Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

குடிகாரக் கணவனுக்கு நடந்த உருட்டுக்கட்டை பூஜை... மரணத்தில் முடிந்த அவலம்!

தாலிக்கட்டிய கணவன் என்று கூட பாராமல் குடித்து விட்டு தகராறு செய்த கணவனை மனைவியே கொலை செய்த சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை திரு.வி.க நகர். கே.சி. கார்டனை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். ரியல் எஸ்டேட் அதிபர். இவருக்கு நிர்மலாதேவி என்ற மனைவியும், லோகேஸ்வரன், லோகப்பிரியன் என்ற மகன்கள் உள்ளனர். லோகேஸ்வரன் பொறியியல் படித்துள்ளார். லோகப்பிரியன் 7ம் வகுப்பு படிக்கிறார். தினமும் குடித்து விட்டு வீட்டுக்கு வரும் ரவிச்சந்திரனால் குடும்பத்தில் பிரச்னை தலைவிரித்தாடியது. இந்நிலையில் நேற்றும் ரவிச்சந்திரன், குடித்து விட்டு வீட்டுக்கு வந்தார். வழக்கம் போல கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது நிர்மலாதேவி ஆத்திரத்தில் ரவிச்சந்திரனை உருட்டுக்கட்டையால் தாக்கினார். இதில் அவரது முகம் சிதைந்தது. ரத்தவெள்ளத்தில் மிதந்த அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அவர் இறந்து விட்டார். இதுகுறித்து திரு.வி.க.நகர் போலீஸார் விசாரணை நடத்தி நிர்மலாதேவியை கைது செய்தனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், "குடிப்பழக்கத்தால் கணவன், மனைவிக்கு இடையே தகராறு நடந்துள்ளது. குடிபோதையில் இருந்த ரவிச்சந்திரனை நிர்மலாதேவி உருட்டுக்கட்டையால் தாக்கியதாக எங்களிடம் கூறியுள்ளார். அப்போது வீட்டிலேயே இரண்டு மகன்களும் இருந்துள்ளனர். ஆனால் அவர்களுக்கு இந்த சம்பவத்தில் தொடர்பு இல்லை என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. கொலை சம்பவம் நடந்த போது இருவரும் செல்போனில் கேம் விளையாடியதாக தெரிவித்துள்ளனர்" என்றனர். 

எஸ்.மகேஷ்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close