Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

காலதாமத காவிரி....பெருக்கெடுக்கும் விவசாயிகள் கண்ணீர் !

 

காவிரியில் இருந்து ஜுன் -12 ஆம் தேதி வரை திறக்க வேண்டிய தண்ணீரை "இரும்பு மதகு இதயம் கொண்ட கர்நாடக அரசு திறந்து விடாமல் போனதால் கடந்த 3 மாதங்களில் சுமார் 2000 ஆயிரம் கோடி இழப்பு ஏற்ப்பட்டுள்ளதாக  தமிழக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், '' காவிரியில் 10 நாட்களுக்கு தினமும் வினாடிக்கு 15,000 கன அடி நீரை திறந்துவிட வேண்டும்'' என கடந்த 5-ம் தேதி (திங்கள்கிழமை )உத்தரவிட்டது.இதனை தொடர்ந்து 6  - ம் தேதி மாலை கனத்த இதயத்தோடு கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விட்டது. இதற்கு கர்நாடக விவசாயிகளும், கன்னட அமைப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து கடந்த சில  தினங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தபோராட்டம்  இரு மாநிலங்களுக்கு இடையே தற்போது கொழுந்து விட்டு எரிந்து வரும் நிலையில்,  தமிழக  விவசாயிகள் மிகுந்த அச்சத்தில் இருக்கிறார்கள். ஏற்கனவே தண்ணீர் இல்லாமல் எரிந்து வரண்ட  போன பூமியாகி இருப்பது எங்கள்  நிலம்  மட்டுமல்ல... எங்கள் வயிறும் தான் என்கிறார்கள் விவசாயிகள்...

குறுவை போச்சி .. சம்பா  சாகுபடியாகுமா ?

குறுவை சாகுபடிக்கு ஜுன் மாதம் 12 ஆம் தேதி திறக்க வேண்டிய கர்நாடக அரசு 3 மாதம் கழித்து திறந்து விட்டதால் சுமார் 2000 கோடி ரூபாய் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்ப்பட்டுள்ளதாக விவசாய சங்களின்  கூட்டு இயக்கத் தலைவர் தெய்வசிகாமணி தெரிவிக்கிறார்."ஜுன் மாதத்தில் துவங்க வேண்டிய குறுவை சாகுபடி முற்றிலும் கைவிடப்பட்டது.இதனால் கடன் வாங்கி விட்டு வட்டி கொடுக்க  வேண்டிய விவசாயிகள் குறுவை பொய்த்து போனதால் மிகுந்த கவலையில் உள்ளனர். சம்பாவிற்கு திறக்க வேண்டிய தண்ணீரும் தாமதமாக  திறக்கப்பட்டுள்ளது . வரும் 20 -ம் தேதிக்குள் மேட்டூர் அணைக்கு  50  டி. எம். சி தண்ணீர் வரவேண்டும் வந்து சேருமா என்பது தெரியவில்லை.இதில் விவசாயத்திற்கு மட்டும் பயன்படுத்தவில்லை. குடிநீருக்காகவும் எடுக்கப்படுகிறது. தண்ணீர் இல்லாமல் விவசாயிகளின் வயிறு  எரிந்து கொண்டிருக்கிறது . கன்னட வெறியர்கள்  தீ வைத்து வேறு  கொளுத்தி வருகிறார்கள் ? விவசாயிகள்  நிலை என்ன ஆகப்போகிறதோ என்று  தெரியவில்லை" என்றார்.  

இது தொடர்பாக தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர். பாண்டியனிடம் பேசியபோது, இதுவரை  கர்நாடக அரசு  தண்ணீர் திறந்து விடாத காரணத்தால் கடந்த 5  ஆண்டுகளில் குறுவை சாகுபடி மட்டும் 10 ஆயிரம் கோடிக்கு ஈழப்பு ஏற்பட்டுள்ளது.கடந்த ஜுன் மாதம் பயிரிட வேண்டிய குறுவை தண்ணீர் திறந்து விடாததால் அப்படியே  விவசாயிகள் நிறுத்தி விட்டனர் . தற்போது  திறந்து விடப்பட்டுள்ள தண்ணீர் ஆகஸ்ட் 15-ம் தேதியாவது திறந்து விட்டிருந்தால் சரியான முறையில் சம்பா சாகுபடி நடந்திருக்கும்.இதுவும் கால தாமதமாக திறக்கப்பட்டுள்ளதால் இனி இயற்கையும் ,இறைவனும் மனது வைத்தால் மட்டுமே வெள்ளாமை வீடு வந்து சேரும் என்றார்.

 பிச்சையா கேட்கிறோம் ? எங்கள் உரிமை  தடுக்க நீங்கள் யார்?  

 கன்னட இன வெறியர்களால் சம்பா அமைதியாக நடைபெறுமா ?அல்லது மற்ற மாநிலங்களுடனான  தண்ணீர்  போராட்டத்திலே விவசாயிகளின் காலம் ஒடி விடுமா என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்க கூட்டமைப்பு தலைவர்நல்லுசாமியை தொடர்பு கொண்டுபேசினோம்.

"கிருஷ்ணராஜர் சாகர் அணைக்கு வருகிற தண்ணீரில் தமிழகத்தின் உரிமை  என்ன என்பதை முதலில் மத்திய அரசும், உச்சநீதிமன்றம் உறுதி செய்ய வேண்டும் . அதற்கான வாதத்தை நமது வழக்கறிஞர்கள் எடுத்து வைக்க  வேண்டும். கே.ஆர்.எஸ் அணையில் தணணீர் தேக்கி வைப்பதை கர்நாடக அரசு கைவிட வேண்டும். கர்நாடகத்திற்கான பங்கை மட்டும் தேக்கி வைத்து கொள்ளட்டும். ஏன்  தமிழகத்து தண்ணீரை தேக்கி வைத்துக் கொண்டு எங்களுக்கு பிச்சை போடுவது போன்று பாவலா காட்டுகிறார்கள் ? தண்ணீருக்காக உங்களுடைய   அடிமைகளா நாங்கள் ?தண்ணீர் அரசியலை உருவாக்காதீர்கள் . தமிழகமும் அந்த அரசியலை கையில் எடுத்தால் நாடு மிஞ்சாது  ?

காவிரி இறுதி தீர்ப்பில் காவிரியின் வடி நிலத்தில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கு ஒரு போகத்திற்கு தண்ணீர் வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது . ஆனால் கர்நாடக மாநிலத்தில் ஒரு போகம் முடிய உள்ளது . அதாவது அறுவடை தருவாயில் உள்ளது. ஆனால் தமிழகத்திற்கு ஒரு போகத்திற்கு கூட  தண்ணீர் திறந்து விடாமல்  பிடிவாதம் பிடித்து  வருகிறார்கள்.இதனால் தமிழகத்தின் குறுவை சாகுபடி தான் முற்றிலும் நின்று போனது .தற்போது திறந்து  விடப்பட்டுள்ள தண்ணீரையும் மேட்டுர் அணையில் இருந்து  தமிழக  அரசு திறந்து விட்டால் மட்டுமே சம்பா சாகுபடி  நமக்கு பாதியாவது கிடைக்கும்.”

மேலும் அவர், “கன்னட வெறியர்கள்  ஒரு அசாதரண சூழலை ஏற்படுத்தி உச்சநீதிமன்றத்தின்  உத்தரவை  திரும்ப பெற வேண்டிய நிலையை  உருவாக்கி வருகிறார்கள். அவ்வாறு நடந்தால் சோவியத் யூனியனுக்கு ஏற்பட்ட நிலைதான்  ஏற்படும் .

தீர்வுதான் என்ன ?

  காவிரி விவகாரத்தில் மத்திய அரசும் ,உச்சநீதிமன்றமும் உறுதியாக நிற்கவில்லை என்றால் 1990 - களில்  சோவியத் ரஷ்யா  எப்படி போனதோ அதே நிலைமைதான் இந்தியாவிற்கு ஏற்படும்.இரு மாநில பேச்சுவார்த்தையிலும் தீர்வு கிடைக்க வில்லை, மத்திய அரசையும், கர்நாடக அரசு மதிக்கவில்லை,உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கும் எதிர்ப்பு  தெரிவித்து வருகிறது. இந்த  நிலையில் இந்திய அரசியலைமைப்பின் 262 - வது பிரிவின் கீழ் பாராளுமன்றம் தலையிட்டு தீர்வு காண வேண்டும் அல்லது . 264 -வது பிரிவின்கீழ்  குடியரசு தலைவர்  தலையிட்டு குழுவை நியமித்து உத்தரவிட வேண்டும் என்பதே  தீர்வாகும் " என்றார் நல்லுசாமி

 
 "தண்ணீரை விட நாட்டின் இறையாண்மையை  காப்பாற்றுமாறு  கர்நாடகத்திற்கு  தமிழகத்து விவசாயிகள் குரல்  எழுப்ப தொடங்கியுள்ளார்கள் "
 

கே. புவனேஸ்வரி

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close