Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கர்நாடகாவுக்கு பஸ் போக்குவரத்து மீண்டும் நிறுத்தம்!

சென்னை: கர்நாடக மாநிலத்திற்கு செல்லும் தமிழக அரசு பேருந்துகள் மீண்டும் தமிழக எல்லையான ஓசூரிலேயே நிறுத்தப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

தமிழகத்துக்கு காவிரியில் 10 நாட்களுக்கு தினமும் வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி கர்நாடக அரசும் கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து 10 ஆயிரம் கனஅடி தண்ணீரும், கபினி அணையில் இருந்து 5 ஆயிரம் கனஅடி தண்ணீரும் திறந்துவிட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கர்நாடக மாநில அரசியல் கட்சிகள், விவசாயிகள் மற்றும் அமைப்புகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கர்நாடகாவில் ஏற்பட்டுள்ள பதற்றம் காரணமாக தமிழக அரசு பேருந்துகள் தமிழக எல்லையுடன் நிறுத்தப்பட்டு வந்தது. 6 நாட்களாக தடைப்பட்டு இருந்த பேருந்து போக்குவரத்து நேற்று காலை மீண்டும் செயல்படத் தொடங்கியது. இந்நிலையில் காவிரியில் நீர் திறப்பு தொடர்பாக, கர்நாடகாவில் கன்னட அமைப்புகள் நடத்திய போராட்டத்தை சமூகவலைதளத்தில் விமர்சனம் செய்து அங்கு வசிக்கும் தமிழக வாலிபர் பதிவிட்டிருந்தார்.

அதை கண்ட கன்னட அமைப்பினர், அந்த வாலிபரை பிடித்து சரமாரியாக தாக்கினர். மேலும், அதை தங்களது செல்போனில் பதிவு செய்து வாட்ஸ் அப்பில் பதிவிட்டனர். அந்த வாட்ஸ் அப் வீடியோ காட்சிகள் வேகமாக பரவி, தமிழகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதன் காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்றிரவு 8 மணி முதல் தமிழகத்தில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூரு, மைசூர் உள்ளிட்ட இடங்களுக்குச் செல்லும் அரசு பேருந்துகள் தமிழக எல்லையான ஓசூருடன் நிறுத்தப்பட்டதால் பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

 

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ