Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

என் அரசியல் பயணம் தொடரும்! - சீறிய சரத்குமார்

சென்னை: என்னைப் பற்றி உண்மைக்குப் புறம்பான செய்தியை பரப்ப வேண்டாம். என் அரசியல் பயணம் தொடரும் என்று சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் கூறி உள்ளார்.

நடிகரும், சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமார், 2011-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் அ.தி.மு.க. ஆதரவுடன் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆனார். மேலும், தென்னிந்திய திரைப்பட நடிகர்கள் சங்க தலைவராக இருந்த அவர், நடிகர் சங்க தேர்தலில் மீண்டும் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

அதன்பின், சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலிலும் அ.தி.மு.க. ஆதரவுடன் திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். இந்தச்சூழலில், சரத்குமார் அரசியலுக்கு முழுக்கு போட்டுவிட்டு மீண்டும் திரைப்படங்களில் நடிக்கப்போவதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் அதனை  சரத்குமார் மறுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று சென்னை தி.நகரில் செய்தியாளர்களிடம் கூறும்போது, ''நான் அரசியலுக்கு முழுகு போடப்போவதாக வெளியான செய்தி தவறானது. நான் ஆரம்ப காலத்தில் இருந்து, பத்திரிகையாளராக துவங்கி பல சிரமங்களை அனுபவித்து அரசியலுக்கு வந்தவன். நடிப்பு என் தொழில், அரசியல் மக்களுக்காற்றும் சேவை.

இதில் பல்வேறு ஏற்ற இறக்கங்கள் வரும். என் பள்ளி படிப்பில் இருந்தே நான் பொதுவாழ்க்கையில் ஈடுபட்டு வருகிறேன். அதுவும் ஒரு குறிக்கோளுடன் வந்தவன் நான். வாழ்க்கையில் நான் பல்வேறு தடைகளை கண்டவன், தோல்வியை கண்டு துவள மாட்டேன். என்னை பற்றி உண்மைக்கு புறம்பான செய்திகளை பரப்ப வேண்டாம் என கேட்டு கொள்கிறேன்.

பத்திரிகைகள் இந்த நாட்டின் தூண்கள். எனவே, அவர்கள் பொறுப்புடன் இருக்க வேண்டும். அரசியலுக்கு முழுக்கு என்று வெளியான செய்திக்கு எனது மறுப்பை தெரிவித்து கொள்கிறேன். என் அரசியல் பயணம் தொடரும். தற்போது நடப்பது டிஜிட்டல் உலகம். இந்த காலத்தில் இருந்த இடத்தில் இருந்து கொண்டே எதையும் சாதிக்க முடியும்.

எனது பொருளாதார வளத்திற்காக நான் தற்போது சில சினிமாக்களில் நடித்து வருகிறேன். சேவை செய்வதுதான் என் நோக்கம். அதையும் மீறி கூடுதல் நேரம் இருப்பதால், சினிமாவில் நடிக்கிறேன். தொடர்ந்து நடிப்பேன் இதில் எந்தவித மாற்றமும் இல்லை" என்றார்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

பரப்பன அக்ரஹாரா சிறை முதல் அப்போலோ அறை வரை...! - ஜெயலலிதாவின் இரண்டு வருட டைம்லைன் #2YearsOfBangaloreVerdict
placeholder

தமிழகமே எதிர்பார்த்துக்கொண்டிருந்த வழக்கில், இரண்டு ஆண்டுகளுக்கு முன் இதே நாளில்தான் தீர்ப்பு வந்தது. வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாகத் தொடரப்பட்ட அந்த வழக்கில், அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு, நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்து, பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. தீர்ப்பு வந்து 731 நாட்கள் ஆகிவிட்டன. அந்த வழக்கிலிருந்து அவர் விடுதலையும் செய்யப்பட்டு, அதன்பின் ஒரு பொதுத் தேர்தலில் மீண்டும் வென்று முதல்வராகவும் பொறுப்பேற்றுவிட்டார். எல்லாம் அவருக்கு நன்றாகப் போய்க்கொண்டிருந்தபோது, ஒரு வியாழக்கிழமை இரவு உடல்நிலை சுகவீனம் அடைந்து அப்போலோவில் அனுமதிக்கப்பட்டார்.

MUST READ