Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

முதல்வர் தினம் 20 மணி நேரம் உழைப்பதால் உடல்நலக்குறைவு ஏற்பட்டது..!’ - நாஞ்சில் சம்பத் #Jayalalithaa

வியாழக்கிழமை இரவு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் தமிழக முதல்வர் ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இது குறித்து நம்மிடம் பேசிய, அதிமுக செய்தி தொடர்பாளர் நாஞ்சில் சம்பத், “'24 மணி நேரத்தில் 20 மணி நேரம் உழைப்பதால் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான தீர்ப்பை பெற்றுத்தந்தது, மெட்ரோ ரயில், ஏழை மாணவர்களுக்கான நலத்திட்ட உதவி என இரு நாட்களாக வேலைப்பளு அதிகம். நேற்று இரவு 7மணி அளவில் கூட அம்மா அவர்கள் உள்ளாட்சி மன்ற தேர்தல் பிரச்சார யுக்திகள் குறித்து ஆலோசித்தார். நல்ல நிலையில்தான் பேசினார். விசையறு பந்து, நசையறு மனமும் உடையவர் மீண்டு வருவார்' என்றார்.

மற்றொரு செய்தி தொடர்பாளர் சி. ஆர். சரஸ்வதி, அம்மாவிற்கு அவர்களுக்கு அடிக்கடி சளி பிடித்துக்கொள்ளும். எதிர்ப்பு சக்தி குறைவு. அதனால்தான். மற்றபடி ஒன்றுமில்லை. விரைவில் டிஸ்சார்ஜ் ஆகிவிடுவார். நான் திருப்பூரிலிருந்து  சென்னைக்கு வந்து கொண்டிருக்கிறேன்” என்றார்.

- ஐஷ்வர்யா | படங்கள் : ஆ. முத்துக்குமார்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

திருப்பதியிலிருந்து திருமலைக்கு நடந்து செல்பவர்களின் கவனத்துக்கு..! 

MUST READ