Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'தமிழகத்திற்கு தண்ணீர் தேவை பெரிதாக இல்லை!' உச்ச நீதிமன்றத்தில் கர்நாடகா

 

காவேரி நதி நீரை பங்கிட்டுக்கொள்ளும் பிரச்னை பூதாகரம் ஆகிக்கொண்டு வருகிறது. சில நாட்களுக்குப் பின், நேற்றுத்தான் போக்குவரத்து இரு மாநில எல்லைகளில் இயல்பு நிலை திரும்பியது. இன்று ஏற்பட்ட சில அசம்பாவித சம்பவங்களால், மீண்டும் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.


இந்நிலையில் இன்று காலை,தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடுவதை நிறுத்தக்கோரி, கர்நாடகா அரசு சார்பில், உச்சநீதி மன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்தனர்.அதில்,  தமிழக அரசு சொல்வது போல், தமிழகத்தில் நீர்த் தேவை எதுவும் இல்லை என குறிப்பிட்டு இருக்கிறது கர்நாடகா.


உத்தரவை ஏற்காமல், அதைத் தாமப்படுத்தும் கர்நாடக அரசின் மீது, உச்ச நீதிமன்றம் அதன் அதிருப்தியை அறிவித்துள்ளது. 


நீதிபதி தீபக் மிஸ்ரா, "இந்த நாட்டிலுள்ள அனைவரும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்று நடக்க வேண்டும்.ஒரு தீர்ப்பு மாற்றப்படும் வரை, அதை செயல்படுத்துவது இந்த நாட்டு மக்களின் கடமை,நீதிமன்றம் ஒரு உத்தரவைப் பிறப்பித்தால், அதற்கு சம்மதம் தெரிவியுங்கள், அல்லது மாற்றம் வேண்டி நீதிமன்றத்தை நாடுங்கள். அதை விடுத்து, மக்களே சட்டத்தை கையில் எடுக்கக்கூடாது.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close