Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

செப்.16 முதல் உள்ளாட்சி தேர்தல் விண்ணப்பம்: ஜெயலலிதா அறிவிப்பு

உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புகிறவர்கள் செப்டம்பர் 16ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று முதல்வரும், கட்சியின் பொதுச் செயலாளருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், வரும் 16ஆம் தேதி காலை 8.30 மணியில் இருந்து விண்ணப்பம் பெறப்படும் என்றும், செப்டம்பர் 22ஆம் தேதி இரவு 8 மணி வரை விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அளிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், 16ஆம் தேதியை தவிர மற்ற நாட்களில் காலை 10 மணி முதல் விண்ணப்பம் தரப்படும் என்றும், சென்னை மாநகராட்சிக்கான விண்ணப்பம் கட்சியின் தலைமை அலுவலகத்திலும், மற்ற விண்ணப்பங்கள் அந்தந்த மாவட்ட கட்சி அலுவலகத்திலும் பெறலாம் என்றும் ஜெயலலிதா கூறியுள்ளார்.

மாநகராட்சி, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் விண்ணப்ப கட்டணம் ரூ.11 ஆயிரம் என்றும், நகராட்சிக்கு ரூ.5 ஆயிரம், பேரூராட்சி உறுப்பினர் விண்ணப்ப கட்டணம் ரூ.2 ஆயிரம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், ஓ.பன்னீர்செல்வம், தம்பிதுரை, பொள்ளாச்சி ஜெயராமன், செம்மலை, வேணுகோபால் எம்.பி ஆகியோர் அடங்கிய உள்ளாட்சி தேர்தல் மேற்பார்வை குழுவை ஜெயலலிதா அமைத்துள்ளார்.

இது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா?

எடிட்டர் சாய்ஸ்