Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'காவிரி நீர் வரும் நம்பிக்கையிலேயே மேட்டூர் அணையை திறக்கிறேன்..!' -ஜெயலலிதா

காவேரி மேற்பார்வை குழு நமக்குரிய நீரை கர்நாடகம் வழங்கிட உத்தரவு வழங்கும் என்பதன் அடிப்படையிலும்,  இந்த வருடம் வடகிழக்கு பருவமழை இயல்பானதாக இருக்கும் என்ற நம்பிக்கையின் அடிப்படையிலும், சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட உத்தரவிட்டிருப்பதாக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமாக விளங்குவது காவிரி டெல்டா பகுதி. இந்தப் பகுதியில் நெல் சாகுபடிக்கு முக்கிய ஆதாரமாக விளங்குவது காவிரி நதிநீர். கர்நாடக மாநிலத்துடன் பல ஆண்டுகளாக தொடர்ந்து வரும் காவிரி  பிரச்னையைத் தீர்ப்பதற்கு உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டு, அந்த காவிரி நடுவர் மன்றம் தனது இறுதி ஆணையை 5.2.2007 அன்று வழங்கியது.  உச்சநீதிமன்றத்தில் அரசு மேற்கொண்ட தொடர் நடவடிக்கைகளின் காரணமாக காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி ஆணை மத்திய அரசிதழில் 19.2.2013 அன்று வெளியிடப்பட்டது. எனினும், காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நதிநீர் முறைப்படுத்தும் குழு ஆகியவற்றை மத்திய அரசு இன்னமும் அமைக்காத காரணத்தால், காவிரி நீரில் நமக்குரிய பங்கை பெற நாம் உச்சநீதிமன்றத்தை நாடும் நிலையே உள்ளது. இந்த அமைப்புகள் அமைக்கப்பட வேண்டும் என  உச்சநீதிமன்றத்தில் எனது தலைமையிலான அரசால், 2013-ஆம் ஆண்டே மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு அவை இன்னமும் நிலுவையில் உள்ளன.

நடப்பு பாசன ஆண்டில், காவிரி நடுவர் மன்ற இறுதி ஆணையின்படி கர்நாடக அரசு நீரை விடுவிக்காததால், நமக்குரிய நீரை விடுவிக்கும்படி கர்நாடக அரசுக்கும், நீரை விடுவிக்க அறிவுரை வழங்கும்படி மத்திய அரசுக்கும் தமிழ்நாடு அரசால் அனுப்பப்பட்ட கடிதங்களின் அடிப்படையில், கர்நாடக அரசு நீரை விடுவிக்காததால், எனது உத்தரவின் பேரில், உச்சநீதி மன்றத்தில் 22.8.2016 அன்று இடைக்கால மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.  அந்த மனுவில், காவிரி நடுவர் மன்ற இறுதி ஆணையில் குறிப்பிட்டுள்ள அளவுகளின்படி கர்நாடகம் நீரை விடுவிக்கவில்லை என்பதை தெரிவித்து, தமிழகத்திற்கான நீரை திறந்து விட கர்நாடகத்திற்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என கோரப்பட்டது.

நமக்குத் தேவையான அளவு தண்ணீர் மேட்டூர் அணையில் கிடைக்கப் பெறாத சூழ்நிலையில், டெல்டா விவசாயிகள் நேரடி நெல் விதைப்பு மூலம் சம்பா சாகுபடி மேற்கொள்வதற்கு ஏதுவாக 64 கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான ஒரு சிறப்பு தொகுப்பு திட்டத்தை சட்டப்பேரவையில் 18.8.2016 அன்று நான் அறிவித்தேன். இந்த அறிவிப்பின்படி செயல்படுத்தப்பட்டு வரும் திட்டத்தின் காரணமாக சம்பா சாகுபடியை முழுவீச்சில் மேற்கொள்ளும் நிலையில் டெல்டா விவசாயிகள் தற்போது உள்ளனர்.

தமிழகத்திற்கு உரிய நீரை வழங்கிட வேண்டும் என தமிழக அரசால் தாக்கல் செய்யப்பட்ட மனுவினை விசாரித்த உச்சநீதிமன்றம், பில்லிகுண்டுலு நீரளவு நிலையத்தில் நாளொன்றுக்கு 15,000 கன அடி வீதம் கிடைக்கும் வகையில், 5.9.2016 முதல் 10 நாட்களுக்கு  அதன் அணைகளிலிருந்து நீரை விடுவிக்க வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு ஆணை வழங்கியது.  அதன் பின்னர், கர்நாடக அரசு தாக்கல் செய்த மனுவினை விசாரித்த உச்ச நீதிமன்றம், 12.9.2016 முதல் 20.9.2016 வரை நாளொன்றுக்கு 12,000 கனஅடி நீரை விடுவிக்க வேண்டும் எனவும், இந்த ஆணை 20.9.2016 வரையில் நடைமுறையில் இருக்கும் எனவும் உத்தரவிட்டது.  இதனடிப்படையில், பில்லிகுண்டுலு நீரளவு நிலையத்தில் 14.9.2016 வரையில் 8.92 டிஎம்சி அடி நீர் கிடைக்கப் பெற்றுள்ளது.  மேலும், உச்சநீதிமன்றம், காவேரி நடுவர் மன்ற இறுதி ஆணையின்படி, தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய நீர் அளவை கணக்கிட்டு உத்தரவு வழங்கும்படி காவிரி மேற்பார்வை குழுவிற்கு உத்தரவிட்டுள்ளது.

மேட்டூர் அணையில், 16.9.2016 அன்றைய நிலவரப்படி 84.76 அடி நீர் உள்ளது.  கர்நாடக நீர்த் தேக்கங்களிலிருந்து உச்ச நீதிமன்ற ஆணைகளின்படி, நீர் கிடைப்பதை எதிர்நோக்கியும், காவேரி மேற்பார்வை குழு நமக்குரிய நீரை கர்நாடகம் வழங்கிட உத்தரவு வழங்கும் என்பதன் அடிப்படையிலும்,  இந்த வருடம் வடகிழக்கு பருவமழை இயல்பானதாக இருக்கும் என்ற நம்பிக்கையின் அடிப்படையிலும்,  விவசாயிகள் சம்பா சாகுபடி மேற்கொள்ள ஏதுவாக 20.9.2016 முதல் பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட ஆணையிட்டுள்ளேன்" என்று கூறியுள்ளார்.

எடிட்டர் சாய்ஸ்

ஜெர்சி மாடுகள், பிரேசில் காபி, மருத்துவமனை உறுதி! ஜெயலலிதா பற்றி தோழியின் நினைவலைகள்
placeholder

அதே மாதிரி ஜெயலலிதா தன்னுடைய 10 வயதில் சிவாஜி கணேசன் முன்னிலையில் மயிலாப்பூரில் செய்த நடன அரங்கேற்றப் படங்கள் முதல் அதற்குப் பிறகான அவரது சின்ன வயசுப் படங்களை நாங்கள் தொகுத்திருந்தோம். அதை 2012 ம் ஆண்டு, எனக்கு அவரை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்த போது கொடுத்தேன். அதைப் பார்த்து ரொம்ப சந்தோஷமாகிட்டாங்க. அந்தப் படத் தொகுப்பை, தன்னோட ஹேண்ட் பேக்ல வச்சுக்கிட்டாங்க. பத்திரமா வைத்துக் கொள்வதாகவும் சொன்னாங்க. சினிமாக்காரங்க என்றால் ஈஸியாக அணுகலாம் என்கிற திரையை உடைத்து, அவங்க தனி ரூட்டைப் போட்டு, அதை மத்தவங்க ஃபாலோ பண்ற அளவுக்கு வாழ்ந்து காட்டினாங்க. குறிப்பா, சினிமா விழாக்கள், நிகழ்ச்சிகளுக்கு போக மாட்டாங்க. 

அம்மாவிடமிருந்து போன் வந்தால்...!? - உருகும் வீணை காயத்ரி
placeholder

''சமீபத்தில் கொலை மிரட்டல் விட்டப் பையனால் அம்மாவை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. கடந்த ஜூலை 27-ம் தேதி சி.எம் ஆபீஸ்ல இருந்து போன் வந்தது. அம்மா உங்களை உடனே வரச்சொன்னதா சொன்னாங்க. நான் கொஞ்சமும் யோசிக்காமல் போய் நின்னேன். பொதுவாகவே நானும், அவங்களும்தான் தனியாகத்தான் பேசிப்போம். ஆனா, அன்றைக்கு, எல்லா அதிகாரிகளும், இருந்தாங்க. அவங்க முன்னாடி, 'எப்படி இருக்கீங்க' என கேட்டார். நான் பதில் சொல்லிவிட்டு, 'நவம்பர் மாதத்தோடு என்னோட டர்ன் முடியுது' என சொன்னேன். இதற்கு அவர், எல்லோருடைய முன்னிலையிலும், அடுத்த மூன்று வருஷத்துக்கும் நீங்களே துணை வேந்தரா இருங்க என சொல்லிவிட்டு, அவருக்கு பின்னால் இருக்கும் எல்லோரையும் பார்த்து மறுபடியும்  இதையே சொன்னார். அப்போதுதான் அவர்கிட்ட, 'நான் உங்களை சந்திக்க இரண்டு வருஷமாக முயற்சி செய்துட்டு இருந்தேன். இந்த கொலை மிரட்டல் காரணமாகத்தான் உங்களை சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சிருக்கு, நான் தனி மனுஷியாக இசை பல்கலைக்கழகத்தை நடத்தி வருகிறேன்' என சொன்னேன். உடனே, சம்பந்தப்பட்டவர்களை அழைத்து, அவங்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்து கொடுங்க என சொன்னார்.  'அடுத்த முறைப் பார்க்கும்போது உங்க முகத்துல சிரிப்பை மட்டும் தான் பார்க்கணும்' என ஆறுதல் சொன்னாங்க. அந்த வார்த்தை இன்னும் என் காதில் கேட்டுட்டே இருக்கு. அதுதான் நான் அவங்களை கடைசியாகப் பார்த்தது.  அதற்குப் பிறகு அவரை பார்க்க முடியவில்லை. அவர் சொன்னது போல அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கும்போதே அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுட்டாங்க. நான் இப்போ அடுத்த ஆர்டருக்காக காத்திட்டு இருக்கேன். இன்னும் ஆர்டர் என் கைக்கு வரவில்லை''

MUST READ