Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ராம்குமார் விவகாரம்...காவிரிக்கு சிக்கல்!- மாணவர்கள் கொந்தளிப்பு!


காவிரி விவகாரத்தில்... கர்நாடகம், தமிழக அரசிடம் பாரபட்சம் காட்டாமல் தண்ணீர் திறந்துவிட வேண்டும் எனக்கோரி சாகும்வரை உண்ணாவிரதத்தை மேற்கொண்டிருந்தனர் லயோலா கல்லூரியைச் சேர்ந்த 13 மாணவர்கள். இவர்களுடன் எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம், அரசு சட்டக்கல்லூரி போன்ற கல்விக்கூடங்களின் மாணவர்களும் உடன்வந்து இணைந்துகொண்ட இந்தப் போராட்டம், கடந்த மூன்று நாட்களாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில் தங்கள் போராட்டத்தை இன்றுடன் முடித்துக்கொள்வதாக 13 மாணவர்களும் அறிவித்தனர்.

‘‘காவிரிப் பிரச்னையைக் கண்டுகொள்பவர்கள் யாருமில்லை!’’
‘சாகும்வரை போராட்டம்’ எனத் திட்டவட்டமாக அறிவித்த அவர்களின் திடீர் முடிவின் மாற்றத்துக்குக்  காரணம் என்ன? பங்கேற்ற மாணவர் ஒருவர் கூறுகையில், “மூன்று நாட்கள் பட்டினியாக இருந்தோம். காவிரியைத் தன்வசம் வைத்துக்கொண்டிருக்கும் கர்நாடகாவுக்குத்தான் எங்கள் உண்ணாவிரதம் எட்டவில்லை. நம் மாநில அரசும் இந்த மூன்று நாட்களில் உண்ணாவிரதம் குறித்தோ, காவிரி குறித்தோ அடுத்தகட்ட நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துவதாகத் தெரியவில்லை. எங்கள் உண்ணாவிரதம் அவர்களுக்கு வெறும் வேடிக்கையாகிவிட்டது. இனிமேல், உண்ணாவிரதத்தால் முடிவை எட்டமுடியாது என்பது புரிந்தது. மேலும், ராம்குமார் விவகாரம் மொத்த தமிழகத்தையும் திசை திருப்பிவிட்டதால்... காவிரிப் பிரச்னையைத் தற்போது கண்டுகொள்பவர்கள் யாருமில்லை. இந்த மூன்று நாட்களில் பெரும் கட்சிகளைத் தவிர்த்து, விவசாயக் கட்சிகளும், வைகோ, முத்தரசன், இயக்குநர் ராஜுமுருகன் உள்ளிட்டோரும் எங்களை நேரில் வந்து சந்தித்து  முழு ஆதரவு தெரிவித்தனர். அவர்களின் அறிவுரையின் பேரில் தற்காலிகமாக உண்ணாவிரதத்தைக் கைவிடுகிறோம். அடுத்தகட்ட போராட்டத்தை வேறுவிதமாக எடுத்துச்செல்ல இருக்கிறோம்’’ எனத் தெரிவித்தார்.

- ஐஷ்வர்யா

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ