Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

உள்ளாட்சி அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு..! பாலகங்கா, சாருபாலாவுக்கு வாய்ப்பு; சைதை துரைசாமிக்கு கல்தா

தமிழக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் பட்டியலை கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ளார். சென்னை மாநகராட்சி 78வது வார்டில் பாலகங்காவும், திருச்சியில் 44வது வார்டில் சாருபாலா தொண்டைமானும் போட்டியிடுகின்றனர். சென்னை மேயர் சைதை துரைசாமிக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை.

சென்னை, வேலூர், சேலம், ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர், திருச்சி, தஞ்சாவூர், மதுரை, திண்டுக்கல், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி ஆகிய 12 மாநகராட்சிகளின் வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா இன்று வெளியிட்டார்.

12 மாநகராட்சிகளின் வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் விவரம்: க்ளிக் செய்க

 

192வது வார்டு கவுன்சிலராக இருந்த எம்சி முனுசாமி, கடந்த சட்டப்பேரவை தேர்தலில் வேளச்சேரி தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். தற்போது, அதே வார்டில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். சோழிங்கநல்லூர் சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடந்த லியோ என்.சுந்தரம், 197வது வார்டு வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். கொளத்தூர் சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட்டு திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினிடம் தோல்வி அடைந்த ஜே.சி.டி.பிரபாகர் 80வது வார்டு வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். ஆலந்தூர் இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வி.என்.வெங்கட்ராமன் வாய்ப்பு கொடுக்கப்பட்டு எம்எல்ஏ ஆனார். ஆனால், நடந்து முடிந்த சட்டப்பேரவையில் தேர்தலில் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. தற்போது கவுன்சிலராக 166வது வார்டில் போட்டியிடுகிறார். முன்னாள் எம்எல்ஏ கந்தன் 184வது வார்டில் போட்டியிடுகிறார்.

1வது வார்டு எழில் அரசிக்கும், 2வது வார்டு செல்வத்துக்கும், 4வது வார்டு சரவணனுக்கும், 38வது வார்டு சந்தானத்துக்கும், 60வது வார்டு சீமா பஷீருக்கும், 70வது வார்டு ஜெயஸ்ரீ மகேஷூக்கும், 73வது வார்டு சுகுமாருக்கும், 95வது வார்டு பாத்திமாவுக்கும், 99வது வார்டு பரணிக்கும், 127வது வார்டு மலைராஜனுக்கும், 146வது வார்டு ஜீவானந்தனுக்கும், 148வது வார்டு எம்.கே.குமாருக்கும், 156வது வார்டு கோவிந்தராஜிக்கும், 157வது வார்டு எம்.பாண்டியனுக்கும், 163வது வார்டு வி.கோபாலகிருஷ்ணனுக்கும், 165வது வார்டு நரேஷ்குமாருக்கும், 167வது வார்டு ஹேமாபரணி பிரசாத்துக்கும், 171வது வார்டு எம்.எம்.பாபுக்கும், 174வது வார்டு மோகனுக்கும், 177வது வார்டு எஸ்.சரவணனுக்கும், 178வது வார்டு வேளச்சேரி மூர்த்திக்கும், 180வது வார்டு பார்வதி ஜோதிக்கும், 186வது வார்டு ஜானகிராமனுக்கும், 187வது வார்டு உமா தியாகராஜனுக்கும், 188வது வார்டு பொன்னுசாமிக்கும், 195வது வார்டு பூர்ணிமா பாஸ்கருக்கும் மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் விவரம்: க்ளிக் செய்க..

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close