Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நத்தம் விஸ்வநாதன், சைதை துரைசாமி மகன் வீட்டில் ஐ.டி. ரெய்டு! 

முன்னாள் அமைச்சர் நந்தம் விஸ்வநாதன் மற்றும் சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி மகன் வீடு, அலுவலகங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

வருமான வரி ஏய்ப்பு செய்தது உள்ளிட்ட புகார்களை தொடர்ந்து சென்னை, மதுரை, கோவை, நெல்லை,  திண்டுக்கல் ஆகிய பகுதிகளில் உள்ள 40 இடங்களில் பல்வேறு நிறுவனங்கள், நகைக் கடைகள், வீடுகள், அலுவலகங்கள் என ஏராளமான இடங்களில் வருமான வரித்துறையினர் இன்று 9 மணி முதல் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

இதில் முக்கியமாக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனின் திண்டுக்கல் மாவட்டம், வேம்பார் பட்டியில் உள்ள வீடு, மதுரையில் உள்ள வீடு, அலுவலகங்கள் மற்றும் உறவினர்கள், நண்பர்களின் வீடுகள், அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

மேலும், மயிலாப்பூர் சிஐடி நகரில் உள்ள சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி மகன் வீடு, அலுவலகங்களிலும், சென்னை அபிராமபுரம், கோவை ஆகிய இடங்களில் உள்ள கீர்த்திலால் என்பவரின் நகைக்கடைகளிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

மதுரையில் உள்ள மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. 

சைதை மகன் வீட்டில் சோதனை ஏன்?

கடந்த சில மாதங்களுக்கு சைதை துரைசாமியின் மகன் வெற்றிதுரைசாமி, பல கோடி மதிப்பிலான நிலம் வாங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வருமானவரித்துறைக்கு புகார் சென்றுள்ளது. அதன்பேரில், நிலவழிக்காட்டு மதிப்புக்கு ஏற்ப முத்திரைதாள் வாங்கப்பட்டுள்ளதா, இந்த இடம் வாங்குவதற்கான பணம் எந்த வகையில் வந்தது உள்ளிட்டவை தொடர்பாக விசாரணை நடந்து வருவதாக வருமானவரித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த சோதனையின்போது சைதை துரைசாமியின் மகன் மட்டுமே வீட்டில் உள்ளார். மேயர் துரைசாமி தலைமைச் செயலகத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. 
 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

MUST READ