Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

’நான் நலமாக இருக்கிறேன்..!’ உத்தரவிட்ட ஜெ... கிளம்பிய மந்திரிகள்

சென்னை அப்பலோ மருத்துவமனையில்  நேற்று இரவு அனுமதிக்கபட்ட முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை சீராகி வருகிறது. இன்று காலை அவரை அப்போலா மருத்துவ குழுமத்தின் தலைவர் பிரதாப் சி.ரெட்டி, மற்றும் அவருடைய மகள் பிருந்தா ஆகியோருடன் ஜெயலலிதாவிற்கு மருத்துவம் செய்த டாக்டர் குழு  ஆலோசனை செய்தார்கள்.

கிரிம்ஸ் ரோடு முழுவதும் அ.தி.மு.கவினர் குழுமி இருந்தனர். மருத்துவமனை வளாகம் முழுவதும், அ.தி.மு.க நிர்வாகிகளால் ,நிரம்பி இருந்தது. ஜெயலலிதாவின் அறையில் சசிகலா மட்டும் இருந்து வருகிறார். இன்று திடீர் என அமைச்சர் பன்னிர்செல்வத்திடம் ஜெயலலிதா, “ நான் நன்றாக தான் இருக்கிறேன்.கட்சிகாரர்கள் கூட்டத்தை கூட்டி  டென்சனை ஏற்படுத்த வேண்டாம். அனைவரும் உடனே இங்கிருந்து வெளியேற சொல்லுங்கள்” என்று உத்தரவு போட்டுள்ளார். அவரும் பரபரப்புடன் வெளியே வந்து, அறையின் வாசலில் நின்ற அமைச்சர்களிடம் இந்த தகவலை பாஸ் செய்ய, அனைவரும் அங்கிருந்து உடனடியாக வெளியே வந்துவிட்டார்கள். மருத்துவ மனையில் இருந்த கட்சிகாரர்கள் அனைவரும் ஒவ்வொருவராக வெளியேற துவங்கிவிட்டார்கள். ஜெயலலிதாவிற்கு நிமோனியா காய்ச்சல் இருக்கும் என்று மருத்துவர்கள் சந்தேகபடுவதால், அவருக்கு அனைத்து சோதனைகளும் நடைபெற்றது. அதே போல கால்விரலில் சிறு காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஜெ., விற்கு சக்கரை நோய் இருப்பதால், அந்த காயம் குணமடைய தாமதம் ஆகிறது எனவும் கூறப்படுகிறது.

ஜெ.,வின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு இருப்பதால், அவர் “இன்றே நான் வீட்டிற்கு செல்கிறேன்” என்று மருத்துவர்களிடம் கூறியுள்ளார். ஆனால் பிரதாப் சி ரெட்டி, இன்று ஒரு நாள் மருத்துவமனையின் கண்காணிப்பில் இருந்துவிட்டு நாளை வீட்டிற்கு செல்லுங்கள் என்று கூறியுள்ளார்கள்.சசிகலாவும் அதையே ஜெ.விடம் வலியுறுத்துள்ளார். இன்று மதிய உணவை மட்டும் ஜெயலலிதா சாப்பிட்டுள்ளார். நேற்று இரவே சென்னையின் புகழ்பெற்ற  சிறுநீரக நிபுணர் ஒருவர் ஜெயலலிதாவை அப்போலா மருத்துவமனையில் சந்தித்து பரிசோதனை செய்துள்ளார்.

ஜெ.,வின் உடல்நிலை பாதிப்பு குறித்த செய்திகளை டெல்லி தொலைக்காட்சிகளும் முக்கியத்துவம் கொடுத்து ஒளிப்பரப்பி உள்ளன. டெல்லியில் இருக்கும் அ.தி.மு.க புள்ளிகள் இந்த செய்திக்கு கொஞ்சம் முக்கியதுவம் கொடுங்கள் என்று சொல்லியுள்ளார்களாம்.

- எஸ்.கிருபாகரன், அ.சையது அபுதாஹிர்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
Advertisement
[X] Close