Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தங்கமகன் தங்கவேலுக்கு குவியும் வாழ்த்துகள்!

பாரா ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் பெற்ற மாரியப்பன் தங்கவேலுவுக்கு திமுக தலைவர் கருணாநிதி, எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், பாமக நிறுவனர் ராமதாஸ் ஆகியோர் பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதி: அண்மையில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில், இந்தியாவின் சார்பில் யாரும் தங்கப் பதக்கம் பெற முடியாத நிலையில், 31வது ஒலிம்பிக் போட்டிகள் முடிவடைந்து, தற்போது மாற்றுத் திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டியில், தமிழகத்தின் சார்பில் கலந்து கொண்ட சேலம் மாரியப்பன் தங்கவேலு, உயரம் தாண்டுதல் போட்டியில் பங்கேற்று தங்கப் பதக்கம் பெற்று வரலாற்றுச் சாதனை படைத்திருப்பது பெரிதும் பாராட்டுக்குரிய செய்தியாகும். இந்தப் பிரிவில் கலந்து கொண்ட மற்றொரு இந்திய போட்டியாளர் வருண் சிங் வெண்கலப் பதக்கம் பெற்றுள்ளார். பாரா ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் பெற்ற தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு உட்பட இருவரையும் பாராட்டி வாழ்த்துகிறேன். நடந்து முடிந்த 31வது ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் பெற்ற வீரர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் பாராட்டு தெரிவித்து நிதி உதவி அளித்ததைப் போலவே, இந்த பாரா ஒலிம்பிக் போட்டியிலே வெற்றி பெற்ற வீரர்களை, குறிப்பாக தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலுவைப் பாராட்டி, தமிழக அரசு நல்ல முறையில் கௌரவிக்க வேண்டு மென்று வலியுறுத்துகிறேன். 

எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின்: மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டிகள் பிரேசில் நாட்டிலுள்ள ரியோ நகரில் நடந்து வருகிறது. இதில் உயரம் தாண்டுதல் போட்டியில் தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு 1.89 மீட்டர் உயரம் தாண்டியதன் மூலம் இந்தியாவிற்கு பெருமை தேடித் தந்துள்ளார். சேலம் மாவட்டத்தை சேர்ந்த மாரியப்பன் இந்த அரிய சாதனையை நிகழ்த்தியிருப்பதன் மூலம் ஒலிம்பிக் போட்டியில் இந்தியா தங்கப் பதக்கம் பெறவில்லையே என்று ஏங்கிய எண்ணற்ற விளையாட்டு ரசிகர்களின் மனதைக் குளிர வைத்து ஒட்டுமொத்த விளையாட்டு வீரர்களுக்கும், நாட்டிற்கும் மகத்தான சிறப்பை ஏற்படுத்தி தந்திருக்கிறார். மற்றொரு இந்திய வீரரான வருண் சிங் பாடி உயரம் தாண்டுதலில் வெண்கலம் வென்றார். இதனையடுத்து ஒரே பிரிவில் இந்திய வீரர்கள் இருவர் இரு பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளது இந்திய திருநாட்டிற்கு பாராலிம்பிக் போட்டிகள் வரலாற்றில் புதிய இடத்தை பெற்று கொடுத்துள்ளது. பதக்கம் பெற்ற வீரர்களை பாராட்டும் இந்த நேரத்தில் அவர்களுக்கும் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற வீரர்களை பாராட்டி ஊக்கம் அளித்தது போல் மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கைகள் எடுத்து விருதுகளும் வழங்கி கவுரவிக்க வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன். 

பாமக நிறுவனர் ராமதாஸ்: ஒலிம்பிக் போட்டிகளைத் தொடர்ந்து பாரா ஒலிம்பிக்ஸ் எனப்படும் மாற்றுத் திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டிகள் ரியோடிஜெனிரோ நகரில் நடைபெற்று வருகின்றன. இப்போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்ற தமிழக வீரர் மாரியப்பன் உயரம் தாண்டுதல் பிரிவில் 1.89 மீட்டர் உயரம் தாண்டி தங்கப் பதக்கம் வென்றுள்ளார். இதன்மூலம் இந்தியாவுக்கு மாரியப்பன் முதல் தங்கத்தை வென்றுள்ளார். இப்போட்டியில் பங்கேற்ற இன்னொரு இந்திய வீரரான வருண்சிங் பட்டி 1.86 மீட்டர் உயரம் தாண்டி  வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.

கடந்த மாதம் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா பெரிய அளவில் சாதிக்க முடியாத நிலையில், பாரா ஒலிம்பிக் போட்டிகளின் ஒரே பிரிவில் மாற்றுத் திறனாளிகள் இரு பதக்கங்களை வென்று இந்தியாவுக்கு மிகப் பெரிய பெருமை சேர்த்திருக்கின்றனர். பொதுவாக ஒலிம்பிக் போட்டிகளிலும், ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலும் வெற்றி பெறுவோருக்கு அளிக்கப்படும் அங்கீகாரமும், பெருமையும் பாரா ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வெல்வோருக்கு வழங்கப்படாதது வருத்தமளிக்கிறது. பாரா ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற மாரியப்பன், சேலம் மாவட்டம் பெரியவடகம்பட்டியில் உள்ள ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவர். இளம் வயதில் பள்ளிக்கு செல்லும் போது சாலை விபத்தில் சிக்கி வலது கால் நசுங்கி மாற்றுத் திறனாளி ஆனவர். ஆனாலும், தன்னம்பிக்கையை இழக்காமல் தீவிரப் பயிற்சி பெற்று பாரா ஒலிம்பிக் போட்டிகளில் சாதித்திருக்கிறார். மாரியப்பன் விபத்தில் சிக்கியபோது சிகிச்சைக்காக வாங்கிய ரூ.3 லட்சம் கடனை அடைக்க முடியாமல் அவரது குடும்பம் இன்னும் தடுமாறிக் கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் மாரியப்பனுக்கு பாராட்டுக்கள், அங்கீகாரங்கள் ஆகியவற்றுடன் நிதி உதவியும் அதிகம் தேவைப்படுகிறது.

எடிட்டர் சாய்ஸ்

ஜெர்சி மாடுகள், பிரேசில் காபி, மருத்துவமனை உறுதி! ஜெயலலிதா பற்றி தோழியின் நினைவலைகள்
placeholder

அதே மாதிரி ஜெயலலிதா தன்னுடைய 10 வயதில் சிவாஜி கணேசன் முன்னிலையில் மயிலாப்பூரில் செய்த நடன அரங்கேற்றப் படங்கள் முதல் அதற்குப் பிறகான அவரது சின்ன வயசுப் படங்களை நாங்கள் தொகுத்திருந்தோம். அதை 2012 ம் ஆண்டு, எனக்கு அவரை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்த போது கொடுத்தேன். அதைப் பார்த்து ரொம்ப சந்தோஷமாகிட்டாங்க. அந்தப் படத் தொகுப்பை, தன்னோட ஹேண்ட் பேக்ல வச்சுக்கிட்டாங்க. பத்திரமா வைத்துக் கொள்வதாகவும் சொன்னாங்க. சினிமாக்காரங்க என்றால் ஈஸியாக அணுகலாம் என்கிற திரையை உடைத்து, அவங்க தனி ரூட்டைப் போட்டு, அதை மத்தவங்க ஃபாலோ பண்ற அளவுக்கு வாழ்ந்து காட்டினாங்க. குறிப்பா, சினிமா விழாக்கள், நிகழ்ச்சிகளுக்கு போக மாட்டாங்க. 

அம்மாவிடமிருந்து போன் வந்தால்...!? - உருகும் வீணை காயத்ரி
placeholder

''சமீபத்தில் கொலை மிரட்டல் விட்டப் பையனால் அம்மாவை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. கடந்த ஜூலை 27-ம் தேதி சி.எம் ஆபீஸ்ல இருந்து போன் வந்தது. அம்மா உங்களை உடனே வரச்சொன்னதா சொன்னாங்க. நான் கொஞ்சமும் யோசிக்காமல் போய் நின்னேன். பொதுவாகவே நானும், அவங்களும்தான் தனியாகத்தான் பேசிப்போம். ஆனா, அன்றைக்கு, எல்லா அதிகாரிகளும், இருந்தாங்க. அவங்க முன்னாடி, 'எப்படி இருக்கீங்க' என கேட்டார். நான் பதில் சொல்லிவிட்டு, 'நவம்பர் மாதத்தோடு என்னோட டர்ன் முடியுது' என சொன்னேன். இதற்கு அவர், எல்லோருடைய முன்னிலையிலும், அடுத்த மூன்று வருஷத்துக்கும் நீங்களே துணை வேந்தரா இருங்க என சொல்லிவிட்டு, அவருக்கு பின்னால் இருக்கும் எல்லோரையும் பார்த்து மறுபடியும்  இதையே சொன்னார். அப்போதுதான் அவர்கிட்ட, 'நான் உங்களை சந்திக்க இரண்டு வருஷமாக முயற்சி செய்துட்டு இருந்தேன். இந்த கொலை மிரட்டல் காரணமாகத்தான் உங்களை சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சிருக்கு, நான் தனி மனுஷியாக இசை பல்கலைக்கழகத்தை நடத்தி வருகிறேன்' என சொன்னேன். உடனே, சம்பந்தப்பட்டவர்களை அழைத்து, அவங்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்து கொடுங்க என சொன்னார்.  'அடுத்த முறைப் பார்க்கும்போது உங்க முகத்துல சிரிப்பை மட்டும் தான் பார்க்கணும்' என ஆறுதல் சொன்னாங்க. அந்த வார்த்தை இன்னும் என் காதில் கேட்டுட்டே இருக்கு. அதுதான் நான் அவங்களை கடைசியாகப் பார்த்தது.  அதற்குப் பிறகு அவரை பார்க்க முடியவில்லை. அவர் சொன்னது போல அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கும்போதே அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுட்டாங்க. நான் இப்போ அடுத்த ஆர்டருக்காக காத்திட்டு இருக்கேன். இன்னும் ஆர்டர் என் கைக்கு வரவில்லை''

MUST READ