Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தண்ணீர் திறக்க முடியாது: கர்நாடக அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு

 

இன்று மாலை பெங்களூருவில் காவிரி நீர் பங்கீடு பிரச்னை குறித்து அனைத்துக்கட்சிக் கூட்டம் நடைபெற்றது. அதில், கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடக்கூடாதென கர்நாடகாவில் உள்ள அனைத்து கட்சிகளின் சார்பில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.இது பற்றிய வழக்கு உச்சநீதி மன்றத்தில் நடைபெற்றுக்கொண்டு இருக்கும் போது கர்நாடக அரசு இப்படி முடிவு எடுத்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. 

நேற்று காவிரி மேலாண்மை வாரியத்தை 4 வாரத்தில் அமைக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், இன்று முதல் செப்டம்பர் 27ஆம் தேதி வரை 6 ஆயிரம் கனஅடி நீர் தமிழகத்திற்கு திறக்க கர்நாடகா அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

50 டிஎம்சி தண்ணீரை திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிடக்கோரி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால மனு ஒன்றை தாக்கல் செய்தது. உச்ச நீதிமன்றம் கடந்த 5ஆம் தேதி, தமிழ்நாட்டுக்கு வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடி வீதம் 10 நாட்களுக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடுமாறு கர்நாடகத்துக்கு உத்தரவிட்டது. மேலும் இந்த பிரச்னை தொடர்பாக இரு மாநிலங்களும் காவிரி மேற்பார்வை குழுவை அணுகலாம் என்றும் கூறியது.

வழக்குகள் இப்படி தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டு இருக்க, கர்நாடக அரசு இப்படி முடிவு எடுத்து இருப்பது, இரு மாநிலங்களுக்கு இடையே இருக்கும் உறவை மேலும் பலவீனபபடுத்தும். 

 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ