Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

புகார் எதிரொலி ஆக்கிரமிப்புகளை இடிக்க தொடங்கியது எஸ்.ஆர்.எம்.!

காஞ்சிபுரம் மாவட்டம் பொத்தேரியில் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்துக்குச் சொந்தமாக சுமார் 450 ஏக்கர் பரப்பளவில் பல்வேறு கல்வி நிறுவனங்கள் இயங்கி வருகிறது. இது தொடர்பாக கல்வி கொள்கைக்கு எதிரான மக்கள் இயக்கம், ஆர்.டி.யை மூலம் சில தகவல்களைப் பெற்றுக்கொண்டது. இதனையடுத்து, பொத்தேரி ஏரி, பாசன கால்வாயை எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழகம் தரப்பில் ஆக்கிரமித்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழகம் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக புகார் எழுந்தது. இது பற்றி விரிவான விவரங்கள், முதல்வர் ஜெயலலிதாவிற்கு அனுப்பட்டதாம். அதனைப் பார்த்த அவர், டென்ஷன் ஆகிவிட்டாராம். இதனையடுத்து சம்மந்தபட்டப அதிகாரிகளை அழைத்து, டோஸ் விட்டாராம். அதனைத் தொடர்ந்து, எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழக ஆக்கிரமிப்பு கட்டிடங்களை அதிரடியாக அரசே இடிக்கப்போவதாகத் தகவல் பரவியது.

 

இந்நிலையில், அரசு அதிரடி நடவடிக்கை எடுப்பதற்கு முன்னதாக, இன்று எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழக தரப்பினர், அவசர அவசரமாக ஒரு காரியம் செய்தனர். அவர்கள் ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட கட்டிடங்களை அவசரகதியில் இடித்து வருகிறார்கள். இதில் முதல் கட்டமாகச் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையையொட்டியும், எஸ்.ஆர்.எம். வளாகத்தின் முன் பக்கம் ஜே.சி.பி இயந்திரம் மூலம் இடிக்கப்பட்டது. இதுபோல், இன்னும் பல கட்டிடங்கள் அடுத்தடுத்து இடிக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனை படம் எடுக்கச் சென்ற ஜுனியர் விகடன் நிருபர் ஜெயவேலை பல்கலைக்கழக ஆட்கள், சிறைப்பிடித்துள்ளனர். மேலும், அவரிடமிருந்து கேமராவை பிடுங்கி படங்களையும் அழித்து  வருகிறார்கள். 

கடைசியாக கிடைத்த தகவல் படி, நிருபர் ஜெயவேலு சிறைப்பட்ட விவகாரத்தை வடக்கு மண்டல ஐ.ஜி.  செந்தாமரைக்கண்ணனிடம் தெரிவித்தோம். உடனே அவர் சம்மந்தப்பட்ட ஏரியா போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டரை அழைத்து ஜெயவேலுவை மீட்டுவர சொல்லியிருக்கிறார். அடுத்த சில நிமிடங்களில் இன்ஸ்பெக்டர் ஸ்பாட்டுக்கு சென்று ஜெயவேலுவை மீட்டு பத்திரமாக எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக வாசலுக்கு அழைத்துவிட்டாராம். 

- ஜெயவேல்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

திருப்பதியிலிருந்து திருமலைக்கு நடந்து செல்பவர்களின் கவனத்துக்கு..! 

MUST READ