Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ராம்குமார் மரணத்துக்கு சிறைத்துறையினரின் அலட்சியமே காரணம்! - இல.கணேசன்

கும்பகோணம்: ராம்குமார் மரணத்துக்கு சிறைத்துறையினரின் அலட்சியமே காரணம் என்றார் பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன்.

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் செய்தியாளர்களை சந்தித்த பா.ஜ.க.வின் தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன், ''தமிழகத்தில் பெண்கள் மீதான வன்முறைகள் மிகவும் வேதனைக்குரியதாகும். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு திருப்திகரமாக இல்லை என்றுதான் கூற வேண்டும்.

தமிழக அரசு கூடுதல் கவனம் செலுத்தி, சிறையில் பாதுகாப்பையும், கண்காணிப்பையும் அதிகரிக்க வேண்டும். சுவாதி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ராம்குமார் தற்கொலைக்கு சிறைத்துறையினரின் அலட்சியமே காரணம். ஒரு சம்பவத்தின் குற்றவாளியோ, பாதிக்கப்பட்டவரோ இறந்தால், அதற்கு சாதியை மையப்படுத்தக் கூடாது. இதை அனைத்து அரசியல் கட்சியினரும் உணர வேண்டும்.

காவிரி பிரச்னை தொடர்பாக கர்நாடகத்தில் நிகழ்ந்த வன்முறைகளுக்கு அங்குள்ள எதிர்க்கட்சிகளே காரணம் என முதல்வர் சித்தராமையா கூறுவது அரசியல் லாபத்துக்காவே. பா.ஜ.க. ஒருபோதும் இத்தகைய கீழ்த்தரமான செயல்களை செய்யாது. நதிநீர் பிரச்னைக்கு நதிநீர் இணைப்பு ஒன்றுதான் தீர்வு.

ஆந்திராவில் கோதாவரி, கிருஷ்ணா ஆறுகள் இணைக்கப்பட்டுள்ளன. அதுபோல், கிருஷ்ணா, காவிரி ஆறுகளையும் இணைக்க வேண்டும். மேலும், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஆறுகளையும் இணைக்க வேண்டும். காஷ்மீரில் ராணுவத்தினர் மீது நடந்த தாக்குதலின் தொடர்ச்சியாக, அனைத்து நாடுகளும் ஒன்று சேர்ந்து பாகிஸ்தானுக்கு ஒட்டுமொத்தமாக பாடம் புகட்ட வேண்டும்" என்றார்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close