Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அப்போலோவுக்கு முன்னால்

கடந்த 21-ம்தேதி  மெட்ரோ ரயில் காணொலியை திறந்து வைத்த போதே முதல்வருக்கு சுகவீனம், சோர்வாக காணப்பட்டார். மெட்ரோ நிகழ்ச்சிக்கு அடுத்தபடியாக அதே காணொலி காட்சி வழியாக அம்மா உணவகங்கள் பலவற்றை திறந்து வைக்க திட்டமிட்டு இருந்தனர். உடல்நிலையை கருத்தில் கொண்டு அந்நிகழ்ச்சியை தவிர்த்து விட்டார், முதல்வர் அன்றிரவு ஓய்வுக்கு  பிறகு 22 ம் காலை கார்டனில்  மகிழ்ச்சியாக பேசிக்கொண்டு இருந்தார். 23-ம்தேதி காலை ஜெயலலிதா, சசிகலா, டாக்டர் சிவகுமார் குடும்பத்தினர் அனைவரும் கொடநாடு செல்லும் திட்டத்தை ரகசியமாக திட்டமிட்டு வந்தனர்.  அதற்கு முன்பாக சென்னையில் உள்ள அவசர பணிகளை முடித்துவிடும் திட்டத்தில் ஜெயலலிதா, சசிகலா இருவரும் போயஸ் கார்டனில் செயல்படுத்தி வந்தனர்.

செப்-22-ம்தேதி இரவு எட்டு மணிக்கு முதல்வரின் போயஸ் கார்டனில் பணியாற்றும் முக்கியபுள்ளிகள் வழக்கம்போல் வீட்டுக்குச் சென்று விட்டனர். ஜெயலலிதா உடல்நிலையை சமீபகாலத்தில் கவனித்துவரும் சசிகலாவின் அண்ணன் மாப்பிள்ளையும் பிரபல டாக்டர்  சிவகுமார் சபரிமலைக்கு சென்றுவிட்டு, வீட்டில் ரெஸ்ட்டில் இருந்தார். இந்த நிலையில், ஜெயலலிதாவின் உடல்நிலை சரியில்லாததை கேள்விப்பட்ட சிவக்குமாரின் மகன் டாக்டர் கார்த்தி போயஸ் கார்டன் சென்று முதல்வரை பார்த்தார்  உடல்நலம் குறித்து விசாரித்து இருக்கிறார். அப்போது மெட்ரோ நிகழ்ச்சியின் போது உடலில் ஏற்பட்ட சோர்வை கார்த்திக்கிடம் விளக்கி இருக்கிறார் ஜெயலலிதா. இரவு 9-மணிக்கு மேல் இருக்கும் காய்ச்சலின் வேகம் அதிகரிக்க ஆரம்பித்து இருக்கிறது. ஜெயலிதாவின் முகச்சோர்வை கண்டு சுதாரித்துக் கொண்ட சசிகலா, கார்த்திக் இருவரும் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லும் முடிவுக்கு வந்தனர்.

கார்த்தியின் வாயிலாகத்தான் முதலில் ஆஸ்பத்திரிக்கு தகவல்வர அப்பல்லோ அலார்ட்டானது.  இரவு 10-30 மணிக்கு முதல்வரை அப்பல்லோவில் அட்மிட் செய்து இருக்கிறார், கார்த்திக். அடுத்து  சபரிமலையில் இருந்து திரும்பி வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டு இருந்த அப்பா டாக்டர் சிவகுமாருக்கு ஜெ உடல்நிலை குறித்த தகவலை பதற்றமாகச் சொல்லி இருக்கிறார். சிவகுமார் உடனே தனது மனைவி பிரபாவதியை அழைத்துக் கொண்டு அப்பல்லோ விரைந்தார். அப்போலோ ஆஸ்பத்திரியில் இருந்தபடியே, ஜெயலலிதாவுக்கு தரப்படும் சிகிச்சையை கவனித்து வருகிறார்.

- சத்யாபதி  

எடிட்டர் சாய்ஸ்

MUST READ