Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தேவாலய தேர் பவணியில் மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி!

நெல்லை: நெல்லை மாவட்டம் உவரியில் நடந்த தேவாலய தேர் பவணியின்போது, மின்சாரம் தாக்கியதில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த விபத்தில், 15-க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே உவரி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள அன்னை வேளாங்கண்ணி ஆலயத்தில், கடந்த 9 நாட்களாக திருவிழா நடைபெற்று வந்தது. கடைசி நாளான இன்று தேர்பவணி நடந்தது. அப்போது, அன்னை வேளாங்கண்ணி சொரூபத்தை சிறிய தேரில் வைத்து, அதனுடன் பக்தர்கள் ஊருக்குள் வலம் வந்தனர். இந்த விழாவில் உள்ளூரைச் சேர்ந்த பக்தர்கள் மட்டும் அல்லாமல் சுற்றுப்புற கிராமங்களை சேர்தவர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

பக்தர்கள் இழுத்து சென்ற தேர், சாலையில் செல்லும்போது திடீரென தாழ்வாக இருந்த மின்சார வயரில் தட்டி இருக்கிறது. அப்போது மின்சாரம் பாய்ந்ததில், அங்கிருந்த பக்தர்கள் 20 பேர் படுகாயம் அடைந்தனர். உடனடியாக, அவர்கள் அனைவரையும் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலமாக நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மற்றவர்கள் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தேவாலய திருவிழாவின்போது ஏற்பட்ட இந்த சோகச் சம்பவத்தால், உவரி மட்டும் அல்லாமல் சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்த மீனவ கிராமங்களைச் சேர்ந்த மக்களும் பெரும் சோகத்தில் மூழ்கி உள்ளனர்.

- ஆண்டனிராஜ்

 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

'சாக்கடையில் கலந்த ஜெயலலிதா ரத்தம்!'   -எம்பால்மிங் சீக்ரெட்டை உடைக்கும் மருத்துவர்கள் #VikatanExclusive
placeholder

'இருதயம் செயலிழந்து போனதற்கான காரணம் என்ன? திடீரென்று செயலிழந்து நின்று போன இருதயத்தை ஏன் மீண்டும் செயல்பட வைக்க இயலவில்லை? உலகத் தரம் வாய்ந்த உபகரணங்களையும் நிபுணத்துவத்தையும் தோல்வியைத் தழுவச் செய்த காரணங்கள் யாவை?' என்ற கேள்விகளையே மருத்துவர் பீலேயும் அப்போலோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களும் தமிழக-இந்திய மருத்துவ உலகத்தாரும் தமிழ்நாடு-மத்திய அரசுகளும் கேட்டிருக்க வேண்டும். அதற்கான பதிலைக் கண்டறிய இயன்றளவில் முயற்சியை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கான ஒரு சிறிய துரும்பு அளவிலான முயற்சியைக்கூட இவர்கள் எவரும் மேற்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

Advertisement

MUST READ

Advertisement
[X] Close