Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

விரைவில் நலம் பெறுவீர்கள்..! முதல்வர் ஜெயலலிதாவுக்கு கருணாநிதி வாழ்த்து

''முதலமைச்சர் ஜெயலலிதா மீது கொள்கை அளவில் நான் வேறுபட்டாலும், அவர்கள் விரைவில் உடல் நலம் பெற்று, பணியினைத் தொடர வேண்டுமென்று வாழ்த்துகிறேன்'' என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

முதல்வர் ஜெயலலிதாவுக்கு நேற்றிரவு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே, முதல்வர் ஜெயலலிதாவுக்கு காய்ச்சல் குணமடைந்து விட்டதாகவும், இருப்பினும் அவர் தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்து வருகிறார் என்றும் மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. 

முதல்வர் ஜெயலலிதா நலம் பெற வேண்டி பிரதமர் நரேந்திர மோடி, தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ், தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர். மேலும், அதிமுகவினர் கோயில்கள், மசூதிகளில் சிறப்பு பிரார்த்தனை நடத்தினர். இந்த நிலையில், முதல்வர் ஜெயலலிதா நலம் பெற திமுக தலைவர் கருணாநிதி வாழ்த்து தெரிவத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "முதலமைச்சர் ஜெயலலிதா மீது கொள்கை அளவில் நான் வேறுபட்டாலும், அவர்கள் விரைவில் உடல் நலம் பெற்று, பணியினைத் தொடர வேண்டுமென்று வாழ்த்துகிறேன். முதலமைச்சர், ஜெயலலிதாவின் உடல் நிலை பற்றி பல்வேறு விதமான செய்திகள் வந்து கொண்டே உள்ளன. முதலமைச்சர் ஜெயலலிதா மீது கொள்கை அளவில் நான் வேறுபட்டாலும், அவர்கள் விரைவில் உடல் நலம் பெற்று, பணியினைத் தொடர வேண்டுமென்று வாழ்த்துகிறேன்" என்று கூறியுள்ளார்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

MUST READ