Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தமிழகம் வந்தாள் காவிரி!

சென்னை: கர்நாடகா திறந்துவிட்ட காவிரி நீர், தமிழகம் வந்தடைந்தது. இன்று இரவுக்குள் அது மேட்டூர் அணையை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காவிரி நீர் பங்கீடு தொடர்பாக கடந்த மாதம் 23-ம் தேதி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால மனு ஒன்றை தாக்கல் செய்தது. அந்த மனுவில், "நடப்பு பாசன ஆண்டில் ஜூன் முதல் ஆகஸ்ட் வரை தமிழகத்துக்கு தரவேண்டிய மீதமுள்ள 50.052 டி.எம்.சி. தண்ணீரை உடனடியாக திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும்" என்று கூறப்பட்டு இருந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, யு.யு.லலித் ஆகியோர் கொண்ட அமர்வு, இரு மாநிலங்களும் ஒருமைப்பாட்டுடன் வாழ வேண்டும். ‘வாழு, வாழ விடு’ என்ற அடிப்படையில் விட்டுக்கொடுத்து நடந்து கொள்ள வேண்டும். காவிரி நடுவர் மன்றம் வழங்கிய தீர்ப்புக்கு கர்நாடகம் கட்டுப்பட வேண்டும். சட்டத்தின் அடிப்படையில் இல்லையென்றாலும் கர்நாடகம் நல்லிணக்க அடிப்படையில் செயல்பட்டு, தமிழகத்துக்கு உரிய தண்ணீரை வழங்க முயற்சிக்க வேண்டும். இது குறித்து மூத்த வழக்கறஞர் பாலி நாரிமன் கர்நாடகத்துக்கு அறிவுரை வழங்க வேண்டும்" என்று அறிவுறுத்தினர். மேலும், காவிரியில் நாள்தோறும் 15 ஆயிரம் கனஅடி வீதம் 10 நாட்களுக்கு கர்நாடகா அரசு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்றும் உத்தரவிட்டு இருந்தனர்.

இதை தொடர்ந்து, கனத்த இதயத்துடன் தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது என்று கர்நாடக முதல்வர் அறிவித்தார். அதன்படி, கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து விநாடிக்கு 10 ஆயிரம் கன அடி நீரும், கபினி அணையில் இருந்து 5 ஆயிரம் கன அடி நீரும் திறந்துவிடப்பட்டது. கர்நாடக அணைகளில் இருந்து நீர் திறக்கப்பட்டதை எதிர்த்து கிருஷ்ணராஜசாகர் அணை அருகே கர்நாடக விவசாயிகள் தீப்பந்தங்களை ஏந்தி அணைகளை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் 100 பேரை கர்நாடக போலீசார் கைது செய்தனர். மேலும், தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் 4வது நாளாக தொடர்ந்து போராட்ங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கர்நாடக அணைகளில் இருந்து கடந்த 2 நாட்களுக்கு முன் திறக்கப்பட்ட காவிரி நீர், தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு இன்று வந்து சேர்ந்தது. பிலிகுண்டுலு வரும் நீரின் அளவு குறித்து மத்திய நீர்வள ஆணைய அதிகாரிகள் தற்போது ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். மேலும், பிலிகுண்டுலு வந்தடைந்த காவிரி நீரானது, அடுத்த 8 மணி நேரத்தில் (இன்று இரவு) மேட்டூர் அணையை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

பரப்பன அக்ரஹாரா சிறை முதல் அப்போலோ அறை வரை...! - ஜெயலலிதாவின் இரண்டு வருட டைம்லைன் #2YearsOfBangaloreVerdict
placeholder

தமிழகமே எதிர்பார்த்துக்கொண்டிருந்த வழக்கில், இரண்டு ஆண்டுகளுக்கு முன் இதே நாளில்தான் தீர்ப்பு வந்தது. வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாகத் தொடரப்பட்ட அந்த வழக்கில், அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு, நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்து, பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. தீர்ப்பு வந்து 731 நாட்கள் ஆகிவிட்டன. அந்த வழக்கிலிருந்து அவர் விடுதலையும் செய்யப்பட்டு, அதன்பின் ஒரு பொதுத் தேர்தலில் மீண்டும் வென்று முதல்வராகவும் பொறுப்பேற்றுவிட்டார். எல்லாம் அவருக்கு நன்றாகப் போய்க்கொண்டிருந்தபோது, ஒரு வியாழக்கிழமை இரவு உடல்நிலை சுகவீனம் அடைந்து அப்போலோவில் அனுமதிக்கப்பட்டார்.

MUST READ