Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

காய்கறி வியாபாரம்... கூலிவேலை... சாதித்த மகன்..! தங்கமகன் தாயார் நெகிழ்ச்சி


பாரா ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றுள்ளதன் மூலம் எனக்கும் அவன் பிறந்த ஊருக்கும் மட்டுமல்ல இந்தியாவுக்கே பெருமை சேர்த்து விட்டான் மாரியப்பன் என்று அவரது தாயார் சரோஜா நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

சேலம் மாவட்டம், ஓமலூரை அடுத்த பெரிய வடகம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மாரியப்பன் (21). தங்கப்பதக்கம் வென்ற மாரியப்பன் தாயார் சரோஜா, காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். தந்தை தங்கவேலு செங்கல் சூளைக்கு வேலைக்கு சென்று வருகிறார். இவர்களுக்கு 3 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இன்னமும் வாடகை வீட்டில் தான் மாரியப்பன் குடும்பம் வசித்து வருகிறது. சேலத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் இந்த ஆண்டுதான் பி.பி.ஏ. முடித்து உள்ளார். கல்லூரி விடுமுறை நாட்களில் கூலி வேலைக்கு சென்று வந்துள்ளதோடு, தாயாருக்கு உதவியாக காய்கறி வியாபாரமும் செய்து வந்துள்ளார் மாரியப்பன். மூத்த மகனான மாரியப்பனுக்கு 5 வயதில் காலில் பஸ் மோதி காயம் ஏற்பட்டது. படிப்பிலும் விளையாட்டிலும் ஆர்வம் அதிகமாக இருந்த மாரியப்பனுக்கு, பெற்றோரால் உதவி செய்ய முடியவில்லை. 

ஊர் ஊராக சென்று காய்கறி விற்பதில் கிடைக்கும் பணத்தில் குடும்பத்தை நடத்தவே கஷ்டப்பட்டு வந்தார் தாயார் சரோஜா. ஆனால், மாரியப்பனுக்கு பலர் உதவி செய்தனர். பெங்களூரைச் சேர்ந்தவர்களும், உடன் படித்தவர்களும் ஆசிரியர்களும், ஊர் மக்களும் 100 முதல் ஆயிரம் வரை பணம் கொடுத்து உதவியுள்ளனர். கடந்த 2012ஆம் ஆண்டு முதல் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு பல பதக்கங்களை குவித்து வந்துள்ளார் மாரியப்பன். இலங்கை மற்றும் நெதர்லாந்து நாடுகளில் நடைபெற்ற போட்டிகளிலும் பங்கேற்று தங்கப்பதக்கம் பெற்று இருக்கிறார். 

தற்போது, பிரேசில் நாட்டில் ரியோ நகரில் நடந்த மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக்கில் உயரம் தாண்டுதல் போட்டியில் மாரியப்பன் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். இதனை அறிந்த ஊர் மக்கள் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை கொண்டாடினர்.

 

மகன் தங்கப்பதக்கம் வென்றது குறித்து நெகிழ்ச்சி தெரிவித்துள்ள மாரியப்பனின் தாயார் சரோஜா, வட்டார அளவில் இருந்து மாநிலம் வரை நடந்த போட்டிகளில் வெற்றி பெற்று பல்வேறு பதக்கங்களை பெற்று இருக்கிறான். தற்போது பாரா ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்று எனக்கும் அவன் பிறந்த ஊருக்கும் மட்டுமல்ல இந்தியாவுக்கே பெருமை சேர்த்து விட்டான். அவனுக்கு உதவிய உள்ளங்களுக்கு இந்த நேரத்தில் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்" என்று கூறினார்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

பரப்பன அக்ரஹாரா சிறை முதல் அப்போலோ அறை வரை...! - ஜெயலலிதாவின் இரண்டு வருட டைம்லைன் #2YearsOfBangaloreVerdict
placeholder

தமிழகமே எதிர்பார்த்துக்கொண்டிருந்த வழக்கில், இரண்டு ஆண்டுகளுக்கு முன் இதே நாளில்தான் தீர்ப்பு வந்தது. வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாகத் தொடரப்பட்ட அந்த வழக்கில், அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு, நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்து, பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. தீர்ப்பு வந்து 731 நாட்கள் ஆகிவிட்டன. அந்த வழக்கிலிருந்து அவர் விடுதலையும் செய்யப்பட்டு, அதன்பின் ஒரு பொதுத் தேர்தலில் மீண்டும் வென்று முதல்வராகவும் பொறுப்பேற்றுவிட்டார். எல்லாம் அவருக்கு நன்றாகப் போய்க்கொண்டிருந்தபோது, ஒரு வியாழக்கிழமை இரவு உடல்நிலை சுகவீனம் அடைந்து அப்போலோவில் அனுமதிக்கப்பட்டார்.

MUST READ