Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

க்ரவுட் ஃபண்டிங்கில் ஒரு ஈ-சைக்கிள் கம்பெனி!

”எல்லாம் மாறிடுச்சு” லிஸ்ட்டில் தொலைந்து போன முக்கியமான விஷயம் சைக்கிள். 500 சிசியில் பைக்குகளே பறக்கும்போது சைக்கிள்களுக்கு பெரிய டிமாண்ட் இல்லை. சைக்கிள் மீதான மோகம் இந்த ஜெனரேஷனில் ஒரு ‘கல்ட்’ தான். ஃபிட்னெஸ் ஃப்ரீக்குகளுக்கும், மாரத்தான், ட்ரைலத்தான் ஆர்வலர்களுக்கும் சைக்கிள் ஒரு பெஸ்ட் ஃப்ரெண்ட். 

இளைஞர்கள் சைக்கிளிங் செய்வதை ஊக்குவிக்கும் வகையிலும், மாசற்ற சுற்றுச்சூழலை உருவாக்கும் வகையிலும், எலெக்ட்ரிக் பைக் ஒன்றினைக் கண்டுபிடித்துள்ள மணிகண்டன் சண்முகசுந்தரம், கொங்கு தமிழ் பேசும் கோயம்புத்தூர்க்காரர்.

‘2008ல் எம்.பி.ஏ முடிச்சேன். புதுசா ஒரு விஷயம் செய்ய நினைச்சு கையில் எடுத்ததுதான் எலக்ட்ரிக் மொபிலிட்டி. இந்த ஃபீல்டில் நிறைய பேர் இந்தியாவில் இல்லை, உடனே இதைக் கையிலெடுத்துட்டோம். ஒரு சின்ன பிராடக்ட்ல ஆரம்பிக்கலாம்னு நினைச்சப்போ, மாநகரங்கள்ல மறுபடி சைக்கிள் பீல்ட் திரும்பி வர ஆரம்பிச்சது தெரிஞ்சது. அதற்காகவே, பழைய சைக்கிளில் இன்னும் எலக்ட்ரிக் மொபிலிட்டி சேர்த்து, புதுசா உருவாக்க முடிவெடுத்தோம். அதுதான், இந்த ‘இ-சைக்கிள்’’ என்கிறார் மணிகண்டன்.

பேட்டரியில் இருந்து எவ்வளவு பவர் சைக்கிள்க்கு போக வேண்டும் என்பதை நாம் செட் செய்து கொள்ளலாம். இதனால் வேகத்தை நம்மால் கண்ட்ரோல் செய்ய முடியும்.  லித்தியம்-அயர்ன் பேட்டரிதான் பயன்படுத்தியிருக்கிறார்கள். சுற்றுசூழலுக்கு மாசு ஏற்படுத்தும் லெட் பக்கம் போகவே இல்லை. சைக்கிள் ஓட்டிட்டே இருக்கும்போது, பெடல் பண்ண முடியவில்லையென்றால் ஆட்டோமேட்டிக்கா பெடல் பண்ணாமலே சைக்கிள் ஓடும். 

’வாக் அசிஸ்ட்’ என்பது இதன் ஸ்பெஷல் வசதி. சைக்கிளை தள்ளிக்கொண்டு போக நினைக்கும்பொது, இதை ஆன் செய்தால் நம் வேகத்துக்கு சைக்கிள் தானாக நடட்ந்ஹு வரும், தோளில் கைப்போட்டு நடக்கும் ஒரு நண்பனை போல.

 

Spero சைக்கிளை கிரவுட் பண்டிங் முறையில் உருவாக்கியிருக்கிறது மணிகண்டனின் நிறுவனம். 

‘கிரவுட் ஃபண்டிங் பத்தி எல்லாருக்கும் புரியற மாதிரி சொல்லனும்னா ஃபண்ட் கலெக்ட் செய்து ஒரு ஆபரேஷனுக்கோ, எளிய மக்களுக்கோ உதவற மாதிரி, சில கம்பெனிகளோ, தனிநபர்களோ நம்முடைய ப்ராடக்ட் பத்தி தெரிஞ்சுகிட்டு, அதற்கான தயாரிப்புக்கு உதவி செய்யறது. எங்க ப்ராடக்டல் 100 ரூபாய் கொடுத்தவங்களும் இருக்காங்க. 2000 ரூபாய் கொடுத்தவங்களும் இருக்காங்க. இந்தியாவில் இப்போதான் டெக்னாலஜி சார்ந்து புதிய கண்டுபிடிப்புகளுக்கு ‘கிரவுட் ஃபண்டிங்’ பிரபலமாகிட்டு இருக்கு. நிறைய புதிய கண்டுப்பிடிப்புகளுக்கு இது இன்னும் வளரணும்.

இப்போ எங்களோட இ-சைக்கிளை 30,000 ரூபாய் விலை வரைக்கும் கிரவுட் ஃபண்டிங் தளத்தில் விற்கறோம். இன்னைக்கு ஒரு சாதாரண சைக்கிளே 10,000 ரூபாய்க்கு குறைவா வாங்க முடியாது. நாங்க குடுக்க நினைச்ச வசதிகளை 95 சதவீதம் கொடுத்திருக்கோம்னு நினைக்கறேன். எதிர்காலத்தில் இன்னும் மேம்படுத்தப்பட்ட வசதிகளோட இந்த சைக்கிளை உருவாக்கி மக்களுக்கு கொடுக்கணும். இப்போ பெரிய அளவில் இதில் வருமானம் இல்லை. ஆனால், ஒரு நல்ல விஷயத்தை இளைஞர்களிடம் எடுத்துட்டுப் போறோம்ங்கற திருப்தி இருக்கு.” என்று முடிக்கிறார் மணிகண்டன்.

-பா.விஜயலட்சுமி

இது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா?

எடிட்டர் சாய்ஸ்

MUST READ