Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இந்தியாவின் முதல் மாற்றுத்திறனாளி செஸ் நடுவர்! மதுரை பெருமை

மற்றவர் மேல் நாம் வைக்கும் நம்பிக்கையை விட, நம் மீது நாம் வைக்கும் தன்னம்பிக்கைகுத்தான் மதிப்பு அதிகம். மதுரையைச் சேர்ந்த பாண்டியராஜனுக்கு அந்தத் தன்னம்பிக்கை கொடுத்த வெற்றி தான், பார்வை இழந்த அவரை, அரசு மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்ற வைத்திருக்கிறது. இந்த இடத்தை எளிதாக பெற்றுவிட வில்லை. அவரது முயற்சிகளைப் பற்றி கேட்டபோது,  

"நானும் எல்லாரையும் போல, இந்த அழகான உலகத்தை என் இரண்டு கண்காள் பார்த்து ரசிச்சவன்தான். திடீரென்று பார்வைக் குறைபாடு ஏற்பட்டு என்னுடைய 12 வது வயதில், கண் பார்வை மொத்தமா தெரியாம போய்விட்டது. அதனால் நான்கு வருஷம் படிக்காமல் வீட்டுலேயே இருந்தேன். பிறகு 7,8 வகுப்புகள் மட்டும் கண்பார்வை இல்லாதவர்கள் படிக்கும் ஸ்கூலில் சேர்ந்தேன். ஒன்பதாவது எல்லா பசங்களும் படிக்கும் ஸ்கூல்ல சேர்ந்தேன். முதல்ல என்னைச் சேர்க்க ரொம்ப யோசித்தார்கள். பிறகு, 'சரி கொஞ்ச நாள் பாக்கலாம்'னு சொல்லி எனக்கு சீட் குடுத்தார்கள். 9-ஆம் வகுப்பில் எல்லா தேர்வுகளிலும் நான்தான் முதல் மார்க் பெற்றேன். அதிலிருந்துதான் படிப்பு மேல எனக்குள் இருந்த பிடிப்பு அதிகமானது. அங்கு ஆரம்பித்த வேகம் எம்.ஏ ஆங்கிலம்.,பி.எட்.,எம்.எட்.,எம்.ஏ தமிழ்.,எம்.பில் ஆங்கிலம்.,டிப்ளோமோ சைக்காலஜி.,டிப்ளோமோ லைப் சயின்ஸ்., என்று ஓடிக்கொண்டே இருக்கிறேன்." என்கிறார்.

ஆசிரியர் பணியில் சேர்ந்தது எப்போது?

"1994வது வருடத்திலிருந்து 22 வருசமா ஆசிரியராக வேலை பார்க்கிறேன். எங்கள் பள்ளி குழந்தைகளுக்கு என்ன தேவைன்னு ஒவ்வொன்றிலும் கவனம் செலுத்துவேன். என்னோட வகுப்பில் 'ஸ்பெஷல் போர்டு' வைத்து பாடம் நடத்துகிறேன். அடுத்து, நான் டவுன்லோட் செய்து வைத்திருக்கும் புக்ஸ்ஸை சாப்ட்வேர் ரீடர்ல போட்டு மாணவர்களைக் கேட்க வைப்பேன். மாணவர்கள் எழுதிய எக்ஸாம் பேப்பரை யாராவது வாசித்து சொல்லுவார்கள். அதை வைத்து திருத்துவேன்.

செஸ் போட்டி நடுவராக இருந்தீர்களாமே?

"ஆமாம். எனக்கு சின்ன வயதிலேருந்தே செஸ் மீது ஆர்வம். அதனால் அதை நன்கு பழகினேன். 2000 ஆம் ஆண்டில் தமிழ்நாடு சதுரங்கச் சங்கம் நடத்தின தேசிய சதுரங்க நடுவர் தேர்வில் தேர்ச்சி பெற்றேன். அதனால் பல நகரங்களில் நடைபெற்ற சதுரங்கப் போட்டிக்குகளுக்கு நடுவராக இருந்திருக்கிறேன். இந்தியாவிலேயே முதல் மாற்றுத்திறனாளி செஸ் நடுவராக இருந்தது நான்தான். எனக்கு இருக்கும் இந்தத் திறமையை பள்ளி மாணவர்களுக்கும் கற்றுத் தருகிறேன். அதில் முத்துமீனா எனும் மாணவி மாநில அளவில் பரிசுகளைப் பெற்றிருக்கிறார். அவர் இப்போது படிக்கும் கல்லூரியில் செஸ் அணியின் நம்பிக்கை வீரராகவும் இருக்கிறார்

உங்களின் இந்த வெற்றிப் பயணத்திற்கு உறுதுணையாக இருந்தவர்கள்?

என் பார்வையின் ஒளியாக இருந்து, வழிநடத்தும் மனைவி மீனா. 1999- வெளிவந்த என் பேட்டியைப் பார்த்து, என்னை திருமணம் செய்துகொள்ள விரும்பினார். அதற்காக வர்கள் வீட்டில் உள்ளவர்களின் மனதை மாற்ற பல்வேறு முயற்சிகள் எடுத்தார். எங்களுக்கு ஸ்ரீநிலா என்று ஒரு பெண் இருக்கிறார்.  இவர்கள் ரெண்டு பேரும்தான் என்னோட ரெண்டு கண்கள் மாதிரி. அவர்கள் மூலமாகத்தான் இந்த உலகத்தை நான் பார்க்கிறேன் என்று உணர்ச்சியோடு அவர் கூறிய போது அவரது தன்னம்பிக்கையின் ஆழத்தை நம்மால் உணர முடிந்தது.

- வெ.வித்யா காயத்ரி
படங்கள்: சே.சின்ன துரை
(மாணவப் பத்திரிகையாளர்கள்)

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close