Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ராம்குமார் உடல் பிரேத பரிசோதனை செய்ய தடை..! உயர் நீதிமன்றம் அதிரடி

சென்னை புழல் சிறையில் மர்மமான முறையில் உயிரிழந்தத ராம்குமாரின் உடலை பிரேத பரிசோதனை செய்ய பிற்பகல் வரை சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

சென்னை பொறியாளர் சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட நெல்லை மாவட்டம், மீனாட்சிபுரம் அருகே உள்ள தேன்பொத்தை கிராமத்தை சேர்ந்த ராம்குமார் என்பவர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இரண்டு மாதங்களுக்கு மேல் சிறையில் உள்ள ராம்குமார் நேற்று மாலை தற்கொலை செய்து கொண்டதாக சிறைத்துறை தரப்பில் கூறப்பட்டது. ஆனால், ராம்குமார் தற்கொலை செய்யவில்லை, கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்று அவரது வழக்கறிஞர் ராம்ராஜ் குற்றம்சாட்டினார்.

மர்மமான முறையில் உயிரிழந்த ராம்குமார் உடல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது. அவரது உடல் பிரேத பரிசோதனை இன்று காலை 11 மணிக்கு நடப்பதாக இருந்தது. இந்த நிலையில், ராம்குமார் உடலை பிரேத பரிசோதனை செய்ய தடை விதிக்கக்கோரி வழக்கறிஞர் சங்கரசுப்புவும், ராம்குமார் மரணம் தொடர்பாக வழக்கை அவசர வழக்காக விசாரிக்க கோரி வழக்கறிஞர் விஜயேந்திரனும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். மேலும், ராம்குமார் உடலை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்ய வேண்டும் என்றும், பிரேத பரிசோதனை குழுவில் தங்களது தரப்பு மருத்துவரும் இடம் பெற வேண்டும் என்று ராம்குமார் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி சிவஞானம், ராம்குமார் உடலை பிற்பகல் 2.15 மணி வரை பிரேத பரிசோதனை செய்ய தடை விதித்த நீதிபதி, ராம்குமார் வழக்கை அவசர வழக்காக விசாரிக்கப்படும் என்று கூறினார்.
 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ