Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சென்னை போலீஸ் கமிஷனராக ஜார்ஜ் மீண்டும் நியமனம்!

சென்னை பெருநகர புதிய காவல்துறை ஆணையராக எஸ்.ஜார்ஜ் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். உடனடியாக வேப்பேரியில் உள்ள காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் அவர் பொறுப்பேற்றுக் கொண்டார்.

தமிழக காவல்துறை தலைவராக இருந்த அசோக்குமார் நேற்று திடீரென விருப்பு ஓய்வில் சென்றார். இதைத் தொடர்ந்து சென்னை மாநகர காவல்துறை ஆணையராக இருந்த டி.கே.ராஜேந்திரன் மாற்றப்பட்டு, உளவுத்துறை டிஜிபியாக நியமிக்கப்பட்டார். மேலும், தமிழக காவல்துறை தலைவராகவும்(பொறுப்பு) நியமிக்கப்பட்டார்.

இதைத் தொடர்ந்து, சென்னை மாநகர காவல்துறை ஆணையர் பதவி காலியாக இருந்தது. இந்த பதவிக்கு நிர்வாக பிரிவு ஏடிஜிபியாக இருக்கும் சஞ்ஜய் அரோரா, சிறைத்துறை தலைவராக இருக்கும் விஜயகுமார் ஆகியோர் நியமிக்கப்படலாம் என்று கூறப்பட்டது. ஆனால், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத் தலைவராக இருந்த எஸ்.ஜார்ஜ் சென்னை பெருநகர காவல்துறை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை முதன்மை செயலாளர் அபூர்வா இன்று பிறப்பித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து வேப்பேரியில் உள்ள காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்கு ஜார்ஜ் வந்தார். பின்னர் ஆணையராக அவர் பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு காவல்துறை உயரதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

மேலும், போக்குவரத்து தலைமை கண்காணிப்பு அதிகாரியாக அருணாசலம் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜார்ஜ் கடந்து வந்த பாதை 

2012ம் ஆண்டு செப்டம்பர் 19ஆம் தேதி சென்னை மாநகர காவல்துறை ஆணையராக ஜார்ஜ் நியமிக்கப்பட்டார். தொடர்ந்து அப்பதவியில் நீடித்து வந்து ஜார்ஜ் கடந்த நாடாளுமன்றத் தேர்தலையொட்டி தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில், சில மாதங்களுக்குப் பிறகு மீண்டும் மாநகர ஆணையர் பதவியில் நியமிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து, சென்னை பெருநகர காவல்துறை ஆணையராக இருந்த ஜார்ஜ் கடந்த 2015ஆம் ஆண்டு அக்டோபர் 9ஆம் தேதி தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத் தலைவராக நியமிக்கப்பட்டார். மேலும் கூடுதலாக சிறைத்துறையையும் கவனித்து வந்தார். சுமார் 9 மாதங்கள் சீருடைப் பணியாளர் தேர்வாணையராக இருந்த ஜார்ஜ், தற்போது சென்னை பெருநகர காவல்துறை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close