Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சடலத்தின் மீது படுத்து உறங்கிய போதை ஆசாமி..! கதிகலங்கிய காட்பாடி

குடிபோதையில் இருந்த வாலிபர் ஒருவர்,ஒரு வயதான பெண்மணியின் சடலம் மீது படுத்து உறங்கிய  சம்பவம் காட்பாடி அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

வேலூர் மாவட்டம், காட்பாடியை அடுத்த மான்குட்டை பகுதியில் உள்ள பஸ் ஸ்டாப் அருகே அரைநிர்வாணமாக ஒரு வாலிபர் குடிபோதையில் படுத்திருந்தார். போதையில் உளறியபடி இருந்த அவரிடம், அந்த வழியாக சென்றவர்கள் அருகில் சென்றனர். அப்போது, பொது மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். மூதாட்டியின் மீது போதை ஆசாமி அரை நிர்வாணத்தில் படுத்திருந்தது தெரியவந்தது. உடனடியாக பொது மக்கள் போதை ஆசாமியை பிடித்து லத்தேரி பனமடங்கி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இந்த சம்பவத்தில் மூதாட்டி இறந்திருந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் போலீஸாரும் அங்கு வந்து விசாரித்தனர். மூதாட்டியின் மீது படுத்திருந்த போதை ஆசாமியின் பெயர் ராமமூர்த்தி (24), கூலி வேலை செய்வதும் தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் ராமமூர்த்தியை கைது செய்தனர்.

இதற்கிடையில் மூதாட்டியின் பெயர் காந்தம்மாள் (75) என்றும் தெரிந்தது. அவர், அந்த பஸ் ஸ்டாப்பிலேயே தங்கியிருந்ததாகவும் பொது மக்கள் தெரிவித்தனர். காந்தம்மாளின் உடல் வேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அவர், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாரா என்றும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

இதுகுறித்து அந்தப்பகுதி பொது மக்கள் கூறுகையில், "காந்தம்மாள் குறித்த விவரங்கள் எங்களுக்குத் தெரியாது. ஆனால் இந்த பஸ் ஸ்டாப்பிலேயே பல மாதங்களாக தங்கியிருந்தார். ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதி அது. நேற்றிரவுதான் இந்த சம்பவம் நடந்துள்ளது. அவ்வழியாக வந்த ராமமூர்த்தி, போதையில் காந்தம்மாளிடம் தவறாக நடந்திருக்கலாம் என்ற சந்தேகமும் உள்ளது. நாங்கள் பார்த்த போது ராமமூர்த்தி அரைநிர்வாணமாக கிடந்தார். அதே நிலையில் காந்தம்மாளும் இருந்தார். காந்தம்மாள் இறந்தது கூட தெரியாமல் விடியும் வரை அவர் மீதே ராமமூர்த்தி படுத்து உறங்கியுள்ளார். பொது மக்கள் பார்த்து போலீசுக்கு தகவல் தெரிவித்த பிறகுதான் காந்தம்மாள் இறந்த சம்பவம் தெரிந்தது. காலையில் கூட ராமமூர்த்திக்கு போதை முழுமையாக தெரியவில்லை. " என்றனர். 

எஸ்.மகேஷ்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ