுறித்து போலீஸ் வட்டாரங்கள் கூறுகையில், "விஐபி பகுதியில் எப்போதும் போலீஸார் பாதுகாப்பு பணியில் இருப்பார்கள். ஆனால் விநாயகர் சதூர்த்தியையொட்டி அங்குள்ள சில போலீஸாருக்கு பாதுகாப்பு பணி வழங்கப்பட்டுள்ளது. இதையறிந்த கடத்தல் கும்பல் சந்தன மரத்தை வெட்டி கடத்தி சென்றுள்ளது. கடத்தல் கும்பல் அவசரகதியில் மரத்தை கொண்டு சென்றுள்ளனர். கடத்தல் கும்பலை தேடி வருகிறோம்" என்றனர்.

'இந்த பகுதியில் சந்தன மரம் வெட்டி கடத்தப்படுவது இது முதல் தடவையல்ல. ஏற்கனவே இதுபோல இரண்டு சம்பவங்கள் அங்கு நிகழ்ந்துள்ளன. அந்த சம்பவத்தில் இதுவரை யாரும் கைது செய்யப்படாத நிலையில் மீண்டும் ஒரு சம்பவம் நடந்துள்ளது. எனவே பழைய சம்பவத்தில் ஈடுபட்ட கடத்தல் கும்பலே இந்த சம்பவத்திலும் ஈடுபட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது' என்கின்றனர் விவரம் தெரிந்தவர்கள்.  

எஸ்.மகேஷ்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

பரப்பன அக்ரஹாரா சிறை முதல் அப்போலோ அறை வரை...! - ஜெயலலிதாவின் இரண்டு வருட டைம்லைன் #2YearsOfBangaloreVerdict
placeholder

தமிழகமே எதிர்பார்த்துக்கொண்டிருந்த வழக்கில், இரண்டு ஆண்டுகளுக்கு முன் இதே நாளில்தான் தீர்ப்பு வந்தது. வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாகத் தொடரப்பட்ட அந்த வழக்கில், அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு, நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்து, பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. தீர்ப்பு வந்து 731 நாட்கள் ஆகிவிட்டன. அந்த வழக்கிலிருந்து அவர் விடுதலையும் செய்யப்பட்டு, அதன்பின் ஒரு பொதுத் தேர்தலில் மீண்டும் வென்று முதல்வராகவும் பொறுப்பேற்றுவிட்டார். எல்லாம் அவருக்கு நன்றாகப் போய்க்கொண்டிருந்தபோது, ஒரு வியாழக்கிழமை இரவு உடல்நிலை சுகவீனம் அடைந்து அப்போலோவில் அனுமதிக்கப்பட்டார்.

MUST READ