Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வாட்டாள் நாகராஜ் : தியேட்டர் எரிப்பும், கபாலி எதிர்ப்பும், பின் காவிரி போராட்டமும்


ர்நாடகா, கன்னட மொழி இரண்டுக்காகவும் பல ஆண்டுகளாகக் குரல் கொடுப்பதாகச் சொல்லிக்கொள்ளும் வாட்டாள் நாகராஜ். கர்நாடகா சலுவாலி வட்டாள் பக்‌ஷா (Karnataka Chaluvali Vatal Paksha )என்ற அமைப்பின் தலைவராக இருக்கிறார். கர்நாடகாவில் 6 முறை எம்.எல்.ஏ பதவி வகித்தவரான வாட்டாள் நாகராஜ் கர்நாடகாவின் கலகக்காரர்களில் முக்கியமானவர். கர்நாடகாவுக்குள் தமிழர்கள் வாழ்வதற்கு எதிராகவும், தமிழ் திரைப்படங்கள் திரையிடப்படுவதற்கு எதிராகவும் 40 ஆண்டுகாலமாகச் செயல்பட்டு வருபவர் வாட்டாள் நாகராஜ்.

தியேட்டரை எரித்தார்

1962-ம் ஆண்டு பெங்களூருவில் உள்ள அலங்கார் டாக்கீஸ் தியேட்டரில் இந்தி திரைப்படம் வெளியிடப்பட்டது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அந்தத் தியேட்டரையே எரித்தவர்கள் வாட்டாள் நாகராஜூம் அவரது ஆதரவாளர்களும்தான். இதன் பிறகுதான் கர்நாடகாவில் வாட்டாள் நாகராஜ் பரவலாக அறியப்பட்டார்.
1966-ல் கன்னடா சலிவாலிகரு என்ற ஒரு அமைப்பைத் தொடங்கினார். கன்னட மொழி பேசும் மக்களுக்கான பிரச்னைகளுக்காகப் போராடுவதுதான் இந்த அமைப்பின் நோக்கம். மத்திய அரசில் கன்னட மொழி பேசுபவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்பதும் அவர்களின் கோரிக்கை.
அதே போல 1980-களில் கர்நாடகாவில் சமஸ்கிருத மொழியை முதல் மொழியாக அங்கீகரிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கன்னட நடிகர் ராஜ்குமார் தலைமையில் போராட்டங்கள் வெடித்தன. இந்தப் போராட்டங்கள் மூலம் வாட்டாள் நாகராஜ் மேலும் பரவலாக அறியப்பட்டார்.


எதற்கெடுத்தாலும் முழு அடைப்பு


கர்நாடகா மாநிலத்துக்காகவும், கன்னட மொழிக்காகவும் இதுவரை 10 ஆயிரத்துக்கும் அதிகமான போராட்டங்களை நடத்தி உள்ளார். ஆண்டுதோறும் 200 முதல் 250 போராட்டங்களை நடத்தி வருகிறார். காவிரி விவகாரம், மகாராஷ்டிரா உடனான எல்லைப் பிரச்னை என எதற்கெடுத்தாலும் முழு அடைப்பு நடத்துவதும் இவரது பாணி. இதுவரை 2 ஆயிரத்துக்கும் அதிகமான முழு அடைப்பு போராட்டங்களை நடத்தியிருப்பதாகப் பெருமையுடன் கூறுகிறார் வாட்டாள் நாகராஜ்.


கபாலிக்கு எதிராகப் போராட்டம்

கடந்த ஜூலையில் கபாலி படம் வெளியானபோது, பெங்களூரில் தமிழ் படம் வெளியிடக்கூடாது என்று வலியுறுத்தி போராட்டம் நடத்தினார். பல தமிழ்படங்கள் வெளிவரும் போது அதற்கு எதிராக போராட்டங்களை நடத்தி விட்டு பின்னர் அடங்கி விடுவார்.
தன் இமேஜை உயர்த்திக்கொள்ள விதமான வித்தியாசமான போராட்டங்களை நடத்துவதும் இவரது ஸ்டைல். ஒருமுறை ஆட்சியாளர்களைக் கிண்டலடிக்கும் விதமாக கர்நாடகா அரசால் தரப்படும் ராஜ்யோத்சவா விருதுகளை கழுதைகள், நாய்கள், எருமைகள், பசுக்களுக்கு வழங்குவதாக அறிவித்தார். மனிதர்களை விட அவைகள் கடினமாக உழைப்பதாகவும், ஒழுக்கம் உள்ளவையாகவும் இருப்பதாகவும் ஆட்சியாளர்களை கிண்டலடித்தார்.

 


போராட்டம் என்ற பெயரில் மோசடி

காவிரி பிரச்னையில் அவரது லேட்டஸ் வன்முறைப் போராட்டத்தால் கர்நாடகா அரசுக்கு வருமானத்தை அள்ளித்தரும் சிலிக்கான் வேலியில் இருக்கும் சாப்ட்வேர் நிறுவனங்கள் பெரும் இழப்பைச் சந்தித்தன. இதனால், வாட்டாள் நாகராஜூக்கு கர்நாடகாவில் ஒரு தரப்பு இளைஞர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இன்னொரு சாரார்,  கர்நாடகாவுக்கும், கன்னட மொழிக்கும் ஆதரவான போராட்டங்களால், அவர் கன்னட மொழியைப் பயன்படுத்தித் தன்னைத்தானே புகழ்தேடிக்கொள்வதும், ஆட்சியாளர்களிடம் பணம் கறப்பதற்காகவும் இது போன்று மோசடிகளில் ஈடுபடுவதாகவும் சொல்கிறார்கள்.  


-கே.பாலசுப்பிரமணி

 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ