Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள்!

சென்னை: சென்னை, விழுப்புரம், கடலுார், திருவண்ணாமலை ஆகிய 4 மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட 8 ஐ.ஏ.எஸ்.அதிகாரிகளை தமிழக அரசு இடமாற்றம் செய்துள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை 27 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. இந்நிலையில், சென்னை, விழுப்புரம், கடலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளராக ஏ.ஞானசேகரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக, தமிழக அரசின் தலைமைச் செயலர் ராம மோகன ராவ் பிறப்பித்துள்ள உத்தரவில், ''பி.மகேஸ்வரி-சென்னை மாவட்ட ஆட்சியர் (உள்துறை, மதுவிலக்கு-ஆயத்தீர்வைத் துறை முன்னாள் இணைச் செயலாளர்), எல்.சுப்பிரமணியன்-விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் (தொழிலாளர் நலத் துறை ஆணையாளர்), டி.பி.ராஜேஷ்-கடலூர் மாவட்ட ஆட்சியர் (பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் நலத் துறை இயக்குநர்), பிரசாந்த் எம்.வாட்நேரே-திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் (நிதித் துறை துணைச் செயலாளர்).

மேலும், ஏ.ஞானசேகரன்-கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் (கடலூர் மாவட்ட ஆட்சியர்), வி.ஜெயசந்திர பானு ரெட்டி-தமிழ்நாடு குடிநீர் வழங்கல்-கழிவுநீரகற்று வாரிய இணை நிர்வாக இயக்குநர் (லால்குடி துணை ஆட்சியர்), மந்திரி கோவிந்த ராவ்-சென்னை பெருநகர மாநகராட்சி துணை ஆணையாளர்-கல்வி (கும்பகோணம் துணை ஆட்சியர்), எஸ்.கோபால சுந்தர ராஜ்-சென்னை பெருநகர மாநகராட்சி மண்டல துணை ஆணையாளர்-தெற்கு (தூத்துக்குடி துணை ஆட்சியர்) நியமனம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ