Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஜெயலலிதாவை வாட்டும் புரட்டாசி ராசி!

துணிச்சல்மிக்க பெண்ணாகவே நான் வளர்ந்து வந்தேன். எதையும் எதிர்த்து போராடும் மனதைரியம் எனக்கு சிறுவயதில் இருந்தே இருந்தது” இது வெவ்வேறு தருணங்களில் ஜெயலலிதாவால் சொல்லபட்ட வார்த்தைகள்.

“புரட்சித் தலைவி” என்று தனது கட்சியினர் சொல்லுவதை விரும்பிய ஜெயலலிதாவை புரட்டி எடுக்கும் மாதமாக அவரை அச்சுறுத்தி வருகிறது புரட்டாசி மாதம். ஜாதகத்தையும் அதற்கான பலன்களையும் கண்மூடித்தனமாக நம்புபவர் ஜெயலலிதா. அந்த நம்பிக்கையால் தான் புரட்டாசி மாதம் வந்தாலே அலாட் ஆகிவிடுவாராம்.


புரட்டாசி வந்தால் ஜெயலலிதாவிற்கு என்னதான் பிரச்சனை என்று அ.தி.மு.கவிற்கு நெருக்கமான ஜோதிடர்கள் சிலரிடம் விசாரித்தோம். “ ஜெயலலிதாவின் ஜாதகத்தில் சூரியன் தான் தைரிய வீரிய ஸ்தானத்தின் அதிபதி. மாசி மாதத்தில் ஜெயலலிதா பிறந்ததால் , அப்போது சூரியன் கும்பத்தில் இருக்கும். புரட்டாசி மாதம், மாசி மாதத்திற்கு எட்டாவது மாதம் என்பதால், சூரியன் புரட்டாசி மாதம் எட்டாம் இடத்திற்கு வந்துவிடும்.அது இவருக்கு நல்லதல்ல. எட்டாம் இடம் இவருக்கு பாதகமான இடம் என்பதால், உடல் ரீதியாகவும், அரசாங்கத்தில் சிக்கலும் இவருக்கு ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

ஒவ்வொரு ஆண்டு புரட்டாசி மாதமும், ஜெயலலிதாவிற்கு ஏதாவது ஒருவகையில் சிக்கலை தான் ஏற்படுத்தும். 2001 ம் ஆண்டு முதல்வர் பதவி விலகியதும் இதே புரட்டாசி மாதம்தான், பெங்களுர் சிறைக்கு சென்றதும் இதே புரட்டாசி மாதம்தான். இதே போல் பல சிக்கல்கள் அவருக்கு ஏற்பட்டது பெரும்பாலும் இந்த புரட்டாசி மாதம்தான். இந்த மாதத்தில் அவருடைய தைரியமும் குறைந்து விடும்.

இந்த ஆண்டு வரும் 24-ம் தேதி முதல் ஒரு மாதத்திற்கு ஜெயலலிதாவிற்கு சிரமத்திசையாக தான் இருக்கும். நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து, அரசாங்கத்தை தள்ளிவைத்துப் பார்க்க வேண்டிய நிலை தான் இருக்கும். இது அவருக்கும் தெரியும் என்பதால், இந்த மாதம் கடந்து போகும் வரை இவர் மிக ஜாக்கிரதையாக இருப்பார்” என்கிறார்கள்.


இந்த புரட்டாசி ரகசியம் மத்திய அரசுக்கும், உச்சநீதிமன்றத்திற்கும் தெரியுமோ... தெரியாதோ, ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு மீதான வழக்கின் தீர்ப்பும் இந்த புரட்டாசி மாதத்திலே வந்துவிடும் என்ற கிலியை வேறு கிளப்புகிறார்கள். இந்த தகவல் தான் ஜெயலலிதாவிற்கு இப்போது பெரிய மனஅழுத்ததை ஏற்படுத்தியுள்ளதாம்.

- அ.சையது அபுதாஹிர்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

MUST READ