Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தமிழர் அல்ல, கன்னடர் அல்ல; மனிதர்கள் நாம்! நடிகர் பிரகாஷ்ராஜ் , ஆர்.ஜே பாலாஜி உருக்கம்

காவிரிப்பிரச்னையில் தமிழகத்திற்கு எதிரான நிலைப்பாட்டில் கர்நாடகத்தில் கலவர சம்பவங்களை அரங்கேற்றிவருகின்றனர் அங்குள்ள சில அமைப்புகள். இதன் எதிரொலியாக தமிழகத்திலும் சில மொழி உணர்வாளர்கள் இதற்கு எதிர்வினையாற்றத் துவங்கியுள்ளனர். இரு மாநிலங்களிலும் ஒருவித பதற்றத்தை இந்த நிகழ்வுகள் ஏற்படுத்தியுள்ளன. இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் சிலரால் இந்த கலவர சம்பவங்கள் குறித்து பகிரப்படும் வீடியோக்கள், புகைப்படங்கள், மற்றும் பதிவுகள் பார்ப்பவர்கள் மனதில் ஒருவித உணர்ச்சிக் கொந்தளிப்பை ஏற்படுத்திவருகிறது.

இனம் மொழி மதங்களுக்கு அப்பாற்பட்டவர்களான கலைஞர்கள் இந்த பிரச்னையில் இரு மாநில மக்களுக்கும் கருத்து தெரிவித்துள்ளனர்.

45 விநாடிகள் ஓடும் வீடியோவில் பேசும் நடிகர் பிரகாஷ்ராஜ், “சட்டத்தை மதிக்கவேண்டும். பொதுசொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கக்கூடாது. மொழி, மாநில அளவில் பிரிந்துகிடக்காமல் மனிதர்களாக நாம் இருக்கவேண்டும். எந்த பிரச்னையையும் சட்டப்படியே அணுகவேண்டும். வன்முறை தீர்வாகாது' என கருத்து தெரிவித்துள்ளார்.
வீடியோவைக்காண...

 

 

 பிரபல ஆர்.ஜே பாலாஜியும் இவ்வாறு ஒரு வீடியோ பதிவில் கருத்து தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு சென்னை புயல் வெள்ளத்தில் சிக்கித்தவித்தபோது மக்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டி உதவிப்பணிகளை ஒருங்கிணைத்தவர்களில் ஒருவர் இவர்.

  இரு மாநிலங்களிலும் அரங்கேறும் வன்முறைகள் குறித்து கருத்து தெரிவித்துள்ள இவர்,  ' இவற்றையெல்லாம் கண்டு உணர்ச்சி வயப்படாமல் தமிழர்களாகவோ, அல்லது கன்னடர்களாகவோ இருக்காமல் மனிதர்களாக இருப்போம்' என பேசியிருக்கிறார். இந்த வீடியோக்கள் சிந்திக்கவைப்பதாக உள்ளது. தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகளவு பகிரப்படும் வீடியோக்கள் இவைதான்...
வீடியோவைக்காண...

 

சமூக வலைத்தளங்களும் நெட்டிசன்களும் பொறுப்புடன் செயலபடவேண்டிய தருணம் இது!

- எஸ்.கிருபாகரன்

இது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா?

எடிட்டர் சாய்ஸ்

MUST READ