Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

 ' ஜெயலலிதாவுடன் சமரசமும் சமாதானமும் கிடையாது'!  -  சசிகலா புஷ்பாவின் டெல்லி பிளான்

ணிப் பெண்கள் கொடுத்த பாலியல் புகார் வழக்கில் சசிகலா புஷ்பாவின் முன்ஜாமீன் மனுவை ரத்து செய்துவிட்டது உயர்நீதிமன்ற மதுரை கிளை. ' நெருக்கடி கொடுத்தால் வழிக்கு வந்துவிடுவேன் என நினைக்கிறார் முதல்வர். சட்டப் போராட்டத்தைக் கைவிடுவதாக இல்லை' எனக் கொந்தளிக்கிறார் சசிகலா. 

சசிகலா புஷ்பாவின் எம்.பி பதவிக்காலம் முடிவடைய, இன்னும் மூன்றரை ஆண்டுகாலம் இருக்கிறது. ' பதவியை ராஜினாமா செய்துவிட்டுப் போகட்டும்' என அ.தி.மு.க தலைமை கொடுத்த நெருக்கடிக்கு அஞ்சாமல் சட்டப் போராட்டத்தில் இருக்கிறார் சசிகலா. பணிப்பெண்கள் கொடுத்த பாலியல் புகாரில், மதுரை உயர் நீதிமன்றத்தில் நேரடியாக வந்து ஆஜரானார். இந்நிலையில், மதுரை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்தார் சசிகலா. இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதியரசர் வேலுமணி, ' முன்ஜாமீன் கோரியுள்ள மனுதாரர்கள் மீதான குற்ற்றச்சாட்டு மிகக் கடுமையானது. இந்நிலையில் மனுதாரர்களுக்கு முன்ஜாமீன் வழங்கினால் அவர்கள் தலைமறைவாக வாய்ப்பிருக்கிறது. எனவே, இந்த வழக்கில் மனுதாரர்களை காவலில் எடுத்து போலீஸார் விசாரணை மேற்கொள்வது அவசியமானது என்பதால் அவர்களுக்கு ஜாமீன் மறுக்கப்படுகிறது. 

மேலும், சசிகலா புஷ்பாவின் வக்காலத்து நமுனாவில் மதுரைக்கு நேரில் வந்து அவர் கையெழுத்திட்டதாக கூறினர். ஆனால் கடந்த முறை நீதிமன்ற விசாரணையின்போது கணவர் வக்காலத்து நமுனாவை கொண்டு வந்து கொடுத்ததாகவும், அதில் தான் கையெழுத்திட்டு கணவரிடம் கொடுத்தனுப்பியதாகவும் கூறினார். இது நீதிமன்றத்தை ஏமாற்றும் செயலாகும். இது தொடர்பாக சசிகலா புஷ்பா உள்ளிட்டோர் உயர் நீதிமன்ற மதுரை கிளை பதிவாளர் போலீஸில் புகார் அளிக்க வேண்டும். அதன் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ள வேண்டும்" என அதிரடியாக தீர்ப்பு வழங்கினார். 

நீதிமன்றத்தின் உத்தரவு குறித்து, நேற்று சசிகலா புஷ்பாவை தொடர்பு கொண்டு பேசியுள்ளனர் அவரது ஆதரவாளர்கள். இதற்குப் பதில் அளித்தவர், " என்னை தீவிர எதிரியாக பார்க்க ஆரம்பித்துவிட்டார் ஜெயலலிதா. அதைப் பற்றி எனக்குக் கவலையில்லை. என்னுடைய வழக்கு விவகாரத்தை மறைப்பதற்காகத்தான் எஸ்.ஆர்.எம் பச்சமுத்து கைது சம்பவம் நடந்தது. சண்முகநாதனை ஓரம்கட்டிவிட்டு பாண்டியராஜனுக்கு கல்வி அமைச்சர் பதவி கொடுத்ததும் இதையொட்டித்தான். நீதிமன்றத்திற்கு அளிக்கப்பட்ட நமுனாவில் கையெழுத்துப் போடப்பட்டத்தில் எந்த மோசடியும் நடக்கவில்லை. இதை ஒரு பெரிய குற்றமாக பார்க்க வேண்டியதில்லை. உச்ச நீதிமன்றத்திலேயே சட்டப் போராட்டத்தைத் தொடருவேன். எவ்வளவு நெருக்கடிகள் கொடுத்தாலும் ஜெயலலிதாவுடன் சமரசமும் கிடையாது; சமாதானமும் கிடையாது" எனக் கொந்தளித்தவர், சில நிமிட இடைவெளிக்குப் பிறகு, 

" மூன்றரை ஆண்டு கால எம்.பி பதவியை முழுதாக நிறைவு செய்துவிட்டுத்தான் வருவேன். தற்போது தென்மாவட்ட மக்களுக்கான நலப் பணிகளில் தீவிர கவனம் செலுத்த இருக்கிறேன். மதுரை டூ கன்னியாகுமரி வழியிலான இரட்டை ரயில் பாதை; தூத்துக்குடி விமான நிலையத்திற்கு சிவந்தி ஆதித்தன் பெயர் சூட்டவது; குலசேகரப் பட்டினத்தில்  ராக்கெட் ஏவுதளம் அமைப்பது; தென் மாவட்டங்களின் வளர்ச்சிப் பணிகளுக்கு கூடுதல் நிதி அளிக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மத்திய அமைச்சர்கள் அருண் ஜேட்லி, சுரேஷ் பிரபு உள்ளிட்டவர்களை சந்திக்க இருக்கிறேன். தொகுதிக்கென ஏராளமான வளர்ச்சிப் பணிகளைக் கொண்டு வர இருக்கிறேன். மாற்றுக் கட்சிகளுக்கு செல்லும் எண்ணம் எதுவும் இப்போதைக்கு இல்லை. என் மீதான நெருக்கடிகளை சட்டப்படியாக எதிர்கொண்டு வெற்றி பெறுவேன். அதன்பிறகே அடுத்தகட்டம் திட்டம் பற்றி முடிவெடுப்பேன்" என விவரித்திருக்கிறார் சசிகலா புஷ்பா. 

-ஆ.விஜயானந்த் 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

வீட்டுக்கு அருகில் இருக்கும் பட்டாசுக் கடைகள் பாதுகாப்பாக இருக்கிறதா? தெரிந்து கொள்வோம்
ராஜநாகம் முதல் குரைக்கும் மான் வரை... இந்திய உயிரினங்களை அழிக்கும் சீன மருத்துவம்!
placeholder

‘ஒன்றின் கழிவு மற்றொன்றின் உணவு’ என்ற தத்துவத்தின் அடிப்படையிலானது உயிர்சங்கிலி. அந்த சங்கிலியின் பிணைப்பு பலமாக இருக்கும் வரை பாதுகாப்பாக இருக்கும். பிணைப்பின் பிடி தளர்வது பல்லுயிர் பெருக்கத்துக்கும், உயிர்சூழலுக்கும் உகந்தது அல்ல. மனிதர்கள், தாவரங்கள், விலங்குகள், நுண்ணுயிர்கள் என அனைத்துக்குமானது தான் இப்பூவுலகு. ஆனால், இது தனக்கு மட்டுமானது என்ற மனிதனின் பேராசை, உயிர் சங்கிலியை உடைத்தெறிந்து பூமியை சூடாக்கி, பருவநிலையை மாற்றி, வெள்ளம், வறட்சி என பல்வேறு தளங்களில் சிக்க வைத்து சீரழித்துக்கொண்டிருக்கிறது. எலியை பாம்பு உண்பதும், பாம்பை கழுகு தின்பதும் பல்லுயிர் பெருக்கத்தின் ஒரு அங்கம். ஆனால், இதில் ஒன்று அழிந்தாலும் அதற்கான இரை பல்கி பெருகி பல்வேறு பிரச்னைகளை தோற்றுவிக்கும். அதுதான் தற்போது நிகழ்ந்துக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் பல்வேறு உயிரினங்கள் ஆண்டுக்காண்டு அழிந்து வருகின்றன. 

MUST READ