Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மருத்துவமனையில் ஜெயலலிதா நலமாக உள்ளார்! க்ரீம்ஸ் ரோட்டில் குவிந்த தொண்டர்கள்!


வியாழக்கிழமை இரவு போயஸ் கார்டனில் தமிழக முதல்வர் ஜெயலலிதா காவிரி பிரச்னை குறித்த ஆலோசனை கூட்டத்தை கூட்டியுள்ளார். அதில் காவல் துறை உயர் அதிகாரிகள்,  துறை செயலாளர்கள் கலந்துக் கொண்டனர். கூட்டம் நடைப்பெற்றுக் கொண்டிருக்கும்போதே  9.30 மணியளவில் ஜெயலலிதாவிற்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டு இருக்கிறது.

முதலில் தேனாம்பேட்டை அப்போலோ மருத்துவமனையில் அவரை அனுமதிக்கலாம் என்று முடிவு செய்து இருக்கின்றனர். ஒரு சிறிய ஆலோசனைக்கு பின், 10. 15 மணிக்கு அவரை கிரீம்ஸ் ரோடு  அப்போலோவில் அனுமதித்து இருக்கிறார்கள்.

 

 

நள்ளிரவு முதலே தொண்டர்கள் க்ரீம்ஸ் ரோட்டில் குவிந்த வண்ணம் இருந்தனர். நிலைமையை சமாளிக்க போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். தற்போது முதலமைச்சர் ஜெயலலிதா நலமாக இருப்பதாகவும், மருத்துவர்கள் தொடர்ந்து அவர் உடல்நிலையை கண்காணித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close