Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

செம்மரக் கடத்தலுக்கு 'செக்' வைத்த மக்கள்! -சொந்தப் பணத்தில் ஊர் முழுக்க சி.சி.டி.வி

முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருத்தணியில் நகர் முழுவதும் 32 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படவுள்ளன.

திருத்தணி என்றதும் நமது நினைவுக்கு வருவது முருகன் கோயில். இந்த கோயிலுக்கு தினமும் வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகம். இதனால் திருத்தணி ரயில், பஸ் நிலையங்களில் கூட்டம் அலைமோதும். அதோடு திருத்தணி வழியாக திருப்பதிக்கு செல்லுபவர்களின் எண்ணிக்கை ஏராளம். இவ்வாறு மக்கள் கூட்டத்தால் திணறும் திருத்தணியில் தினந்தோறும் பல்வேறு குற்றச் செயல்களுக்கும் குறைவிருக்காது. பிக்பாக்கெட் தொடங்கி செயின் பறிப்பு என அனைத்து சம்பவங்களும் இங்கு அரங்கேறுவதுண்டு. இதைத்தடுக்க திருத்தணியில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் 17 கேமராக்கள் பொருத்தப்பட்டு இருந்தன. இந்த கேமராக்கள் சமீபத்தில் பெய்த கனமழையில் சேதமடைந்தன. இதன்பிறகு குற்றச்செயல்கள் அதிகரிக்கத் தொடங்கின.

இதை தடுக்க போலீஸாரும், திருத்தணி நகர் பகுதியில் உள்ள வணிகர்களும் இணைந்து ஆலோசனை நடத்தினர். அப்போது, மீண்டும் நகர் முழுவதும் கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக வணிகர்கள் மற்றும் பொது மக்கள் இணைந்து கேமரா பொருத்த நன்கொடையை அள்ளிக் கொடுக்கத் தொடங்கினர். இதுவரை 6 லட்சம் ரூபாய் வரை வசூலாகியுள்ளது. அதைக் கொண்டு 32 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படவுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. 

இதுகுறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவரிடம் கேட்ட போது, "திருத்தணி நகரில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் (சிசிடிவி) மழையால் சேதமடைந்தன. இந்த கேமராக்கள் உதவியால் பல குற்றச்செயல்கள் கண்டறியப்பட்டன. குறிப்பாக ஆந்திராவிலிருந்து கடத்தப்படும் செம்மரக்கட்டடைகள் திருத்தணியாக கொண்டு செல்வது தடுக்கப்பட்டன. இதுதொடர்பான திருத்தணி காவல் நிலையத்தில் பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டு பல டன் செம்மரக் கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தற்போது கேமரா இல்லாததால் செம்மரக்கட்டைகள் கடத்துவது அதிகரித்துள்ளது. மேலும் திருத்தணியில் கிரைம் ரேட்டும் அதிகரித்துள்ளதால் அதை தடுக்கவே கூடுதலாக 32 கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக காவல்துறையின் நிதியை எதிர்பார்த்து காத்திருந்தால் காலஅவகாசம் அதிகமாகும். இதனால் பொது மக்களின் பங்களிப்புடன் கேமரா பொருத்தும் திட்டம் அமல்படுத்தப்படுகிறது. இந்த கேமராக்கள் பொருத்துவதற்கான முதற்கட்ட பணிகள் தற்போது நடந்து வருகிறது. இந்த  வாரத்துக்குள் 32 கேமராக்கள் முக்கிய பகுதிகளில் பொருத்தப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துவிடும். அடுத்து, பழுதான கேமராக்களையும் சரி செய்து அதையும் பொருத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும். இதன்பிறகு திருத்தணி நகர் முழுவதும் போலீஸாரின் கண்காணிப்பு வளையத்துக்குள் வந்து விடும். எந்த சம்பவம் நடந்தாலும் டி.எஸ்.பி அலுவலகத்தில் உள்ள கண்ட்ரோல் அறையிலிருந்து பார்த்து நடவடிக்கை எடுக்க முடியும்" என்றனர். 

எஸ்.மகேஷ்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

பரப்பன அக்ரஹாரா சிறை முதல் அப்போலோ அறை வரை...! - ஜெயலலிதாவின் இரண்டு வருட டைம்லைன் #2YearsOfBangaloreVerdict
placeholder

தமிழகமே எதிர்பார்த்துக்கொண்டிருந்த வழக்கில், இரண்டு ஆண்டுகளுக்கு முன் இதே நாளில்தான் தீர்ப்பு வந்தது. வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாகத் தொடரப்பட்ட அந்த வழக்கில், அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு, நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்து, பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. தீர்ப்பு வந்து 731 நாட்கள் ஆகிவிட்டன. அந்த வழக்கிலிருந்து அவர் விடுதலையும் செய்யப்பட்டு, அதன்பின் ஒரு பொதுத் தேர்தலில் மீண்டும் வென்று முதல்வராகவும் பொறுப்பேற்றுவிட்டார். எல்லாம் அவருக்கு நன்றாகப் போய்க்கொண்டிருந்தபோது, ஒரு வியாழக்கிழமை இரவு உடல்நிலை சுகவீனம் அடைந்து அப்போலோவில் அனுமதிக்கப்பட்டார்.

MUST READ