Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சிறை முதல் பிணவறை வரை.... ராம்குமார் வழக்கில் கசிந்த ரகசியங்கள் !


சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார் மர்ம மரணம் அடைந்த விவகாரத்தில் போலீசாரும், சிறை அதிகாரிகளும் தொடர்ந்து பல தகவல்களை முன்னுக்குப் பின் முரணாகச் சொல்லி வருகின்றனர். 

முதல் வீடியோ 

கைது செய்யப்பட்ட போது ராம்குமார் பிளேடால் தனது கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றதாக தகவல் வெளியானது. 'ராம்குமார், தன்னுடைய கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற போது எடுக்கப் பட்ட படம் இது' என்று சில படங்களும், வீடியோவும் வெளியானது. கைதின் போது தனிப்படை போலீசார் தவிர்த்து வேறு யாரும் இல்லாத சூழலில் கைது ஆபரேசனின் போது எடுக்கப்பட்ட படமானது வெளியானது வியப்பின் உச்ச கட்டம். ''நான் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயலவில்லை'' ராம்குமார் மறுத்த தாக பின்னர் தகவல் வெளியானது. 

சிறைக்குள் எடுக்கப்பட்ட படமா?

'சிறைக் கட்டமைப்பையும் வெளியிடக் கூடாது என்பதால் சிறைக்குள் செல்போன், கேமரா போன்றவைகளுக்கு தடை விதிக்கப் படுகிறது. ஆனால், ராம்குமார், ஒயரை கடித்து தற்கொலைக்கு முயன்றார். அந்த ஒயர்தான் இது என்று ஒரு படம் சிலரால் கசியவிடப்பட்டது. அந்தப் படமும் சர்ச்சையை ஏற்படுத்த "இல்லை, இல்லை... இது சிறையில் உள்ள 'சிறார் கூர்நோக்கு மைய வளாகம்' என்று இன்னொரு தகவல் வெளிக் கிளம்புகிறது.

மருத்துவமனை பதிவேடு

இப்போது, ராம்குமார் உடல் அரசு ராயப்பேட்டை மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டபோது, ஏ.ஆர். என்ட்ரி (அட்மிஷன் ரிஜிஸ்டர்டு) காப்பியின் நகல், சமூக வலைதளங்களில் பரவியது. இதனால், ராம்குமார் உடலில் இருந்த சிராய்ப்புகள், காயங்கள் குறித்த தகவல்களும், அவரது மரணத்துக்கு மின்சார ஷாக் காரணம் என்ற மொத்த விபரமும் வெளியானது. இவை தங்களுக்குச் சாதகமாக இருக்கும் என்று போலீஸாரில் குறிப்பிட்ட சிலர்தான் இதை கசிய விட்டனர். ஆனால், இதுவே அவர்களுக்கு எதிராகத் திரும்பி விட்டது. போலீஸார் அடித்த தால்தான் உடலில் காயங்கள்- சிராய்ப்புகள் ஏற்பட்டன ராம்குமார் தரப்பினர் கூறுகின்றனர். 

பூமாராங்க் ஆன அஸ்திரங்கள்

வழக்கில் கைதான நபர் ஒருவர் குற்றவாளி என நிரூபிக்கப் படும் வரையில் அல்லது முக்கிய வழக்கு தொடர்பான அடையாள அணிவகுப்பு முடியும் வரையில், அவரது படத்தை வெளியிடக் கூடாது என்கிற விதிமுறைகள் ராம்குமார் விவகாரத்தில் மீறப்பட்டே வந்துள்ளது.

ராம்குமார் விவகாரத்தில் ஆரம்பத்தில் இருந்தே போலீஸார் கடும் குழப்பத்தில் இருக்கின்றனர். ''ப்ளீஸ் எங்களை நம்புங்கள்'' என்று கெஞ்சாத குறையாக போலீஸார் அவ்வப்போது வெளியிட்ட ஆவணங்கள் அவர்களுக்கு எதிராகவே பூமாராங்க் போல திரும்பி விட்டன என்பதுதான் உண்மை. 

-ந.பா.சேதுராமன்


 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

MUST READ