Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ராம்குமார் பிரேத பரிசோதனை வழக்கில் 3வது நீதிபதி அறிவிப்பு!

சென்னை: ராம்குமார் பிரேத பரிசோதனை தொடர்பான வழக்கை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் அமர்வு விசாரிக்கும் என்று உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு அறிவித்து உள்ளது.

சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்ட ராம்குமார் கடந்த 18ம் தேதி மர்மமான முறையில் இறந்தார். சிறையில் மின் கம்பியை வாயால் கடித்து அவர் தற்கொலை கொண்டதாக சிறைத்துறை நிர்வாகம் அறிவித்தது. ஆனால் அவரது மரணத்தில் சந்தேகங்கள் இருப்பதாக ராம்குமாரின் உறவினர்கள் புகார் தெரிவித்தனர்.

சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் ராம்குமார் உடல் வைக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று 4 பேர் கொண்ட மருத்துவக் குழுவினர் ராம்குமார் உடலை பிரேத பரிசோதனை செய்வதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. அந்த மருத்துவக் குழுவில் கே.எம்,சி.யைச் சேர்ந்த செல்வக்குமார், ராயப்பேட்டையில் உள்ள பிரேத பரிசோதைனை நிபுணர்களான மணிகண்டன், வினோத் ஆகியோருடன் இணைந்து ஸ்டான்லி மருத்துவமனையின் மருத்துவர் ஒருவரும் இடம்பெற்றிருந்தார். மேலும், பிரேத பரிசோதனையை வீடியோ பதிவு செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.

இந்நிலையில், ராம்குமார் தந்தை பரமசிவம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சங்கரசுப்பு மேல்முறையீடு செய்தார். அதில், தாங்கள் கூறும் மருத்துவர்களை நியமிக்க வேண்டும். நீதிபதியை மாற்ற வேண்டும் என்று கூறி இருந்தார். இதனை நேற்று மாலை அவசர வழக்காக நீதிபதிகள் குளுவாடி ரமேஷ், வைத்தியநாதன் அமர்வு விசாரித்தது. அப்போது, 2 நீதிபதிகள் அமர்வில் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை.

அதனால், ''இந்த வழக்கை 3வது நீதிபதியின் விசாரணைக்கு பரிந்துரை செய்கிறோம். இந்த வழக்கை தலைமை நீதிபதிக்கு அனுப்பி வைக்கும்படி உயர் நீதிமன்ற பதிவுத்துறைக்கு உத்தரவிடுகிறோம். 3வது நீதிபதி விசாரித்து இறுதி தீர்ப்பை பிறப்பிக்கும் வரை, ராம்குமாரின் உடலை பிரேத பரிசோதனை செய்யக் கூடாது" என்று நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறி இருந்தனர்.

இதையடுத்து, ராம்குமார் பிரேத பரிசோதனை தொடர்பான வழக்கை நீதிபதி கிருபாகரன் அமர்வு விசாரிக்கும் என்று சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு இன்று காலை அறிவித்தது. இதை தொடர்ந்து, இந்த வழக்கு 3வது நீதிபதி கிருபாகரன் அமர்வு முன் இன்று பிற்பகல் விசாரணைக்கு வர உள்ளது.

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

திருப்பதியிலிருந்து திருமலைக்கு நடந்து செல்பவர்களின் கவனத்துக்கு..! 

MUST READ