Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவரானார் திருநாவுக்கரசர்!

 

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ராஜினாமா செய்ததால், கடந்த 4 மாதங்களாக காலியாக இருந்த தலைவர் பதவிக்கு தற்போது திருநாவுக்கரசரை காங்கிரஸ் கட்சியின் மேலிடம் நியமித்துள்ளது.

1972-ம் ஆண்டு தமிழக அரசியலில் நுழைந்த திருநாவுக்கரசர், 1977-ம் ஆண்டு அறந்தாங்கி தொகுதியில் இருந்து தமிழக சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது, எம்.ஜி.ஆர். அமைச்சரவையில் துணை சபாநாயகராக திருநாவுக்கரசர் நியமிக்கப்பட்டர். மேலும், அறந்தாங்கி சட்டப்பேரவை தொகுதியில் இருந்து 6 முறை எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்ட திருநாவுக்கரசர், 1980-87 வரை எம்.ஜி.ஆர். அமைச்சரவையில் அமைச்சராக பணியாற்றி உள்ளார்.

1999-ல் புதுக்கோட்டை தொகுதியில் இருந்து நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட திருநாவுக்கரசர், பா.ஜ.க.வின் மத்திய அமைச்சரவையில், கப்பல் போக்குவரத்து, தகவல் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.  மேலும், வழக்கறிஞர், பத்திரிகையாளர், விவசாயி, சமூகசேவகர் என பன்முகத் தன்மை கொண்டவர் திருநாவுக்கரசர். 2004-ல் மத்தியப் பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு பெற்றார். 

தற்போது, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராக திருநாவுக்கரசர் நியமிக்கப்பட்டுள்ளார். இதனை காங்கிரஸ் தலைமை இன்று அறிவித்துள்ளது.

படம்- ஆ.முத்துக்குமார்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ