Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தாக்குதல்... மோதல்... கலவரம்...! கோயமுத்தூர் நிலவரம்

கோவை : கோவையில் இந்து முன்னணி நிர்வாகி படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து, கோவையில் அமலான பந்த் போராட்டம் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது. கடை உடைப்பு, மோதல் என கோயமுத்தூரின் திக் திக் நிமிடங்கள் கோவை வாசிகளை பதைபதைக்க வைத்துள்ளது.

கோவையில் இந்து முன்னனி நிர்வாகி சசிக்குமார் கொலை செய்யப்பட்டதை கண்டித்து, இன்று கோவை, திருப்பூரில் கடுமையான போராட்டங்கள் நடந்து வருகின்றன. நள்ளிரவு பந்த் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்ட போதும், வழக்கம்போல் இன்று காலையில் கடைகள் திறக்கப்பட்டன. இதையடுத்து கடைகளை மூட இந்து முன்னணியினர் வற்புறுத்தியதையடுத்து கடைகள் அடைக்கப்பட்டன.  தொடர்ந்து கோவை திருப்பூரில் இயங்கிய அரசு பேருந்துகள் கல்வீசி தாக்கப்பட்டன. இதையடுத்து பேருந்து போக்குவரத்தும் நிறுத்தப்பட்டன. ஆட்டோ, கார்களின் இயக்கமும் பல இடங்களில் நிறுத்தப்பட்டிருந்தது.


இந்த சம்பவத்தால் கோவையில் பதற்றமான சூழல் உருவானது. இதையடுத்து முக்கிய இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டனர். சசிக்குமார் உடல் வைக்கப்பட்ட அரசு மருத்துவமனை முன்பு ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குவிந்தனர்.  இதையடுத்து அந்த சாலையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டனர்.

இந்நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் இருந்து டவுன் ஹால் நோக்கி ஊர்வலமாக சென்றவர்கள், சாலையின் இருபுறமும் இருந்த கடைகள் மீது தாக்குதல் நடத்தினர். ஆட்டோக்கள், இரு சக்கர வாகனங்கள் என கண்ணில் பட்டவை எல்லாவற்றையும் தாக்கினர். இதனால் அங்கு அசாதாரண சூழல் நிலவியது. இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் இந்த தாக்குதல் நடந்ததால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.


இரு தரப்பினரும்  நேருக்கு நேர் மோதிக்கொள்ளும் சூழலும் ஏற்பட்டது. இரு தரப்பினரும் கல் வீசி தாக்குதல் நடத்திக்கொண்டனர். இதில் போலீஸ் ஏட்டு உட்பட சிலர் காயமடைந்தனர். இதையடுத்து போலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இதையடுத்து போலீஸ் பாதுகாப்புடன் கோவை அரசு மருத்துவமனையில் இருந்து சசிக்குமார் சடலம் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. மாநகர சாலைகளில் 10 கி.மீ தூரம் சசிக்குமாரின் உடல் ஊர்வலமாக அவரது வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டு வருகிறது. உடல் செல்லும் வழியெங்கும் பூட்டியிருந்த கடைகள் அனைத்தும் அடித்து உடைக்கப்பட்டது. நூற்றுக்கணக்கான வாகனங்களில் ஊர்வலத்தில் இந்து முன்னணியினர் பங்கேற்றனர்.

கோவையில் அடுத்தடுத்த நிகழ்வுகளால் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில் கோவையில் தேவையற்ற பதற்றத்தை தடுத்து அமைதியை நிலை நாட்டப்பட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

- ச.ஜெ.ரவி,

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

பரப்பன அக்ரஹாரா சிறை முதல் அப்போலோ அறை வரை...! - ஜெயலலிதாவின் இரண்டு வருட டைம்லைன் #2YearsOfBangaloreVerdict
placeholder

தமிழகமே எதிர்பார்த்துக்கொண்டிருந்த வழக்கில், இரண்டு ஆண்டுகளுக்கு முன் இதே நாளில்தான் தீர்ப்பு வந்தது. வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாகத் தொடரப்பட்ட அந்த வழக்கில், அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு, நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்து, பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. தீர்ப்பு வந்து 731 நாட்கள் ஆகிவிட்டன. அந்த வழக்கிலிருந்து அவர் விடுதலையும் செய்யப்பட்டு, அதன்பின் ஒரு பொதுத் தேர்தலில் மீண்டும் வென்று முதல்வராகவும் பொறுப்பேற்றுவிட்டார். எல்லாம் அவருக்கு நன்றாகப் போய்க்கொண்டிருந்தபோது, ஒரு வியாழக்கிழமை இரவு உடல்நிலை சுகவீனம் அடைந்து அப்போலோவில் அனுமதிக்கப்பட்டார்.

MUST READ