Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

விசாரணை படத்தை விஞ்சும் 'லாக்அப்' மரணங்கள்! அதிரும் 'ஐ விட்னஸ்' வீடியோ

சென்னை துரைப்பாக்கம், மேட்டுக்குப்பம், குமரன்குடில், சக்திசீனிவாச நகரில் கடந்த 18ம் தேதி இன்ஜினீயர் சிநேகலதாவிடம் ஆட்டோவில் வந்த கொள்ளை கும்பல் செயினைப் பறிக்க முயற்சித்தது. இந்த வழக்கு தொடர்பாக சிந்தாரிப்பேட்டையைச் சேர்ந்த மீன்குழம்பு கார்த்திக், அவரது கூட்டாளி அருணாச்சலம் ஆகியோரிடம் கண்ணகி நகர் காவல் நிலையத்தில் போலீஸார் விசாரித்தனர். அப்போது கார்த்திக் இறந்து விட்டார். அவரை கொலை செய்து விட்டதாக உறவினர்கள் தெரிவித்தனர். கண்ணகி நகர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டதோடு பெட்ரோல் குண்டுகளையும் வீசினர். மரணம் குறித்து விசாரிக்க மாஜிஸ்திரேட் சச்சிதானந்தம் நியமிக்கப்பட்டார். 

அவரது முன்னிலையில் மூன்று பேர் கொண்ட டாக்டர்கள், கார்த்திக்கின் உடலை ஒன்றரை மணி நேரம் பிரேத பரிசோதனை செய்தனர். இதன்பிறகு அவரது உடல் நேற்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மீன்கார்த்திக், எப்படி இறந்தார் என்பதில் போலீஸார் ரகசியம் காத்தனர். அவரை எதற்காக விசாரணைக்கு அழைத்தோம் என்று கூட தெரிவிக்க போலீஸார் தயங்கினர். அவரது உடலை வைத்த அரசு மருத்துவமனை குறித்த விவரத்தை கூட உறவினர்களுக்குச் சொல்லவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், கார்த்திக் இறப்பு குறித்த விவரத்தை அவரது நண்பர்கள் சிலர் நேரில் பார்த்ததாக தெரிவித்தனர். அவர்களைச் சந்தித்துப் பேசினோம். பெயரைக் குறிப்பிட வேண்டாம் என்ற நிபந்தையுடன் பேசினர்.

"கண்ணகி நகர் பகுதியில 19ஆம் தேதி ரெண்டு பசங்க (கார்த்திக், அருணாச்சலம்) மெரேஜ்க்குப் போனாங்க. நைட் வீட்டுக்கு வரல. கண்ணகி  நகர் இன்ஸ்பெக்டருக்கு கார்த்திக் அப்பா போன் போட்டாரு. அப்போ இன்ஸ்பெக்டரு, கார்த்திக் இல்லன்னு சொல்லிட்டாரு. ஆனா நாங்க திரும்ப, திரும்ப போன் அடிச்சதும், கார்த்தி இருப்பதா சொன்னதோடு காலையில வரச்சொன்னாரு. அங்கு போனப்ப இங்கு இல்லன்னனு மீண்டும் சொன்னாரு. செம்மஞ்சேரி, நீலாங்கரை ஸ்டேசனுக்குப் போகச் சொன்னாங்க. கண்ணகி நகர் ஸ்டேசனில பார்த்தப்போ கார்த்திக்கையும், அருணாச்சலத்தையும் தலைகீழ கட்டி தொங்க விட்டு இருந்தாங்க. அதைப்பார்த்த என்னை கூட அடிச்சாங்க. போலீசு  சிந்தாரிப்பேட்டையை சேர்ந்த ஒருத்தருடைய கட்டை விரல எடுத்து இருக்காங்க. கார்த்தி, செத்த நியூஸ் கூட சொல்லல. போஸ்ட் மாட்டம் அனுப்பின பிறகுதான் சொன்னாங்க.

 

 

வழிப்பறி சம்பவத்தில ஈடுபட்டது கார்த்தி, அருணாச்சலம் இல்ல. அருணாச்சலம் ஹெர் டை அடிச்சிருப்பான். ஆனால அந்த வீடியோல இருக்கறது அவன் இல்ல. கல்யாண மாப்பிள்ள கூட கார்த்தி, அருணாச்சலம் திருமணத்துக்கு வந்ததை போலீசுக்கிட்ட சொல்லி இருக்கான். வெளிய வந்தா உண்மைய சொல்லிடுவானுன்னு ஜெயில்ல அருணாச்சலத்த அடைச்சிருங்காங்க. வீடியோல இருக்கிறது அவனுங்க இல்ல. அதை கன்பார்ம் பண்ணினா தூக்குத் தண்டனை கூட கொடுக்கச் சொல்லுங்க" என்றனர் கண்ணீருடன்.

நமது நிருபர்

எடிட்டர் சாய்ஸ்