Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகுகிறது..! வானிலை மையம் தகவல்

அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தமிழகத்தில் சில வாரங்களாக மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் சில நேரங்களில் கனமழை பெய்து வருகிறது. 

இந்தநிலையில், அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாகவும், மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

அடுத்த இரண்டு தினங்களுக்கு வட, தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் அதிகபட்சமாக 4 செ.மீட்டர் மழை பதிவாகியுள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

மேலும், சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், மாலை அல்லது இரவு நேரங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானில ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ