Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ரஜினியை சந்தித்தது எதற்காக? திருநாவுக்கரசர் விளக்கம்

நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து பேசியது ஏன் என்பது குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியில் இருந்து ஈவிகேஎஸ் இளங்கோவன் ராஜினாமா செய்ததை தொடர்ந்து, புதிய தலைவராக திருநாவுக்கரசரை நியமித்து கட்சி மேலிடம் அறிவித்தது. இதைத் தொடர்ந்து, மாநில தலைமையின் பொறுப்பை அண்மையில் திருநாவுக்கரசர் ஏற்றுக் கொண்டார். அவருக்கு கட்சியின் முன்னாள் தலைவர்கள் நேரில் வாழ்த்து தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து, திமுக தலைவர் கருணாநிதி, எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட கூட்டணிக்கட்சித் தலைவர்களையும் திருநாவுக்கரசர் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்று வருகிறார். இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்தை போயஸ் கார்டன் இல்லத்தில் திருநாவுக்கரசர் இன்று சந்தித்து பேசினார். அப்போது, அவருக்கு ரஜினிகாந்த் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

இந்த நிலையில், சென்னை சத்தியமூர்த்திபவனில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய திருநாவுக்கரசர், நடிகர் ரஜினிகாந்த் உடனான சந்திப்பில் அரசியல் இல்லை என்றும், நட்பு அடிப்படையில் அவரை சந்தித்தேன் என்றும் விளக்கம் அளித்தார்.

மேலும், உள்ளாட்சித்தேர்தல் குறித்து திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை செய்தேன் என்றும், திமுக- காங்கிரஸ் உடனான கூட்டணி தொடர்கிறது என்றும் கூறினார். 

மேலும் அவர் கூறுகையில், "உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி கர்நாடகா அரசு தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும். காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு உடனடியாக அமைக்க வேண்டும். காவிரி விவகாரத்தில் நிரந்தர தீர்வு காண மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். காவிரி விவகாரம் தொடர்பாக தமிழக அரசு அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டினால் காங்கிரஸ் கட்சி பங்கேற்கும் என்று தெரிவித்தார். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close