Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மருத்துவமனையில் ஜெயலலிதா: பதறிய தொண்டர்கள் (வீடியோ)

பரபர டிராஃபிக்கிற்கு பெயர் போன அண்ணா சாலை - கிரீம்ஸ் ரோடு சந்திப்பு காக்கி முதல் கதர் சட்டைகளின் படையெடுப்பால் விழி பிதுங்கி கொண்டிருந்தது.

தமிழ்நாட்டினுடைய அரை நூற்றாண்டு ‘தலைப்பு செய்தி’ உடல்நிலை காரணமாக அப்போலோவில் அனுமதிக்கப்பட்ட செய்தி நள்ளிரவில் பரவ ஆரம்பித்ததிலிருந்துதான் இந்த பரபரப்பு.

ஊடக நிபுணர்கள் முதல் அ.தி.மு.க அரசியல் பெருந்தலைகள் வரை அப்போலோவின் வாயிலில் மையம் கொண்டிருந்தனர். பேரிகேட் வளையத்தில் கட்டுக்குள் அவர்களை வைக்க காக்கி சட்டை நனைய காப்பு கட்டிக்கொண்டிருந்தனர் காவல்துறையினர்.

ஜெ.,வை பார்த்ததாகவும், ‘அம்மா நலம்’ என்ற வார்த்தையை மட்டுமே கழக கண்மணிகள், ரத்தத்தின் ரத்தங்களும் டி.வி. மைக்குகளுக்கு உதிர்த்த வண்ணம் இருந்தனர்.

ஜெயலலிதாவுக்கு காய்ச்சல் என்பதுதான் செய்தி.. ஆனால் தமிழகம் முழுவதும் அது கிளப்பிய அதிர்வும், தொண்டர்களின் பரிதவிப்பும், எதிர்கட்சிகளையே அவசரகதியில் வாழ்த்து அறிக்கை விட வைத்திருக்கிறது. ஜெ., என்கிற ஒரு ஆளுமையின் தாக்கத்தை உணர்த்துகிறது இந்த வீடியோ!

 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close