Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ராம்குமார் சடலத்துக்கு ஆபத்து... மருத்துவரின் எச்சரிக்கை!

                                     

                                    

மென்பொறியாளர் சுவாதி கொலை வழக்கில் கைதாகி சென்னை மத்திய புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமார், கடந்த 18- ம் தேதி பிற்பகல் மர்மமான முறையில் இறந்தார். ‘சிறையில் ராம்குமார் தற்கொலைக்கு முயன்றார், ஆனால் அவரைக் காப்பாற்ற முடியவில்லை. மருத்துவமனைக்கு அவரைக் கொண்டுவரும் வழியில் அவர் இறந்துவிட்டார்’ என்று சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

செப்டம்பர் 18-ம் தேதி மாலை முதல் ராம்குமாரின் உடல் அரசு ராயப்பேட்டை சவக்கிடங்கில் உடற்கூறு ஆய்வுக்காக வைக்கப்பட்டிருக்கிறது.நெல்லையில் இருந்து ராம்குமாரின் பெற்றோர் வந்த பின்னரே போஸ்ட் மார்ட்டம் என்று முதல் ஒரு நாள் தாமதித்த உடற்கூறு ஆய்வு விவகாரம், இன்றோடு (27.9.2016) 10-வது நாளாக இழுபறியில் போய்க்கொண்டிருக்கிறது.

ராம்குமாரின் தந்தை பரமசிவன், “அரசு மருத்துவரோடு நாங்கள் சொல்லும் தனியார் மருத்துவமனை மருத்துவர் ஒருவரையும் உடற்கூறு ஆய்வுக்கு அனுமதிக்க வேண்டும்” என்று உறுதிகாட்டவே, பல அமர்வுகளில் ராம்குமாரின் உடற்கூறு ஆய்வு குறித்த முடிவு போய்விட்டது.

இரண்டாயிரம் உடல்களுக்கு மேல் உடற்கூறு ஆய்வுசெய்துள்ள பிரபல உடற்கூறு ஆய்வு நிபுணர் டாக்டர் டிகாலிடம் பேசினோம்.

‘’10 நாட்களாகிவிட்டன. இதனால் ராம்குமாரின் உடலில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்படும் சாத்தியம் இருக்கிறதா?’’ 

“மனித உடலை, சவக்கிடங்கில் வைத்துப் பாதுகாக்கும்போது தொடர்ந்து 4 டிகிரியில் உடலை மெய்ன்டெய்ன் செய்துகொண்டே இருக்க வேண்டும். அப்படிச் செய்தால், 100 நாட்கள் ஆனாலும் உடலின் தன்மை மாறாது. ‘கோல்டு ஸ்டோரேஜ்’ எனப்படும் டிகிரி விஷயத்தில் 6, 10, 12 என்று போகப்போக ரிப்போர்ட்டில் ஒரு விஷயம் தப்பாகத் தெரியும், ஒரு விஷயம் மறைந்துபோகும்.’’

‘’தனக்குத் தெரிந்த ஒரு டாக்டர், உடற்கூறு ஆய்வின்போது உடனிருந்தால் நமக்கு நல்லது என பாதிக்கப்பட்டவர் நினைப்பதில் என்ன தவறு?’’

விழுப்புரம், தனியார் கல்லூரி விடுதியில் இறந்த பெண்களின் மரணத்தில், அவர்களின் பெற்றோர் சந்தேகத்தை தீர்த்துவைக்க முன்வருகிறார்கள்...

‘’தமிழ்நாடே சந்தேகப்படும் ராம்குமார் வழக்கில், அந்த உடற்கூறு ஆய்வுக்கு தனியார் மருத்துவரை உள்ளேவிடாமல் தடுப்பது எந்த வகை நியாயம்? இவர்களின் மறுப்பு ராம்குமார் மரணத்தில் சந்தேகத்தை மேலும் அதிகப்படுத்துகிறதல்லவா?’’

‘’ராம்குமார் வாயின் உட்பகுதிக்குள் மின்கம்பியை அழுத்திக் கடித்திருந்தாலும், கால் வழியாக மின்சாரம் கடத்தப்பட்டிருக்க வேண்டும். அந்த இடத்தில் காயம் கட்டாயம் ஏற்படும். மின் கம்பியைக் கடிக்கும்போது புண் ஏற்படுவதற்குக் காரணம், உடலின் உள்ளே மின்சாரம் பாயும்போது, தோல் அதைத் தடுக்கும் வேலையில் ஈடுபடும்.

தற்கொலையும், கொலையான ஒரு வழக்கும்!

சென்னை அண்ணா நகர் ரேவதி, மின்சாரத்தை உடலில் பாய்ச்சி தற்கொலை செய்துகொண்டதாகக் கூறி, பி.எம். செய்வதற்காக உடலைக் கொண்டு வந்திருந்தனர். அது தற்கொலைதான் என்று ஒரு டாக்டர், பி.எம். ரிப்போர்ட்டில் தெரிவித்தார். நான் அதைச் சோதித்தபோது, ரேவதியின் கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டு ‘ஷாக்’ கொடுத்திருப்பதைக் கண்டுபிடித்தேன். ரேவதியின் மரணம் தற்கொலைதான் என்று முதலில் சான்று கொடுத்தவரும் அரசு மருத்துவர்தான்.’’

‘’அரசு - தனியார் மருத்துவர்கள் என்ற பாகுபாடு ஏன்?’’

‘’பிரைவேட், கவர்மென்ட் என ஏன் இவர்கள் பாகுபாடு பார்க்கிறார்கள்? கர்நாடகாவில் இப்போதுதான் அரசின் 20 மெடிக்கல் காலேஜ்கள் உள்ளன. பத்தாண்டுகளுக்கு முன் நான்கு மெடிக்கல் காலேஜ்கள்தான் இருந்தன. ஆனால், அன்றே கர்நாடகாவில் 36 பிரைவேட் மெடிக்கல் காலேஜ்கள் இருந்தன. இன்று அதுவே 47 ஆக இருக்கிறது. அனைத்திலும் பி எம். (போஸ்ட் மார்ட்டம்) நடக்கிறது. மேக்ஸிமம் பி.எம்-களை பிரைவேட் காலேஜ்தான் செய்கிறது. இன்று 15 கவர்மென்ட் காலேஜ்களில் பி.எம். செய்யப்படுகிறது.

ரேப் கேஸ், வெட்டு, குத்து, விபத்து அனைத்தும் பிரைவேட் டாக்டர்ஸ் பார்க்கலாம். ஆனால் பி.எம். மட்டும் பிரைவேட் டாக்டர்ஸ் பார்க்கக் கூடாதாம், இது தமிழ்நாட்டில் மட்டும் சொல்லப்படும் நியாயம்? ஏன் இந்தக் குழப்பம், பயம்? மற்ற் மாநிலங்களில் இப்படிப் பயப்படவில்லையே... ஆரோக்கியமற்ற இந்தப்[ போக்கு தமிழ்நாட்டில் மட்டும்தானே நடக்கிறது. 20 கவர்மென்ட்ஸ்’ ஆஸ்பிட்டல்களில் பி.எம். செய்ய 30 டாக்டர்ஸ்கூட இல்லை. அதேவேளையில் 22 பிரைவேட் ஆஸ்பிட்டல்களில் 65 டாக்டர்களை வெட்டியாக உட்காரவைத்து சம்பளம் கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.

எங்களைப் பயன்படுத்த ஏன் தயக்கம்?

எம்.பி.பி.எஸ் படிச்சவங்களை வெச்சு பி.எம். பண்றீங்க. நாங்க ஹெல்த் செகரட்டரிக்கு லெட்டர் அனுப்பிக்கிட்டேதான் இருக்கோம். எங்களைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள் என்று... ஆனால், யாரும் கேட்பதில்லை. சிறீபெரும்புதூர், திருவள்ளூர் என்று பல அரசு மருத்துவமனைகளின் போஸ்ட் மார்ட்டம் டாக்டர்கள் எங்களைப் போன்ற தனியார் எக்ஸ்பர்ட்டிடம் கேட்டுக் கேட்டுக் கத்தரியைவைக்கிற போஸ்ட் மார்ட்டம்தானே இன்று நடந்துகொண்டிருக்கிறது. அதற்கு நாங்களே வந்து நல்லபடியாக செய்து கொடுப்போமே?


ராமச்சந்திரா ஆஸ்பிட்டலில் 27 வருடங்களாக பி.எம். செய்யலையா? அவங்க கோர்ட்களுக்குப் போகலையா... மொத்தத்தில் நீதித்துறையோ, அரசுத் துறையோ அங்கே ஒளிவுமறைவற்ற வெளிப்படைத் தன்மை வேணும்.பத்திரிகையாளர்கள் எச்சரிக்கையாக இருந்து இதுபோன்ற விஷயங்களை வெளிக்கொண்டு வரவேண்டும். பல வழக்குகளில், நியாயங்கள் இல்லாமலே போய் விடுகிறது.

உறவினர்களுக்குக் கேட்கும் உரிமை இருக்கிறது!

 

ஒரு பி.எம். ரிப்போர்ட்டில் ஹேங்கிங் (தூக்குப் போட்டு) என்று வருகிறது, அந்த உடலுக்கு உரிய உறவுமுறை ‘இந்த மரணத்தில் எனக்கு சந்தேகம் இருக்கிறது’ என்று புகார் சொன்னால் அதை ஏற்று மறு போஸ்ட் மார்ட்டமோ, அவர்களின் சந்தேகத்தைப் போக்க அவர்கள் கேட்கும் தனக்குத் தெரிந்த தனியார் மருத்துவர் ஒருவரோ நியமிப்பதில் என்ன தவறு?


எத்தனை கேஸ்களில் இப்படி நியாயம் கேட்டுக்கேட்டு ஓய்ந்துபோய் அமைதியாகிவிடுகிறது உண்மை. வீடியோ எடுக்காமலே போஸ்ட் மார்ட்டம் செய்கிறார்கள். ‘ஒரு டாக்டர் தப்பு செய்துட்டாருன்னு’ புலம்பும் புலம்பல்தானே அந்த உடல் மறு பி.எம்-முக்குப் போகுது? அதை அங்கேயே இருக்கும் ஓர் அரசு டாக்டர் எப்படி மாத்திக் கொடுப்பார்?


அரசு டாக்டர் இரண்டு பேரைப் போடுகிறீர்கள். பாதிக்கப்பட்டவர்களின் சந்தேகத்தைப் போக்கும்விதமாக அவர்களுக்குத் தெரிந்த அவர்கள் கேட்கும் ஒரு பிரைவேட் டாக்டரை அவங்க கேட்டபடி போடுவதில் எது தடுக்கிறது? இது ஒரு ஸ்டேஷன் போலீஸ் இன்ஸ்பெக்டர் அளவிலேயே முடியக் கூடிய விஷயம். இதற்கு கோர்ட் வரை சுற்றலில்விடுவது மிகப் பெரிய அநியாயம்.

வரதட்சணைக் கொடுமை வழக்குகளிலும் இதே நிலைதான்!

முதலில் இருந்தே நீ திருடன், திருடன்னு பாதிக்கப்பட்டவன் சொல்கிறான், பாக்கெட்டைத் திறந்து காட்டிடு, போயிடப்போறான். நீ ஏன் மறைக்கிறாய்? வரதட்சணைக் கொடுமை புகார்களில், ‘டவுரி டெத்’ என்று ஒரு வரியில் கதையை முடித்துவிடுகிறார்கள். ‘என் பொண்ணைக் கொன்று தூக்கில்மாட்டிட்டான், ஸ்டவ்வை வெடிக்கவைத்துக் கொன்றுவிட்டான்... பாவி, படு பாவின்னு’ அழுகிற எத்தனை பெற்றோர்களின் துயரத்தை அரசுகள் காது கொடுத்துக் கேட்கின்றன?


‘அய்யா என் மக தலையில் ரத்தம் கசிஞ்சு கிடக்குது... பின் மண்டை வீங்கியிருக்குது. அடிச்சு உதைக்கிறான்னு போன்ல அழுதா, நான் பத்து நிமிஷத்துக்குள்ளே அவங்க வீட்டுக்குப் போயிட்டேன். என் பொண்ணை அதுக்குள்ள அடிச்சு தூக்குல தொங்க விட்டுட்டான்’ என்று அழுத கேஸ்கள் நான் பார்த்த வரையில் பல ஆயிரத்தைத் தாண்டிவிட்டன. இப்படிக் கதறும் பெற்றவர்களின் சந்தேகத்தை என்றாவது தீர்த்துவைத்துள்ளீர்களா?


கல்லூரிகளில், பொது இடங்களில், ஊர்களில், தோப்புகளில் நடந்த பல உயிர்பறிப்பு சம்பவ வழக்குகளில் பாதிக்கப்பட்டவர் சொல்கிற மருத்துவர்களை நியமித்து ஐகோர்ட் ஆர்டர் கொடுத்திருக்கிறது... ராம்குமார் மரணம் முழுக்க, முழுக்க சிறைக்குள் நடந்திருக்கும் விஷயம்...’’


- ந.பா.சேதுராமன்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

சமூக வலைதளத்தில் எதிரிகளை தாங்களே உருவாக்குகிறார்களா ட்ரம்ப்பும், மோடியும்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close