Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

போராடுங்கள், உயிரை மாய்த்துக் கொள்ளாதீர்கள்..! விக்னேஷுக்கு கருணாநிதி இரங்கல்

கர்நாடக அரசைக் கண்டித்து நடந்த பேரணியில் தீக்குளித்து உயிரிழந்த நாம் தமிழர் கட்சி பிரமுகர் விக்னேஷுக்கு திமுக தலைவர் கருணாநிதி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "கர்நாடகத்தில் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்து, நடத்தப்பட்ட பேரணி ஒன்றில் கலந்து கொண்ட மன்னார்குடியைச் சேர்ந்த இளைஞர் விக்னேஷ் தீக்குளித்து மாண்ட செய்தி அறிந்து மிகவும் வருந்துகிறேன்.

எவ்வளவு தீவிரமான பிரச்னை ஆனாலும், அதற்காக உயிரோடு இருந்து வாழ்நாள் முழுதும் போராட வேண்டுமே தவிர, உயிரை மாய்த்துக் கொள்வதென்பது சோகமயமானதும், ஏற்றுக் கொள்ள முடியாததுமாகும். 

இன்றைய இளைஞர்கள் இதனை உணர்ந்து தங்களுடைய இத்தகைய போராட்ட வழிமுறைகளை வகுத்துக் கொள்வார்கள் என்று நம்புகிறேன். தீக்குளித்து மாண்ட விக்னேஷ் குடும்பத்தாருக்கும், உறவினர்களுக்கும், என்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

'சாக்கடையில் கலந்த ஜெயலலிதா ரத்தம்!'   -எம்பால்மிங் சீக்ரெட்டை உடைக்கும் மருத்துவர்கள் #VikatanExclusive
placeholder

'இருதயம் செயலிழந்து போனதற்கான காரணம் என்ன? திடீரென்று செயலிழந்து நின்று போன இருதயத்தை ஏன் மீண்டும் செயல்பட வைக்க இயலவில்லை? உலகத் தரம் வாய்ந்த உபகரணங்களையும் நிபுணத்துவத்தையும் தோல்வியைத் தழுவச் செய்த காரணங்கள் யாவை?' என்ற கேள்விகளையே மருத்துவர் பீலேயும் அப்போலோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களும் தமிழக-இந்திய மருத்துவ உலகத்தாரும் தமிழ்நாடு-மத்திய அரசுகளும் கேட்டிருக்க வேண்டும். அதற்கான பதிலைக் கண்டறிய இயன்றளவில் முயற்சியை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கான ஒரு சிறிய துரும்பு அளவிலான முயற்சியைக்கூட இவர்கள் எவரும் மேற்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

Advertisement

MUST READ

Advertisement
[X] Close