Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தி.மு.க. நகர செயலாளர் வெட்டிக்கொலை! - விழுப்புரத்தில் பரபரப்பு

விழுப்புரம்: விழுப்புரத்தில் இன்று காலை தி.மு.க. நகர செயலாளர், மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விழுப்புரம் தி.மு.க. நகர செயலாளராக இருப்பவர் செல்வராஜ் (43). ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வந்த இவர், விழுப்புரம் மாவட்ட தளபதி மன்ற செயலாளராகவும் இருந்து வந்தார். செல்வராஜூக்கு ஜெய பாரதி (38) என்ற மனைவியும், விக்னேஷ் என்ற மகனும் உள்ளனர்.

விழுப்புரம் கே.கே.ரோடு கணபதி குடியிருப்பு பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்த செல்வராஜ், தினமும் காலையில் விழுப்புரம் வடக்கு ரயில்வே குடியிருப்பு பகுதியில் ‘வாக்கிங்’ செல்வது வழக்கம். அதேபோல் இன்று காலையும் அவர் வாக்கிங் செல்வதற்காக, விழுப்புரம் காந்தி சிலை அருகே உள்ள தி.மு.க. கட்சி அலுவலகம் அருகே தனது காரை நிறுத்தி இருக்கிறார்.

அதன்பின் அங்கிருந்து விழுப்புரம் வடக்கு ரயில்வே குடியிருப்பு பகுதியில், கீழ்பெரும்பாக்கம் கட்டபொம்மன் நகர் பகுதியைச் சேர்ந்த செந்தில், ஜெயப்பிரகாஷ் உள்பட 5 தி.மு.க. தொண்டர்களுடன் அவர் வாக்கிங் சென்றுள்ளார். ரயில்வே மருத்துவமனை அருகே செல்வராஜ் சென்றபோது, 2 மோட்டார் சைக்கிளில் 5 வாலிபர்கள் பின்தொடர்ந்து வந்துள்ளனர்.

அந்த வாலிபர்கள், திடீரென்று செல்வராஜை வழிமறித்து தங்களது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு செல்வராஜூக்கு வணக்கம் சொல்லி இருக்கின்றனர். அப்போது, அந்த வாலிபர்களில் ஒருவர், தனது முதுகின் பின்னால் மறைத்து வைத்திருந்த வீச்சரிவாளை வெளியே எடுத்துள்ளார். அந்த நேரத்தில், மற்ற வாலிபர்கள், செல்வராஜூடன் வந்தவர்களை மிரட்டி அங்கிருந்து விரட்டி இருக்கின்றனர்.

இதை கண்டு அதிர்ச்சி அடைந்த செல்வராஜ், ஏதோ விபரீதம் நடக்கப்போகிறது என்பதை உணர்ந்து அங்கிருந்து தப்பிச்செல்ல ஓடி இருக்கிறார். ஆனால் கண் இமைக்கும் நேரத்தில் அந்த வாலிபர்கள், செல்வராஜை சுற்றி வளைத்து வீச்சரிவாளால் அவரின் கழுத்து, வலது கையை வெட்டி இருக்கின்றனர். உடனே செல்வராஜ், ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதை கண்டு செல்வராஜுடன் வந்த ஜெயப்பிரகாஷ், ஓடி வந்து அந்த மர்ம வாலிபர்களை தடுக்க முயன்றுள்ளார். ஆனால், அவரையும் அந்த கும்பல் வெட்டி உள்ளது. இதனால், ஜெயப்பிரகாசுக்கும் கையில் பலத்த காயம் ஏற்பட்டது. மேலும், செல்வராஜ் இறந்ததை உறுதி செய்ததும் அந்த மர்ம கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது.

கொலையுண்ட செல்வராஜ் தி.மு.க. ஆட்சியின் போது உயர் கல்வி அமைச்சராக பொன்முடி இருந்தபோது அவரின் தனி உதவியாளராக பணியாற்றியவர். தி.மு.க.நகர செயலாளர் செல்வராஜ் கொலை செய்யப்பட்டதை தொடர்ந்து, விழுப்புரத்தில் பதட்டம் ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, புதிய பஸ்நிலையம், பழைய பஸ்நிலையம், வடக்கு ரயில்வே குடியிருப்பு பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

செல்வராஜை கொலை செய்த மர்ம கும்பல் யார்? அவரை எதற்காக அந்த மர்ம கும்பல் கொலை செய்தது? ஏதாவது முன்விரோதம் காரணமா? அல்லது தொழில் போட்டி காரணமா? என்று போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும், செல்வராஜை கொன்றது கூலிப்படையாக இருக்கலாம் என்று சந்தேகிக்கும் போலீசார், கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைத்துள்ளனர்.

படங்கள்: தே.சிலம்பரசன்

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

பரப்பன அக்ரஹாரா சிறை முதல் அப்போலோ அறை வரை...! - ஜெயலலிதாவின் இரண்டு வருட டைம்லைன் #2YearsOfBangaloreVerdict
placeholder

தமிழகமே எதிர்பார்த்துக்கொண்டிருந்த வழக்கில், இரண்டு ஆண்டுகளுக்கு முன் இதே நாளில்தான் தீர்ப்பு வந்தது. வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாகத் தொடரப்பட்ட அந்த வழக்கில், அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு, நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்து, பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. தீர்ப்பு வந்து 731 நாட்கள் ஆகிவிட்டன. அந்த வழக்கிலிருந்து அவர் விடுதலையும் செய்யப்பட்டு, அதன்பின் ஒரு பொதுத் தேர்தலில் மீண்டும் வென்று முதல்வராகவும் பொறுப்பேற்றுவிட்டார். எல்லாம் அவருக்கு நன்றாகப் போய்க்கொண்டிருந்தபோது, ஒரு வியாழக்கிழமை இரவு உடல்நிலை சுகவீனம் அடைந்து அப்போலோவில் அனுமதிக்கப்பட்டார்.

MUST READ